பண்ணி கணக்கு காட்டி திருடிய அமீர்… நடந்ததை போட்டுடைத்த நடிகர் சிவகுமார் உறவினர்…

0
Follow on Google News

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அமீர். இவர் ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக தன்னுடைய திரையுலக பயணத்தை உதவி பின்னர் 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார் அமீர். இதற்குப் பிறகு இவர் ராம், பருத்திவீரன், ஆதிபகவன், பேரன்பு போன்ற பல படங்களை இயக்கி இருந்தார்.

இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல படங்கள் பெற்று தந்து இருக்கிறது. அதோடு இவர் படங்களில் நடித்தும் வருகிறார். மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் Teamwork Production House என்ற பெயரில் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தை வைத்து இருக்கிறார். தற்போது அமீர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாயவலை. இந்த படத்தை அமீர் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஜப்பான் படத்தின் விழாவில் கார்த்தியை வைத்து படம் இயக்கிய பல இயக்குனர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

ஆனால், அமீர் மட்டும் கலந்து கொண்டிருந்தார்கள். இது குறித்து பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. பின் இது குறித்து பேட்டியில் அமீர், நான் கொஞ்சம் கோபக்காரன், சுய மரியாதையுடன் வாழ்பவன். அதனால் தான் நான் சூர்யாவிடம் இருந்து ஒதுங்கி விட்டேன். ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை யாரும் அழைக்கவில்லை. அதனால் நானும் போகவில்லை. பருத்திவீரன் படத்தின் வெற்றியால் தான் கார்த்திக் இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறார். சிவக்குமார், சூர்யா, கார்த்திக் குடும்பத்துடன் எனக்கு நெருக்கமான பழக்கம்.

ஆனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் எங்களுடைய நட்பை கெடுத்து விட்டார். அவரால் எனக்கு இரண்டு கோடிக்கும் மேல் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் காரணம். அவரிடம் எனக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து பேசியும் நீதி கிடைக்கவில்லை. இப்போது நான் நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி இயக்குனர் அமீர் அளித்திருந்த பேட்டி கோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது.

அமீரின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு ஞானவேல் ராஜா பதிலடி கொடுத்துள்ளார். அதில், அமீருக்கு அவ்ளோ சீன்லாம் இல்லையென அசால்டாக டீல் செய்துள்ளார். அதாவது, நந்தா படத்தின் படப்பிடிப்பில் தான் சூர்யா – அமீர் அண்ணன் இடையே நட்பு ஏற்பட்டது. அதனால் தான் அமீருக்காக மெளனம் பேசியதே படத்தில் நடித்துக் கொடுத்தார் சூர்யா. ஆனால், இயக்குநரானதும் அமீர் அண்ணனின் பேச்சில் மாற்றம் தெரிந்தது. இதனால் சூர்யா மெளனம் பேசியதே இசை வெளியீட்டு விழாவுக்கு கூட வரவில்லை. அதேபோல், பருத்தி வீரன் படம் நானாக தயாரிக்கவில்லை, அதுவும் அமீருக்காக தான் என ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “18 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். அமீருக்கு அவரே பிரச்சினை. அன்னைக்கு அமீர் என்னை, கார்த்தி, சிவகுமார் ஆகியோரை தாக்கி பேட்டி கொடுத்தார். ஆனால் அன்றைக்கு சிவகுமார் ஐயா என்னிடம் சொன்னதால் நான் எதுவும் திரும்ப பேசவில்லை. உலகத்துல தெரியாம தப்பு பண்ணவனை திருத்தலாம். தப்பாவே ஒருத்தர் இருக்கிறார் என்றால் என்ன முடியும்?. எல்லாரும் சேர்ந்தது தான் சினிமா. நான் என் இயக்குநர்களை முழுவதுமாக நம்புவதால் தான் கதை கூட கேட்பதில்லை.

ரூ.2.75 கோடி செலவில் ஆரம்பித்த பருத்தி வீரன் படத்தின் செலவு கணக்கை தயாரிப்பாளர் சங்கத்தில் கேட்கிறார்கள். அமீரும் வந்து கணக்கு தாக்கல் செய்தார். பருத்தி வீரன் படத்தில் பிளாஷ்பேக் போர்ஷனில் பன்னிகள் இருக்கும் காட்சிகள் இருக்கும். கிட்டதட்ட 35 பன்னிகள் மட்டுமே ஃபிரேமில் இருக்கும் அந்த காட்சியில் 250 பன்னிகள் இருப்பதாக கணக்கு காட்டினார். அதில் Hide pigs, died pigs என எழுதியிருந்தார். அப்படி என்றால் என கேட்டதற்கு, Hide pigs என்றால் ஃப்ரேமில் தெரியாத 100 பன்னிகள், ஷூட்டிங் நடந்த சமயத்தில் இறந்தது 70 பன்னிகள் என died pigs என தெரிவித்திருந்தார்.

அமீருக்கு இருக்கும் திறமைக்கு அவர் ஹாலிவுட் வரை சென்று படம் எடுத்திருக்கலாம். ஆனால் அவர் இங்கயே திருட வேண்டும் என நினைத்து சுற்றிக்கொண்டிருக்கிறார். பருத்திவீரன் படத்தின் பர்ஸ்ட் காப்பியை ரூ.2 கோடியே 75 லட்சத்தில் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று தான் முதலில் ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது. ஆனால் அமீர் இறுதியாக என்னிடம் செட்டில் செய்தது ரூ.4 கோடியே 80 லட்சம். 6 மாதத்தில் படத்தை முடிக்கிறேன் என கூறிவிட்டு இரண்டரை வருஷம் எடுத்துக்கொண்டார். என் மீதும் சூர்யா, சிவகுமார், கார்த்தி ஆகியோர் மீது வழக்கு தொடுத்தது அமீர் தான்.” என கூறியுள்ளார்.