நேருக்கு நேராக சந்தித்த அமீர் – கார்த்திக்… கொஞ்சம் கூட நன்றி இல்லாமல் நடந்து கொண்ட கார்த்திக்..

0
Follow on Google News

இயக்குனர் அமீர் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பருத்திவீரன் ஆக அறிமுகமானவர்தான் நடிகர் கார்த்தி. இவர் வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். இவர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை, மெட்ராஸ், தீரம் அதிகாரம் ஒன்று, கைதி என அத்துனை படங்களும் வரிசையாக ஹிட் அடித்துள்ளது.

வெவ்வேறு இயக்குனர்களின் கூட்டணியில் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் கார்த்தி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு டிராக்கை அமைத்து உச்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். கார்த்திக்கின் முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்த இயக்குனர் அமீர், அந்தப் படத்தினாலேயே மிகப்பெரிய பிரச்சனையையும் சந்தித்து வந்துள்ளார்.பருத்திவீரன் படத்தில் அமீர்- ஞானவேல் ராஜா இடையே தொடங்கிய பிரச்சனை இன்றளவிலும் ஓய்ந்தபாடில்லை.

முதலில் பருத்திவீரன் படத்தை தயாரிப்பதற்கு ஒப்புக்கொண்ட ஞானவேல்ராஜா, பாதியிலேயே படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும், அதன் பின், அமீர்தான் பல இடங்களில் கடன் வாங்கி அப்படத்தை முடித்ததாகவும் அமீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அமீரின் குற்றச்சாட்டுகளைப் பார்த்த ஞானவேல் ராஜா அமீருக்கு அவமானப்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இதனால் இந்தப் பிரச்சினை இணையத்தில் பூதாகரமாக வெடித்தது.

அது மட்டும் இல்லாமல், இந்த சர்ச்சையில் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சமுத்திரகனி, சசிகுமார், பொன்வண்ணன் உள்ளிட்டோர் குரல் கொடுத்திருந்தனர். ஆனால், சூர்யா, கார்த்தி ஆகியோர் தங்களை வைத்து படம் இயக்கிய அமீருக்கு ஆதரவாக எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.கார்த்தியை வைத்து பருத்திவீரன் படத்தை எடுத்த அமீர், சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே படத்தை எடுத்திருந்தார். ஆனால் இருவருமே அமீருக்கு தேவையான நேரத்தில் உதவ முன் வரவில்லை

நீண்ட நாட்களாக இந்த பிரச்சனை முடிவுக்கு வராமல் இருக்கும் நிலையில் அண்ணன் தம்பி இருவரும் வாயை திறக்காமல் இருந்ததால், இனையவாசிகள் பலரும் அவர்களை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த பிரச்சனை இப்படியே சென்று கொண்டிருக்க சமீபத்தில் கலைஞர் 100 விழா நடந்து முடிந்தது.
இந்த விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உட்பட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இயக்குனர் வெற்றிமாறனும் அமீரும் கூட இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். நடிகர் சூர்யாவும் வெளிநாட்டில் படப்பிடிப்பை முடித்துவிட்டு விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் அமீர் இருவரையும் கடந்து சென்ற சூர்யா, வெற்றிமாறனை பார்த்து கைகுலுக்கியதோடு அருகில் இருந்த அமீருக்கும் கை கொடுத்தார். மற்றும் இருவரும் கட்டியணைத்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.

இப்படி இணையத்தில் எவ்வளவோ விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும், தன்னை வைத்து படம் எடுத்த இயக்குனருக்கு தான் கொடுக்க வேண்டிய மரியாதையை சரியாக கொடுத்து விட்டு சென்றார் சூர்யா. ஆனால், நடிகர் கார்த்தி அண்ணனுக்கு மாறாக நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. அதாவது நடிகர் சங்கச் செயலாளராக பொறுப்பு வைக்கும் நடிகர் கார்த்தி அந்த விழாவிற்காண ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தாராம்.

அந்த சமயத்தில் விழாவில் அமர்ந்திருந்த வெற்றி மரணையும் அமீரையும் பலமுறை கடந்து சென்று இருக்கிறார் கார்த்தி. ஆனால் ஒரு முறை கூட அமீரை திரும்பிப் பார்க்கவில்லையாம். இங்கே அவரைப் பார்த்தால் பேச நேரிடுமோ என்று கண்டும் காணாதவாறு சென்றுவிட்டாராம். இந்த செய்தியை அறிந்த இணையவாசிகள் பலரும் இதுதான் அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு கொடுக்கிற மரியாதை என்று கார்த்தியை விமர்சித்து வருகின்றனர்.