அமீர்-ஞானவேல் ராஜா இடையேயான பருத்திவீரன் சர்ச்சை பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்நிலையில், இயக்குனர் அமீருக்கு எதிராக சதி செய்யும் வேளையில் சிவகுமார் உறவினர் இறங்கியுள்ளதாகவும், சினிமாவில் இருந்து அமீரை காலி செய்ய தன்னிடம் பேரம் பேசியதாகவும் பிரபல பத்திரிகையாளர் பகிர் தகவலை வெளியிட்டுள்ளார்.இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படம் மிக பெரிய வெற்றியை தந்தது.பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்த இந்த படத்தில் சிவக்குமார் மகனான கார்த்தியை ஹீரோவாக அறிமுகம் செய்திருந்தார். நடிகை பிரியாமணி, கஞ்சா கருப்பு, பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்த இப்படம் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்படி மாபெரும் வெற்றி கண்ட பருத்திவீரன் படத்துக்கு முதலீடு செய்த விஷயத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இயக்குனர் அமீருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டது.
இதனால் இருவருக்கும் இடையே சுமார் 17 ஆண்டுகளாக பகை இருந்து வருகிறது. இருப்பினும் அண்மைக்காலமாக தான் மீடியாவில் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. மேலும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சிவகுமாரின் உறவினர் என்பதால், இப்போது அமீர் vs சிவகுமார் குடும்பம் என்ற நிலை உருவாகி உள்ளது. அண்மையில் பருத்திவீரன் திரைப்படத்தின் தயாரிப்பு சம்பந்தமாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா சில தகவல்களை வெளியிட்டு இருந்தார்.
அதில் பருத்திவீரன் திரைப்படத்தின் இயக்குனர் அமீர் அவர்களை கடுமையாக சாடி அவர் பல விஷயங்களை பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரு சிலர் ஞானவேல் ராஜாவிற்கு ஆதரவாக பேச, சமுத்திரக்கனி, இயக்குனர் சுதா கொங்கரா, சசிகுமார் உள்ளிட்ட பலரும் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதனால் இந்த சர்ச்சை சூடு பிடிக்க ஆரம்பித்தது.
அமீருக்கு ஆதரவாக அனைத்து பிரபலங்களும் ஒன்று கூடுவதை பார்த்த ஞானவேல் ராஜா பதறி அடித்துக் கொண்டு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். சுமார் இரண்டு வாரங்களுக்கும் மேலாக, மீடியாவை ஆக்கிரமித்து இருந்த இந்த பிரச்சனை குறித்து நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி வாயை திறக்காமல் இருந்ததால் இணையவாசிகள் பலரும் அவர்களை வறுத்தெடுத்து வந்தனர்.
ஞானவேல் ராஜா சிவக்குமாரின் உறவினர் என்பதால், சிவக்குமார் குடும்பம் அமீருக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை என்று பலர் விமர்சித்து வந்தனர். இப்படியான நிலையில், பருத்திவீரன் சர்ச்சையில் அமீரை எப்படியாவது காலி பண்ணி விட வேண்டும் என்று ஞானவேல் தரப்பு மும்முறமாக வேலை பார்ப்பதாக பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல்,”என்னிடம் கூட ஒரு பிஆர்ஓ வந்து ஞானவேல் ராஜா, எஸ் ஆர் பிரபு ஆகியோர் உங்களை சந்தித்து பருத்திவீரன் சர்ச்சையில் நடந்தவற்றை சொல்கிறோம், நீங்கள் அதை வைத்து அமீருக்கு எதிராக வீடியோ போடலாம் என்று பேரம் பேசினார்கள். ஆனால் இந்த விஷயத்தில் அமீர்பக்கம் நியாயம் இருப்பதால், நான் அவர் பக்கம் தான் நிற்பேன் என்று சொல்லி மறுத்துவிட்டேன் ” என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி சொன்னது போன்று அமீரை காலி செய்ய அவரிடம் ஞானவேல் ராஜா, எஸ் ஆர் பிரபு ஆகியோர் சந்திக்க வேண்டும் என பிஆர்ஓ பேசியதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஞானவேல் ராஜா, எஸ் ஆர் பிரபு இருவரும் சிவகுமார் குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர் என்பதால் சிவ குமார் குடும்ப உறவினர்கள் இப்படி பேரம் பேசியதின் பின்னனியில் சூர்யா மற்றும் கார்த்திக் இருவரும் இருக்கலாம் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.