இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது, சமீபத்தில் லியோ படத்தின் நான் ரெடி பாடல் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது, விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி, மற்றும் அந்த பாடலில் இடம்பெற்ற சில வரிகள் இந்த சமூகத்தை சீரழிக்கும் வகையில் உள்ளது என சமூக ஆர்வலர்கள் ஒரு பக்கம் கொந்தளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த சலசலப்புக்கு மத்தியில் லியோ படத்தின் வியாபாரம் என்பது ஒட்டுமொத்த இந்தியா சினிமாவும் வாய் விழுந்து பார்க்கும் வகையில் படு ஜோராக நடந்து வருகிறது. லியோ படத்தின் டேபிள் ப்ராபிட் என்று சொல்லப்படும் ப்ரீ பிஸ்னஸ் மட்டும், இப்போது வரையுமே சுமார் 500 கோடி வரை வியாபாரம் செய்து கல்லா கட்டி விட்டார்கள் லியோ பட தயாரிப்பு தரப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அதைத் தாண்டி வெளிநாட்டு திரையரங்கு உரிமை சுமார் 150 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது யாரும் எதிர்ப்பாராத ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காரணம் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு படம் 35 கோடி ரூபாய்க்கு மட்டுமே வெளிநாடு திரையரங்கு உரிமை விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது லியோ படத்தின் வெளிநாட்டு திரையரங்கு உரிமை சுமார் 150 கோடி ரூபாய் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உலக அளவில் மிகப்பெரிய அளவில் இருப்பது தெரிய வருகிறது.
அந்த வகையில் தற்போது வெளிநாட்டு திரையரங்கு உரிமை மிகப்பெரிய அளவில் வியாபாரம் செய்யப்பட்டுள்ளதால், படத்தை வாங்கிய வெளிநாட்டு விநியோகஸ்தர்கள், நடிகர் விஜய்யை வெளிநாடுகளில் ஏதாவது ஒரு நாட்டில் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டும் என்கின்ற ஒரு கோரிக்கையை வைத்து வருகிறார்கள், மேலும் லியோ படத்தின் வசூல் இந்தியா அளவில் பேசப்பட வேண்டும் என விரும்பும் விஜய் தமிழ்நாட்டில் ஒரு ஆடியோ வெளியிட்டு விழா, வெளிநாடுகளில் ஒரு ஆடியோ விழா என இரண்டு ஆடியோ வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு லியோ படத்தை ப்ரோமோஷன் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோன்று தமிழ்நாடு தவிர்த்து அண்டை மாநிலங்களிலும் நடிகர் விஜய் படத்திற்கான வரவேற்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் கேரளாவில் கோகுலம் ஃபிலிம்ஸ் 16 கோடி ரூபாய்க்கு லியோ படத்தை வாங்கி வெளியிடுவதற்கான உரிமையை பெற்றுள்ளது, இது கேரளாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் மம்முட்டி, மோகன்லால் போன்றவர்கள் படத்தை விட அதிக வியாபாரத்தை லியோ படத்தை படம் பெற்றுள்ளது.
அதே போன்று ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் லியோ படத்தின் வியாபாரம் இதற்கு முன்பு எந்த ஒரு தமிழ் சினிமாவுக்கு கிடைக்காத ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது, லியோ படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வியாபாரம் சுமார் 100 கோடி வரை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இப்போது வரை அது குறித்து எந்த ஒரு பேச்சுவார்த்தையும் ப த்தின் தயாரிப்பு தரப்பு தொடங்கவில்லை.
படம் ரிலீஸ் ஆவதற்கு 10 அல்லது 15 நாட்களுக்கு முன்புதான் லியோ படத்தின் தமிழ்நாட்டு திரையரங்கு உரிமைக்கான வியாபாரத்தை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளார்கள். அந்த வகையில் தமிழகத்தை பொறுத்தவரை குறைந்தது 100 கோடி ரூபாய்க்கு மேலேதான் லியோ படத்தின் வியாபாரம் இருக்கும் என்பதை உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் லியோ படம் வெளியாவதர்க்கு முன்பே அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மிக பெரிய லாபத்தை அந்த படம் பெற்று தந்து வருவது குறிப்பிடதக்கது.