ஜவான் இயக்குனர் அட்லீ குமார் இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி என பல முக்கிய பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் & அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கௌரி கான் ‘ரெட் சில்லிஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
அதிரடி மற்றும் திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங் செய்துள்ளார். மேலும், அட்லீ முதல்முறையாக பாலிவுட்டில் இயக்கிய படம் என்பதாலும், ஷாருக்கான் என்ற ஒரு காரணத்திற்காகவும் இப்படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்பார்ப்பு படத்தின் டிக்கெட் முன்பதிவு மற்றும் முதல் நாள் கூட்டத்திலேயே எதிரொலித்தது எனலாம்.
வட மாநிலங்களில் ஷாருக்கான் படங்களுக்கு இருக்கும் வரவேற்பை போலவே தென் மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நீண்ட நாள்களுக்கு ஷாருக்கான் படங்களுக்கு தென் மாநிலங்களிலும் நல்ல ஓப்பனிங்கை ஜவான் படம் ஆரம்பித்துள்ளது எனலாம். அரசாங்க அதிகாரிகளின் ஊழல் செயலில் பாதிக்கப்படும் அரசு ராணுவ வீரர்களுக்காக போராடும் நாயகன் (ஷாருக் கான்) மீது தவறான குற்றங்களை பதிவிட்டு அழிக்கின்றனர்.
இந்த குற்றங்களை எதிர்த்து பழிவாங்க அவரின் மகன் நாயகன் (ஷாருக் கான்) அரசு அதிகாரத்தை எதிர்த்து போராடுவதே இப்படத்தின் கதை. ஜவான் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிய அளவில் பேசப்படுகிறது.
என்னதான் ஷாருக்கான், நயன்தாரா என பெரிய தலைகள் படத்தில் இருந்தாலும், அட்லி என்றாலே நெட்டிசன்களுக்கு, சும்மா இருந்த வாய்க்கு அவல் கிடைத்த கதையாக நல்ல கன்டென்ட் கிடைத்துவிடும். அவர் எப்படி படம் எடுத்தாலும், அது எந்த படத்தில் இருந்து எடுக்கப்பட்ட கதை என்பதை சொடுக்கு விடும் நேரத்தில் அலசி ஆராய்ந்து பங்கம் செய்து விடுவார்கள்.
அட்லி பாலிவுட் வரை சென்று விட்டார், இனி அவருடைய லெவல் வேறு என நினைத்துக் கொண்டு படம் பார்க்க சென்றவர்களுக்கு, அவர் இன்னும் பழசை மறக்கவில்லை, இப்போது இந்தியில் வடை சுட்டு இருக்கிறார் அவ்வளவு தான் என்பது போல், படத்தின் கதை மொத்தமும் தமிழ் படங்களின் கதைகளில் இருந்து சுடப்பட்டது என தெரிந்து விட்டது. படம் ரிலீஸ் ஆகி கொஞ்ச நேரத்தில் எல்லாம், இது கேப்டன் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தில் கதையில் இருந்து சுடப்பட்டது என ட்ரோல் செய்ய ஆரம்பித்திருந்தார்கள்.
தற்போது அதையும் தாண்டி, ஜவான் படத்தின் தமிழ் வெர்ஷன் என சொல்லி சத்யராஜ் நடித்த தாய்நாடு படத்தை சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கி வருகிறார்கள். சத்யராஜ் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு வெளியான படம் தான் தாய் நாடு. இந்த படத்தில் எம் என் நம்பியார், ஜெய்சங்கர் ஆகியோர் இணைந்து நடித்திருந்தார்கள். இயக்குனர் அரவிந்த்ராஜ் இயக்கிய இந்த படத்தில் சத்யராஜ் ராணுவ வீரராக நடித்திருக்கிறார். இந்த படத்தை தான் தற்போது ஜவானின் தமிழ் வர்ஷன் என்று சொல்லி வருகிறார்கள்.
மறுபக்கம் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் காப்பியாக இந்த படம் வந்துள்ளது என்று கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை ஏகப்பட்ட படங்களின் இன்ஸ்பிரேஷனல் தான் இயக்குனர் அட்லி ஜவான் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் என்றும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். எப்படி இருந்தாலும் வழக்கம்போல தனது படத்தை டாப் டக்கராக ரசிகர்களுக்கு ஏற்ற விசுவல் ட்ரீட்டாக இயக்குனர் அட்லி கொடுத்து அசத்தி விட்டார்.