மனைவியுடன் வந்து அசிங்கப்பட்ட அட்லீ…! இதெல்லாம் ஒரு பொழப்பா காரி துப்பிய சினிமா வட்டாரம்..

0
Follow on Google News

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் சமீபத்தில் மஹாபலிபுரத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. அழைப்பிதழ் கொடுத்தவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு மிக குறுகிய பிரபலங்கள் மட்டுமே பங்குபெற்ற இந்த திருமணத்தில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியது. 300 அழைப்பிதழ் மட்டுமே, மிக முக்கியமானவர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலையில் கொடுக்கப்பட்ட அழைப்பிதல் ஸ்கேன் செய்யும் வகையில் வடிமைக்கப்பட்டிருந்தது.

போலியான அழைப்பிதழை தடுக்க இவ்வாறு செய்யப்பட்டது. அழைப்பிதழ் கொண்டு வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர், அதற்கு முன்பு அவர்கள் கொண்டு வந்த அழைப்பிதழ் ஸ்கேன் செய்யப்பட்டு போலி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் திருமணம் மண்டபத்திற்குள் உள்ளே யாரும் கைபேசி கொண்டு செல்ல அனுமதி இல்லை. திருமணத்தில் புகைப்படம் மட்டும் வீடியோ யாரும் எடுத்து விட கூடாது என்பதற்காக தான் கைபேசி அனுமதியில்லை என்பது குறிப்பிட தக்கது.

ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் அவர்களுடைய வாகனங்களில் சிறிது தொலைவில் நிறுத்தப்பட்டு, பேட்டரியில் இயங்க கூடிய சிறிய ரக வாகனத்தில் திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இப்படி கடும் கட்டுப்பாடுகளுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற காரணம், அவர்களுடைய திருமணத்தை சுமார் 25 கோடி ரூபாய்க்கு OTT தளத்தில் வெளியிட நெட் பிலிக்ஸ்ல் க்கு விற்பனை செய்தது தான் என்பது குறிப்பிட தக்கது.

இந்நிலையில், இப்படி பல சம்பவங்கள் அரங்கேறிய நயன்தாரா திருமண நிகழ்வில், இயக்குனர் அட்லீ வெட்டி பந்தா செய்வதற்காக தனது மனைவியுடன் இணைந்து செய்த ஒரு செயல். அது அவருக்கு மிக பெரிய அவமானத்தை பெற்று தந்து, கேலி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறார். காப்பியடித்து படம் எடுக்கும் இயக்குனர் அட்லீ எப்போது தன்னை பெரிய அறிவு ஜீவி போன்று காட்டி கொள்ளும் வகையில் மேடைகளில் பேசி வருகின்றவர்.

மேலும், பல படங்களில் இருந்து காட்சிகளை திருடி படம் எடுத்தாலும், அவருடைய வெட்டி பந்தாவுக்கு மட்டும் குறைச்சல் இருக்காது, அந்த வகையில் மகாபலிபுரத்தில் நடந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்துக்கு, ரோல்ஸ் ராயல் காரில் மனைவியுடன் வந்து இறங்கினர் அட்லீ. இந்த காரின் விலை சுமார் 7 கோடி முதல் 11 கோடி வரை இருக்கும். இதே கார் தான் நடிகர் விஜய் வைத்துள்ளார். இந்நிலையில் அட்லீ ரோல்ஸ் ராயல் காரில் வந்து இறங்கியது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், ஒரு வேலை புதிய ரோல்ஸ் ராயல் கார் ஒன்றை அட்லீ வாங்கியுள்ளாரா என சினிமா துறையினர் விசாரிக்க தொடங்கினர். அதில், சென்னை நந்தனத்தில் உள்ள ஒரு தொழில் அதிபரிடம் நெருக்கிய நட்பில் இருக்கும் இயக்குனர் அட்லீ அவரிடம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்துக்கு செல்ல அவருடைய ரோல்ஸ் ராயல் காரை ஒரு நாள் ஓசி கேட்டுள்ளார்.

அந்த தொழில் அதிபரும் வாய் விட்டு கேட்டு விட்டார் அட்லீ என்பதற்காக தனது விலை உயர்ந்த காரை கொடுத்துள்ளார்.அவர் கொடுத்த ஓசி காரில் அட்லீ தனது மனைவியுடன் பந்தாவாக வந்து இறங்கிய தகவல் அறிந்த சினிமா துறையினர், இதெல்லாம் ஒரு பொழப்பா, ஓசி காரில் வந்து வெட்டி பந்தா கட்டுவதற்கு பதில் தன்னுடைய காரில் வந்திருந்தால் இப்படி கேலி கிண்டலுக்கு உள்ளாகி, இப்படி பலர் காரி துப்பி அவமானப்பட வேண்டிய அவசியம் இருந்திருக்காது என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது கூறிப்பிடத்தக்கது.

நோ… ஹனிமூன்… நயன்தாரா அதிரடி முடிவு… சோகத்தில் விக்னேஷ் சிவன்….என்ன பிரச்சனை தெரியுமா.?