கேரள சினிமாவில் ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை மிகப்பெரிய பூகம்பத்தை வெடித்துள்ளது.மேலும் சினிமா காமெடியில் வருவது போன்று இப்ப தும்மினால் தான் சரியாக இருக்கும் என பழைய நடிகைகள் முதல் புதுமுக நவரை அனைவரும் சரமாரியாக சினிமா துறையில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.
வெளிநாடுகளில் செட்டில் ஆகி உள்ள பல நடிகைகள் தங்களுக்கும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது என்று தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை கேரள நடிகரின் மீது வைத்து வருகிறார்கள். அதே நேரத்தில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய ராதிகா கேரள சினிமாவில் கேரவனில் ரகசிய கேமரா வைத்து நடிகைகளை வீடியோ எடுத்து பார்த்து ரசிப்பார்கள் என்கின்ற ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
மேலும் பிக் பாஸில் கலந்து கொண்ட பழைய நடிகை விசித்திராவும் இதுபோன்ற பல குற்றச்சாட்டுகளை நடிகர்கள் அட்ஜ்ஸ்ட்மென்ட்க்கு அழைப்பது குறித்து வைத்தார். இந்த நிலையில் மெட்டிஒலி சீரியல் நடிகை கேரள சினிமாவே இது இந்த விஷயத்தில் படுமோசமென்று, அவர் போன்றே தமிழ்நாட்டில் செட்டிலான பல நடிகர்கள் பரபரப்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில்,
கேரள சினிமாவைச் சார்ந்த சகிலா, ஊர்வசி போன்றோர்கள் தமிழ் சினிமாவும் விஷயத்தில் யோக்கியர்கள் இல்லை. இது போன்ற அட்ஜஸ்மெண்டுகள் அங்கேயும் இருக்கு என்று தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்பொழுது தமிழ் சினிமா கேரளா சினிமா இடையிலான அட்ஜஸ்ட்மெண்ட் குறித்த விவாதம் அனல் பறந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து கேரளாவில் ந டாப் நடிகரான மம்மூட்டி பாதிக்கப்பட்ட நடிகைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில் சட்டப்படி இதில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று தனது நிலைபாட்டை தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஷால் அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிடுபவர்களை செருப்பை கழட்டி அடிக்க வேண்டும் என்று தெரிவித்து, வெளியில் போகிற ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட கதையாக வசமாக சிக்கிக்கொண்டார் விஷால்.
விஷால் அளித்த இந்த பேட்டிக்கு பின்பு நடிகை ஸ்ரீ ரெட்டி விஷாலின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்ற அடுத்தடுத்து எந்த தமிழ்நாடு நடிகர்களிடம் மைக்கை நீட்டினாலும் தெறித்து ஓடுகிறார்கள், ரஜினிகாந்த் எனக்கு இத பத்தி எதுவுமே தெரியாது என்று ஓடுகிறார், ஜீவா ச மீடியாக்களிடம் கோபமடைகிறார், காரணம் நாம் ஏதாவது சொன்னால் நம்மளுடைய வண்டவாளம் தண்டவாளத்தை ஏதாவது ஒரு நடிகை ஏற்றி விட்டு விடுவார்கள் என்று மீடியாவை பார்த்தாலே நடிகர்கள் அலறுகிறார்கள்.
இந்த நிலையில் கேரவனுக்குள் சிசிடிவி கேமரா வைக்கும் பழக்கம் கேரளா சினிமாவில் இருக்கிறது என்று ராதிகா தெரிவித்ததை தொடர்ந்து, அவரிடம் கேரளா போலீசார்கள் தொலைபேசியில் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அவரும் இது தொடர்பாக பல தகவல்களை தெரிவித்ததாகவும். இதனை தொடர்ந்து தேவைப்பட்டால் கேரளா போலீசார் சென்னை வந்து நேரடியாக ராதிகாவிடம் விசாரணை நடத்தலாம் என்றும், அந்த வகையில் கேரவனுக்குள் கேமரா வைத்த கேரளா சினிமா துறையை சார்ந்தவர்களில் சிக்க போவது யார் என்கின்ற பரபரப்பு சினிமா வட்டாரத்தில் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.