கொட்டும் மழையிலும் வசூல் மழை… மாநாடு முதல் நாள் கலெக்ஷன் இவ்வளவா?

0
Follow on Google News

மாநாடு படத்தின் முதல் நாள் வசூல் இதுவரை சிம்பு படத்துக்கு இல்லாத அளவுக்கு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா மற்றும் எஸ் ஏ சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட இந்த படம் பல பிரச்சனைகளைத் தாண்டி நேற்று வெளியாகியுள்ளது. சிம்பு நடிப்பில் வெளியான படங்கள் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வசுலில் சாதித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் அந்த குறையைப் போக்கும் விதமாக மாநாடு படம் அமைந்துள்ளது.

நேற்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை பெய்த நிலையிலும் மாநாடு வசூல் பிரமிக்க வைத்துள்ளது. இதுவரை சிம்பு படத்துக்கு இலலாத அளவில் 8 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்று மேலும் காட்சிகள் அதிகமாக்கப்பட்டுள்ளதால் இன்றைய வசூல் மேலும் அதிகமாகும் என சொல்லப்படுகிறது.