இயக்குனர் அட்லி தமிழ் சினிமாவில் வெறும் நான்கு படங்கள் மட்டுமே இயக்கி உள்ளார், அதில் மூன்று படங்கள் விஜய் நடித்த படங்கள், விஜய்க்கு விருப்பமான இயக்குனர்களின் வரிசையில் அட்லீயும் இடம் பிடித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது ஜவான் படத்தை இயக்கி வரும் நடிகர் அட்லி மீண்டும் தமிழ் சினிமாவில் விஜயை வைத்து ஒரு படம் இயக்குவதற்கு கமிட்டானார்.
அட்லி மனைவி பிரியாவின் வளைகாப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு அட்லி – விஜய் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்போது அட்லி விஜய்க்காக ஒரு கதையை தெரிவித்துள்ளார். அந்த கதையை விஜய் ஓகே செய்தவர். ஜவான் படத்தை முடித்துவிட்டு இந்த படத்திற்கான முழு ஸ்கிரிப்ட்டை தயார் செய்ய வலியுறுத்தியுள்ளார் விஜய்.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தை முடித்துவிட்டு அட்லீ இயக்கும் படத்தை தொடங்கலாம் என அட்லீக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளார். மேலும் விஜய் நடிப்பில் மீண்டும் அட்லீ இணையும் படம், அட்லியின் மனைவி வளைகாப்புக்கு அட்லீ – பிரியா தம்பதியினருக்கு கிப்ட் போன்று அமைத்தது. விஜய் – அட்லி ப்ராஜெக்ட்டை முதலில் நீண்ட காலமாக விஜயின் கால் சீட்டுக்காக காத்திருக்கும் ஏஜிஎஸ் நிறுவனத்திடம் இந்த பிராஜெட்டை விஜய் கொண்டு சென்றுள்ளார்.
ஆனால் ஏஜிஎஸ் நிறுவனம் உங்கள் கால்ஷீட் வேண்டும் ஆனால் இயக்குனர் அட்லி இயக்குவது என்றால் அந்த படம் எங்களுக்கு வேண்டாம், உங்கள் நடிப்பில் வேறு ஒரு இயக்குனர் இயக்கும் ப்ராஜெக்ட்டை கொடுங்கள் என்று நேரடியாக விஜய்யிடம் தெரிவித்துவிட்டனர் ஏஜிஎஸ் நிறுவனம்.இதன் பின்பு இந்த ப்ராஜெக்ட் சன் பிக்சரிடம் சென்றுள்ளது. விஜய் தற்பொழுது நடிக்கும் லியோ படத்திற்கு 130 கோடி சம்பளம் வாங்கி வரும் நிலையில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு விஜய்க்கு 150 கோடி வரை சன் பிக்சர் கொடுக்க முன்வந்துள்ளது.
இதனை தொடர்ந்து அட்லீ சன் பிக்சர் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில், அட்லீக்கு 30 கோடி சம்பளம் தருவதற்கு சன் பிக்சர் தயாராக இருக்கிறது. ஆனால் அட்லீ அதற்கு தற்பொழுது நான் ஷாருக்கானை வைத்து இயக்கம் ஜவான் படம் வெளியான பின்பு, நான் ஒரு பேன் இந்தியா இயக்குனர், அதனால் எனக்கு குறிப்பாக இந்தி சினிமாவில் மார்க்கெட் இருக்கும். ஆகையால் விஜய் நடிக்கும் படத்தை இயக்க 50 கோடி சம்பளம் கேட்டுள்ளார் அட்லீ.
இதை கேட்டு ஷாக் ஆன சன் பிக்சர் நிறுவனம் 30 கோடி தான் என்பதில் உறுதியாக இருந்துள்ளது. அதற்கு அட்லீ சரி தனக்கு 30 கோடி சம்பளத்துடன் சேர்ந்து பிராபிட் சேர் கொடுங்க என கேட்டுள்ளார். அப்படியானால் சம்பளத்துடன் சேர்த்து 50 கோடிக்கு மேல் வந்து விடும் என தயக்கம் காட்டியுள்ளனர் தயாரிப்பு நிறுவனம்.
இருந்தும் விஜய்யிடம் கால் சீட் கிடைத்துவிட்டது, இயக்குனர் அட்லீ உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், இந்த ப்ராஜெக்ட் கைவிட்டு போகும் என்பதால் அட்லீ கேட்ட 50 கோடி சம்பளத்தை கொடுக்க முன் வந்தது சன் பிக்சர் நிறுவனம். இந்நிலையில் அட்லீ தயாரிப்பு நிறுவனத்திடம் விஜய்க்கு தெரியாமல் சம்பளத்தை அதிகம் கேட்டு பேரம் பேசிய விவரம் விஜய்யின் கவனத்திற்கு சென்றுள்ளது.
இதை அறிந்த விஜய் சற்று ஷாக்கானவர், தற்பொழுது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இயக்குனராக இருக்க கூடியவர் லோகேஷ் கனகராஜ் அவரே லியோ படத்திற்கு வாங்கும் சம்பளம் 30 கோடி மேலும் அடுத்து 50 கோடி வரை சம்பளம் கொடுக்க இந்தி நடிகர் சல்மான் கான் தயாராக இருக்க ஆனால் அதை விட குறைவாக 40 கோடி சம்பத்திற்கு ரஜினி படத்தில் கமிட்டாகியுள்ளார். அதுவும் ரஜினிகாந்த் விருப்பத்தின் பேரில் சம்பளம் பேசி முடிக்கப்பட்டது.
ஆனால் சன் பிக்சர் நிறுவனத்திடம் அட்லீ 50 கோடி வரை சம்பளம் கேட்டது, அவர்களும் தன்னுடைய கால்ஷீட் கிடைக்காமல் போய் விடும் என்கிற அச்சத்தில் அட்லீ கேட்ட சம்பளத்தை கொடுக்க முன்வந்தது, விஜய்க்கு அட்லீ மீது வெறுப்பு வந்துள்ளது, உடனே சன் பிக்சர் நிறுவனத்திடம் இவ்வளவு சம்பளம் கொடுத்து அட்லீயை கமிட் செய்ய வேண்டாம், உங்களுக்கு என்னுடைய கால் சீட் உறுதியாக கிடைக்கும், விரைவில் வேறு ஒரு இயக்குனரை தேர்வு செய்யலாம் என தெரிவித்து அட்லீயை இந்த ப்ராஜெக்ட்ல் இருந்தே வெளியேற விஜய் காரணமாக இருந்துள்ளார் என கூறப்படுகிறது.