பணம் வாங்கி சர்வதேச விருதுகள் விற்பனை செய்தது அம்பலம்..! கையும் களவுமாக மாட்டிய சினிமா பிரபலங்கள்..

0
Follow on Google News

பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசைமைத்து, ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த ‘கூழாங்கல்’ படம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ரோட்டர்டாம் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று மிக உயரிய விருதான டைகர் விருதை வென்றது. விக்னேஷ் சிவன் – நயன்தாரா தயாரித்த ‘கூழாங்கல்’ படத்துக்கு சர்வதேச விருது கிடைத்ததை முன்னிட்டு அந்த விருதுடன் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் மகிழ்ச்சியை பகிர்ந்தனர்.

இதே போன்று, மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு சிறந்த நடிகருக்கான INTERNATIONAL ACHIEVEMENT RECOGNITION AWARDS என்கிற சர்வதேச விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய இரு பிரிவுகளில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு சர்வதேச விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றாலும் நிகழ்வின் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை நிகழ்ச்சிக் குழுவினர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சர்வதேச விருது என்பது ஒரு டுபாகூர் விருது என பிரபல சினிமா நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். சில பல்கலை கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது அதில் ஒரு சில பல்கலை கழகங்கள் பணத்தை பெற்று கொண்டு டாக்டர் பட்டத்தை வழங்கி வருவது குறிப்பிட்ட தக்கது, சுமார் ரூபாய் 50 ஆயிரம் வரை பணம் கொடுத்து இந்த கௌரவ டாக்டர் படத்தை பெற்று வருவது குறிப்பிட்ட தக்கது.

அதே போன்று சர்வதேச விருது என்பது சென்னையில் தயார் செய்யப்பட்டது வருகிறது என்றும் அதற்கான ஆட்கள் சென்னையிலே உள்ளனர். படத்தை விளம்பரம் செய்வதற்காக படத்தின் தயாரிப்பாளர்கள் பணத்தை கொடுத்து சர்வதேச விருதுகளை பெற்று வருவதாக கூறிய பயில்வான் ரங்கநாதன், மேலும் தனக்கு தெரிந்த ஒரு தயாரிப்பாளர் சுமார் 3 லட்சம் கொடுத்து தான் படத்தை விளம்பரம் செய்வதர்க்காக சர்வதேச விருது வாங்கியதாக தன்னிடம் தெரிவித்ததாகவும்.

ஆனால் இந்த தகவலை வெளியில் சொல்ல வேண்டாம் என கேட்டு கொண்டார் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்தார். இந்நிலையில் பயில்வான் தெரிவித்த இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது, சர்வதேச விருது பெற்ற நடிகர் விஜய் மற்றும் ‘கூழாங்கல்’ படத்தின் தயாரிப்பாளர்கள் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஆகியோர் இதே போன்று வடிவேல் காமெடியில் வரும் நாச்சியப்பன் பத்திரக்கடை நகைச்சுவை காட்சி போன்று பணத்தை கொடுத்து தான் சர்வதேச விருதை பெற்று கொண்டார்களா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.