லோகேஷ் படம் தான் ரஜினிக்கு கடைசி… ஆனால் அதற்கு முன்பு ரஜினி திட்டம் இது தான்…

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்தே, சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான அண்ணாத்தே படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது, ஆனால் படம் தோல்வியை சந்தித்து அந்த படத்தின் தயாரிப்பாளரான சன் பிச்சருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி தந்தது. இதனை தொடர்ந்து தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்வதற்காக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ரஜினிகாந்த் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக மீண்டும் ஒரு படம் அதே தயாரிப்பு நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுக்க ரஜினிகாந்த் முன் வந்தார்.

இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ரஜினிகாந்த் உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைவேளை விட்டு, இடைவேளை விட்டு ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் ரஜினிகாந்த்,

அந்த வகையில் லோகேஷ் கனகராஜை நேரில் அழைத்த ரஜினிகாந்த், நம்ம ஒரு படம் பண்ணலாம் ஒரு கதை ரெடி பண்ணுங்க என ரஜினி தெரிவித்துள்ளார், அதற்கு லோகேஷ் கனகராஜ் தற்பொழுது விஜய் நடிக்கும் லியோ படத்தை முடித்துவிட்டு, கைதி 2, அதை முடித்துவிட்டு கமல் சார் உடன் ஒரு படம் என தனக்கு அடுத்தடுத்து கமிட் மென்ட் இருப்பதால் இப்போதைக்கு நம்ம சேர்ந்து படம் பண்ணுவதற்கு வாய்ப்பு இல்லை என ரஜினியிடம் நேரடியாக தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

லோகேஷ் கனகராஜை கன்வின்ஸ் செய்ய முயன்ற ரஜினிகாந்த் ஒரு கட்டத்தில் தன்னுடைய படத்தை இயக்க 30 கோடி சம்பளம் என மிக பெரிய தொகையை தெரிவித்துள்ளார் ரஜினி. மேலும் இது தான் என்னுடைய கடைசி படம், அதனால் என்னுடைய கடைசி படம் மிக பெரிய வெற்றி படமாக இருக்க வேண்டும் என்பதற்காக உங்கள் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன் என ரஜினி தெரிவிக்க, அதற்கு அதற்கு லோகேஷ் கனகராஜ் யோசித்து சொல்கிறேன் என எந்த ஒரு உறுதியான தகவலும் தெரிவிக்காமல் விடைபெற்றுள்ளார்

இந்த நிலையில் காஷ்மீரில் லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்து திரும்பியுள்ள லோகேஷ் கனகராஜை நேரில் அழைத்து பேசிய ரஜினிகாந்த், ஏற்கனவே பேசிய புதிய படம் குறித்த ஆலோசனை நடத்தியுள்ளார், இதில் சுமுக முடிவு எட்டப்பட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது ஆனால் ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு உடனே லோகேஷ் படத்தில் ரஜினி நடிக்கவில்லை.

அதற்கு முன்பு ஒரு படத்தை நடித்துவிட்டு தான் அடுத்து லோகேஷ் படத்துக்கு செல்ல இருக்கிறார், அந்த வகையில், சமீபத்தில் வாரிசு பட தயாரிப்பாளர் தில்ராஜ் ரஜினியை சந்தித்து அடுத்த படத்திக்கான கால் சீட் கேட்டுள்ளார், பிரபல தெலுங்கு பட இயக்குனர் ஒருவர் இயக்கத்தில் ஏற்கனவே தெலுங்கில் செம்ம ஹிட் அடித்த தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்ல் ரஜினி நடிக்க கால் சீட் கேட்டுள்ளார் தில் ராஜ், அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது, ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.