இயக்குனர் அமீருக்கு தெரியாமலே போதை பொருள் கடந்தல் நடந்துச்சாம்… நம்புகின்ற மாதிரியா இருக்கு…

0
Follow on Google News

நாட்டையே உள்ளுக்கியுள்ள டெல்லியில் நடந்த போதை பொருள் கடந்தால் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று நபர்களும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது மிக பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2000 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சர்வதேச அளவில் மிக பெரிய போதை பொருள் கடத்தலில் இந்த கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

பொதுவாகவே, ஹவாலா பணம் பரிமாற்றம் செய்கின்றவர்கள், வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தல் செய்கின்றவர்கள், போதை பொருள் கடத்தல் செய்கின்றவர்கள், இப்படி சட்ட விரோத தொழில் செய்து, சட்ட விரோதமாக சம்பாரிக்கும் பணத்தை சினிமாவில் முதலீடு செய்து, அந்த கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் யுத்தியை செய்ய கூடியவர்கள், அப்படி தான் நாட்டையே உலுக்கிய கேரள தங்க கடத்தலில் ஈடுபட்ட சப்னா சுரேஷ்.

அவர் தங்க கடத்தலில் கிடைக்கும் பணத்தை சினிமாவில் முதலீடு செய்தது தெரிய வந்தது. அந்த வகையில் தற்பொழுது டெல்லியில் மிக பெரிய அளவில் போதை பொருள் கட்டத்தில் ஈடுபட்டு சிக்கிய மூவரில், அதில் ஒருவர் மூளையாக செயல்பட்ட ஜாபர், தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் அமீர் இயக்கி நடிக்கும் இறைவன் மிக பெரியவன் படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் தான் தற்பொழுது சிக்கியுள்ள சுமார் 2000 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு வந்துள்ளார்.

மேலும் இந்த போதை பொருள் கடத்தலுக்கு ஜாபருக்கு உறுதுணையாக இருந்த மைதீன் இறைவன் மிக பெரிய படத்தில் நடிகராக நடிக்கிறார். அந்த வகையில் அமீர் இயக்கி நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர் மிக பெரிய போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தது எப்படி இயக்குனர் அமீருக்கு தெரியாமல் இருக்கும், மேலும் இறைவன் மிக பெரியவன் படத்தின் தொடங்க விழாவில் கலந்து கொண்ட அமீர் உட்பட சினிமா துறையினர் தற்பொழுது போதை பொருள் கடத்தலில் சிக்கியுள்ளார் இறைவன் மிக பெரியவன் படத்தின் தயாரிப்பாளர் ஜாபரை மிக பெரிய அளவில் புகழ்ந்து பேசியது தற்பொழுது கடும் விவாத பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் இந்த போதை பொருள் கடத்தலில் சிக்கியுள்ள ஜாபர் குறித்த விவகாரத்திற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனக்கு எதுவும் தெரியாதது போன்றும், அதாவது இறைவன் மிக பெரியவன் படத்தின் படப்பிடிப்பு தீடிரென நிறுத்தப்பட்டது, எதற்க்கு நிறுத்தப்பட்டது என்று எனக்கு தெரியாது, ஆனால் தற்பொழுது வரும் செய்திகள் உண்மையாக இருந்தால் நிச்சயம் தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அமீர் அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் அமீர் புதுமுக இயக்குனர் கிடையாது, ஒரு பிரபலமான இயக்குனர், அப்படி இருக்கையில் அவர் இயக்கி நடிக்க இருக்கும் படத்தின் தயாரிப்பாளர் பின்புலம் பற்றி எப்படி அமீருக்கும் தெரியாமல் இருந்திருக்கும் என பலரும் சந்தேகத்தை கிளப்பி வருகிறார்கள். மேலும் தற்பொழுது போதை பொருள் கடத்தலில் சிக்கியுள்ள ஜாபர் இறைவன் மிக பெரியவன் படத்திற்கு மட்டும் தயாரிப்பாளர் கிடையாது.

அமீர் நடிக்கும் மற்றொரு படமான மாயவலை படத்தின் இணை தயாரிப்பாளரும் அவர் தான், அந்த வகையில் அமீர் நடிக்கும் ஒரு படத்தின் இணை தயாரிப்பாளராகவும், மற்றொரு படத்தின் தயாரிப்பாளராகவும் இருக்கும் போதை பொருள் கடத்தலில் சிக்கியுள்ள ஜாபர் பின்புலம் பற்றி தெரியாமலே எப்படி அமீர் அடுத்தடுத்து அவர்கள் படத்தில் கமிட்டானார் என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில்.

ஒரு வேளை அமீருக்கு தெரியாமலே சட்ட விரோதமாக ஜாபர் செய்யும் போதை பொருள் கடத்தல் தொழிலை மூடி மறைத்து இருக்கலாம், அந்த வகையில் அமீர் மட்டுமில்லை சினிமா துறையில் இருக்கும் முக்கிய இயக்குனர்கள், நடிகர்கள் என அனைவரும் அவர்களை வைத்து படம் தயாரிக்கிறேன் என சினிமா சார்ந்து இல்லாமல் திடீரென வரும் போது, அவர்களின் பின்புலம் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும் என பலரும் அறிவுறுத்து வருகிறார்கள்.