நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இரண்டு வருடங்கள் தாமதத்திற்கு பின்பு வெளியானது வலிமை. இருந்தும் ரசிகரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மேலும் தயாரிப்பாளருக்கு சிறிய சேதாரத்தையும் ஏற்படுத்தி நஷ்டத்தை ஏற்படுத்திய படம் வலிமை. இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் போனி கபூர் நஷ்டத்தை சரி செய்வதற்காக மீண்டும் அவருடைய தயாரிப்பில் ஒரு படம் செய்து கொடுக்க முடிவு செய்தார் அஜித்.
அதே போன்று வலிமை படத்தின் தோல்வியால் தன்னுடைய விருப்பமான இயக்குனர் ஹெச்.வினோத் காணாமல் சினிமாவில் காணாமல் போய்விடு கூடாது என்பதற்காக, மீண்டும் அவருக்கு போனீங்க கபூர் தயாரிப்பில் தான் நடிக்கும் துணிவு படத்தில் இயக்குனர் வாய்ப்பை கொடுத்தார் அஜித் குமார். இந்நிலையில் துணிவு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படிப்பு படிப்பு அஜித் அல்லாத மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
விரைவில் அஜித் நடிக்கும் காட்சிகளும் படமாக்க பட உள்ளது. விஜய் நடிக்கும் வாரிசு படம் பொங்கல் அன்று வெளியாகும் அதே தேதியில் அஜித்தின் துணிவு படமும் வெளியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான வியாபாரத்தையும் தொடங்கியுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். ஆனால் துணிவு ஆக்ஷன் படம் என்பதால் இது இடம்பெற்றுள்ள பெரும்பாலான சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே ஹெச்.வினோத் இயக்கும் படங்களில் சண்டை காட்சி மிகப் பிரமாண்டமாக இருக்கும். அந்த வகையில் துணிவு படத்தின் சண்டைக் காட்சிகளில் அதிக இடங்களில் பறந்து பறந்து சண்டையிடும் காட்சிகளில் ரோப் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதனால் அந்த ரோப்பை அகற்றும் சிஜி ஒர்க் அதிகமாக இந்த படத்தில் இருப்பதால், அடுத்த மூன்று மாதத்திற்குள் அவசர அவசரமாக துணிவு படத்தின் வேலையை முடிக்க முடியாது.
மேலும் சில காலம் தேவைப்படும் என்று எச் வினோத் தெரிவித்துள்ளார். ஆனால் படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டது, பொங்கல் அன்று உறுதியாக வெளியிட்டாக வேண்டும் என்று தயாரிப்பு தரப்பிலும், மற்றும் விஜய்யின் வாரிசு படத்துடன் தன்னுடைய படம் இம்முறை முறை மோதியே ஆக வேண்டும் என்று அஜித்தும் உறுதியாக இருப்பதால், இயக்குனருக்கு அதிக அளவில் அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஹெச்.வினோத், முடிந்த அளவு முயற்சி செய்கிறேன், அதே நேரத்தில் பொறுமையாக பார்க்க வேண்டிய வேலையை அவசர அவசரமாக பார்த்து, துணிவு படம் ஏதேனும் தோல்வி அடைந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை என்று வெளிப்படையாக பேசி உள்ளார். மேலும் இந்த படத்தின் முக்கியத்துவமே இதில் இடம் பெறுகின்ற சண்டை காட்சிகள் தான்.
அதனால் எனக்கு அதிக நாட்கள் தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளார் ஹெச்.வினோத். இதனை தொடர்ந்து இந்த தகவல் அறிந்து அப்செட்டான அஜித்குமார். உடனே தயாரிப்பாளரிடம் இயக்குனருக்கு அதிகம் அழுத்தம் தரவேண்டாம், சில நாட்கள் எடுத்து கொள்ளட்டும், இந்த படத்தின் வேலைகள் தாமதமாவதால், ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கலாமா.? என்றும் அஜித் துணிவு படத்தின் தயாரிப்பாளரிடம் பேசி வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.