தமிழ் நடிகரால் தெருவுக்கு வந்த லிங்குசாமி.. தெலுங்கு நடிகரால் தலைமிர்ந்தது எப்படி தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக இருந்த லிங்குசாமி, ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார், முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது, குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைத்தது, அடுத்த படம் மாதவன், மீராஜாஸ்மின் நடிப்பில் வெளியான ரன் படத்தை இயக்கி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் இயக்குனராக பெயர் பெற்று, எடுத்த இரண்டே படத்தில் மிக பெரிய இயக்குனராக வலம் வந்தார் லிங்குசாமி.

இவருடைய இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி திரைப்படம் மிக பெரிய வெற்றியை கொடுத்தது, அதே போன்று பையா படம் நடிகர் கார்த்திக்குக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த படமாக இருந்தது. பையா படம் பல விருதுகளை வாங்கி குவித்தது, இப்படி உச்சத்தில் இருந்த இயக்குனர் லிங்குசாமி அவருடைய சகோதரர் திருப்பதி உடன் இணைந்து, திருப்பதி ப்ரதர்ஸ் என்கிற பெயரில் சொந்தமாக சினிமா தயாரிப்பில் ஈடுபட்டார்.

இவர்கள் தயாரிப்பில் வெளியான பையா,கும்கி, சதுரங்க வேட்டை போன்ற பல படங்கள் வெற்றியை கொடுத்து நல்ல லாபத்தையும் கொடுத்தது. தயாரிப்பு, இயக்குனர் என இரண்டு துறையிலும் வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த லிங்குசாமி சினிமா வாழ்க்கையில், நடிகர் சூர்யாவை நடிப்பில் தயாரித்து, இயக்கிய அஞ்சான் படத்தில் மிக பெரிய தோல்வியை சந்தித்து தன்னுடைய இயக்குனருக்கான மார்க்கெட்டை இழந்தார்.

அஞ்சான் படத்தில் நஷ்டம் ஏற்பட்டாலும் அடுத்தடுத்து படம் இயக்கவில்லை என்றாலும், தயாரிப்பு தொழிலை தொடர்ந்து செய்து வந்தார். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான உத்தம வில்லன் படத்தை தயாரித்த லிங்குசாமி, இந்த படம் ஏற்படுத்திய நஷ்டத்தினால் மிக பெரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானார், இதன் பின்பு ஒரு சில படங்கள் தயாரித்த லிங்கு சாமி பின்பு தயாரிப்பு தொழிலை விட்டுவிட்டார். இப்படி கமல் மற்றும் சூர்யா இருவரால் சினிமா வாழ்க்கையை தொலைத்து நாடு ரோட்டிற்கு வந்தார் லிங்குசாமி.

இதன் பின்பு சினிமாவில் தன்னை நிலைநிறுத்த மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்த லிங்குசாமி படத்தில் நடிக்க முன்னனி தமிழ் நடிகர்கள் யாரும் முன் வரவில்லை, இருந்தும் விஷால் நடிப்பில் சண்டக்கோழி 2 படம் எடுத்தார் அதுவும் தோல்வி. இதன் பின்பு தமிழ் சினிமா நடிகரை நம்பி மோசம் போனது போதும் என தெலுங்கு பக்கம் தனது பார்வையை திருப்பிய லிங்குசாமி, தெலுங்கு நடிகர் ராம் பொதினி நடிப்பில் தி வாரியர் படத்தை இயக்கினர்.

இந்த படம் தற்பொழுது திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது, மேலும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வரும் நிலையில், தெலுங்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் தமிழ் சினிமா ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடி வரும் நிலையில், தமிழ் நடிகரால் நடு தெருவுக்கு வந்த லிங்குசாமி, தெலுங்கு நடிகரால் மீண்டும் பழைய லிங்குசாமியாக உருவெடுத்துள்ளார் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது குறிப்பிடதக்கது.

அஜித் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விரட்டியடிப்பு… ஓவர் வாய்… என்ன பேசினார் தெரியுமா.?