சினிமாவால் சந்தி சிரிக்கும் தமிழக சட்டம் ஒழுங்கு.. …..போலீசார் படுகொலை..! கவர்னர் கட்டுப்பாட்டில் செல்கிறது காவல்துறை.?

0
Follow on Google News

விடுதலைபுலிகள், நக்சலைட்டுகள், தீவிரவாதிகள், சந்தன கடத்தல் வீரப்பன், ஆட்டோ சங்கர் என பெரிய கொம்பர்களையெல்லாம் காலில் போட்டு மிதித்து ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையானது தமிழக காவல்துறை என இந்தியாவே வியந்து பார்த்து கொண்டிருந்த தமிழக காவல் துறையை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர், ஆடு திருடும் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் படைப்பாளி என்கிற போர்வையில் குற்றவாளிகளை ஹீரோ போன்றும், காவல்துறையை கொடூரமானவர்கள் போன்று திரையில் காண்பிக்கும் இயக்குனர் வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள், காவல் துறையை கொச்சை படுத்தும் வகையில் நடிக்கும் நடிகர்களை வளரவிட்டது தான் இன்று சமூகத்தில் காவல்துறைக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாக அதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

தற்போது காவல் ஆய்வாளர் படுகொலை சம்பவம் சட்டம் ஒழுங்கில் தமிழகம் அபாய கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறியாக தான் பார்க்க முடிகிறது. காவல்துறை அருகிலே அரசியல்வாதிகளின் அல்லக்கைகள் கூட மிரட்டும் காட்சியெல்லாம் தற்சமயம் அரங்கேறி வரும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதை பார்க்க முடிகிறது.

காவல்துறை மீது பயமில்லா போக்கு உருவாகி வருவது, அது தமிழக பாதுகாப்பில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் சமூக அக்கறை கொண்டவர்கள். உள்ளூர் அரசியல்வாதி பலமிருந்தால் எதையும் சாதிக்கலாம் எனும் ஒரு அலட்சியமே தமிழகத்தில் நடக்கும் சில கொலைகளுக்கு காரணம் என கூறப்படுகிறது. தமிழக சட்டம் ஒழுங்கை காக்க, தமிழக காவல் துறையின் உயிருக்கு உத்தரவாத அளிக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளர் படுகொலை போன்ற சம்பவங்கள் இனி வரும் காலங்களில் தொடரும் பட்சத்தில். தமிழக காவல்துறை, தமிழக ஆளுநர் கட்டுபாடு அல்லது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செல்ல வாய்ப்புகள் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில். காவல்துறையை கொடூரமாக சித்தரிக்கும் தமிழ் சினிமாக்களை சென்சார் குழு தடை செய்தாலே தமிழகத்தில் பல்வேறு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கலாம் என்கிற கருத்தும் நிலவி வருவது குறிப்பிடதக்கது.