நன்றி மறந்து பி.வாசுவை ஏமாற்றிய ரஜினிகாந்த்… உதவி கரம் நீட்டிய மற்றொரு சினிமா பிரபலம் யார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா படம் மிக பெரிய மெகா ஹிட் கொடுத்து, சுமார் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்த படம். இந்த படத்திற்கு பின்பு சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பின்பு வெளியான படம் பாபா. ரஜினிகாந்த் நடிப்பில் சுமார் மூன்று ஆண்டுகள் இடைவேளைக்கு பின்பு பாபா வெளியாவதால் மக்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு அந்த படத்துக்கு இருந்தது.

சில அரசியல் பிரச்சனை காரணமாக பாபா படம் தோல்வியை சந்தித்தது. பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா என மெகா ஹிட் படங்களை கொடுத்து ரஜினிகாந்த் நடித்த பாபா படம் தோல்வியால், இனி ரஜினிகாந்த் அவ்வளவு தான் என பேசிக்கொண்டிருக்க. இயக்குனர் பி.வாசு தயாரிப்பில் அடுத்து அவர் நடித்த சந்திரமுகி மிக பெரிய ஹிட் கொடுத்து கீழே சரிந்து விழுந்த ரஜினிகாந்த் மீண்டும் எழுந்து வந்தார். சந்திரமுகி வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த்.

நான் யானை இல்லை குதிரை கீழே விழுந்த உடனே எழுந்து விடுவேன் என பன்ச் வசனம் பேசினார். ஆனால் அப்படி கீழே விழுந்து ரஜினிகாந்த் மீண்டும் எழுந்து நிற்க துணையாக இருந்தவர் இயக்குனர் பி.வாசு. இந்நிலையில் சந்திரமுகி பார்ட் 2 படம் எடுக்க வேண்டும் என்பது இயக்குனர் பி.வாசுவின் நீண்ட நாள் திட்டமாக இருந்தது. சந்திரமுகி பார்ட் 2 படத்திற்கான கதையையும் தயார் செய்து ரஜினியிடம் தெரிவித்துள்ளார் பி.வாசு.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தின் போதே ரஜினியை வைத்து சந்திரமுகி 2 படத்தை இயக்க ரஜினியின் பதிலுக்காக காத்திருந்தார் பி.வாசு, தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமான ரஜினிகாந்த், அடுத்த படத்தின் நமக்கு வாய்ப்பு கொடுப்பர் என தொடர்ந்து நம்பிக்கையுடன் காத்திருந்த இயக்குனர் பி.வாசுவுக்கு ஒவ்வொரு தடவையும் ஏமாற்றமே மிஞ்சியது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்தே.

இந்த படத்திற்கு பின்பு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் பட்டியலில் பி.வாசு பெயரும் பரிசீலனையில் இருந்துள்ளது. இதனால் நீண்ட நாள் காத்திருப்புக்கு பலனாக நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இருந்து வந்துள்ளார் பி.வாசு, ஆனால் வழக்கம் போல் இம்முறையும் ஏமாற்றிவிட்டார் ரஜினிகாந்த். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் புதிய படத்துக்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து காத்திருந்தது போதும் என அப்செட் ஆன பி.வாசு.

சந்திரமுகி 2 படத்தை வேறு ஒரு நடிகரை வைத்து எடுக்க முடிவு செய்து, நடிகர் ராகவ லவ்ரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 படத்தை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சந்திரமுகி படத்தில் நடித்த வடிவேலு மீண்டும் சந்திரமுகி 2 படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு காலகட்டத்தில் ரஜினியின் வளர்ச்சிக்கு துணையாக இருந்த பி.வாசு, மற்றும் கே.எஸ். ரவிக்குமார் போன்ற இயக்குனர்களை வாய்ப்புக்காக காக்க வைத்து ரஜினிகாந்த் ஏமாற்றுவது என்பது நன்றி மறந்த செயல் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நோ… ஹனிமூன்… நயன்தாரா அதிரடி முடிவு… சோகத்தில் விக்னேஷ் சிவன்….என்ன பிரச்சனை தெரியுமா.?