லியோ படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். அஜித்துக்கு எப்படி ஒரு மங்காத்தாவை வெங்கட் கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் கொடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.
இந்தச் சூழலில் விஜய்யும், வெங்கட் பிரபுவும் அமெரிக்கா சென்றிருக்கிறார்கள். அங்கு 3டியில் விஜய்யின் முழு உடலும் ஸ்கேன் செய்யப்படும் புகைப்படம் வெளியானது. மேலும் அந்தப் புகைபடத்தோடு எதிர்காலத்துக்கு வருக என்று கேப்ஷன் போட்டிருந்தார். எனவே இது சைன்ஸ் பிக்ஷன் கதையாக இருக்குமோ என ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர்.
இந்நிலையில் தளபதி 68 படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரு வேடங்களில் நடிப்பதாகவும், இப்படம் ஒரு மல்டி ஸ்டாரர் படமாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால் தளபதி 68 படத்தில் நடிக்க ஜோதிகா மறுத்ததாக மீண்டும் தகவல்கள் பரவின.
அதன் காரணம் என்னவென்றால் தளபதி 68 படத்தில் விஜய் அப்பா மற்றும் பையன் என இரு வேடங்களில் நடிப்பதாக பேசப்பட்டு வருகின்றது. இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாகத்தான் ஜோதிகா நடிக்கின்றார். எனவே பிள்ளை விஜய்க்கு ஜோதிகா அம்மாவாக நடிக்கின்றார். இதையடுத்து பிள்ளை விஜய் ஜோதிகாவை அம்மா என கூப்பிட்டால் அது சரியாக இருக்காது என ஜோதிகா கருதுகிறாராம்.
விஜய்யுடன் பல படங்களில் இணைந்து நடித்து வெற்றி பெற்ற ஜோதிகா தற்போது விஜய்க்கு அம்மாவாக நடித்தால் சரிப்பட்டு வராது என முடிவெடுத்துள்ளார். அதன் காரணமாகவே இப்படத்தில் இருந்து ஜோதிகா விலகியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ஜோதிகாவிற்கு பதிலாக தளபதி 68 திரைப்படத்தில் சிம்ரன் நடிக்கின்றார் என தகவல்கள் வந்தன. நடிகை சிம்ரன் மற்றும் விஜய் இணைந்து 5 க்கும மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர். அந்த படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளன.
எனவே, சிம்ரனை நடிக்கவைக்க முயற்சிகள் செய்யப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அவரும் இப்போது நடிக்கவில்லையாம். அனைவரும் வேண்டாம் சொல்ல, கடைசியாக சினேகா இதில் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டார். விஜய்- சினேகா இருவரும் ஏற்கனவே வசீகரா படத்தில் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்கள். இந்த ஜோடி தளபதி ரசிகர்களால் கொண்டாட்டப்பட்ட ஜோடி என்பதால் நிச்சயம் இது வொர்க் அவுட் ஆகும் என்ற நம்பிக்கையில் வெங்கட் பிரபு சினேகாவை புக் செய்திருக்கிறார்.
ஏற்கனவே சினேகா பட்டாசு படத்தில் தனுசுக்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக சினேகாவும் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வருகிறார். அப்படி இருக்கும் போது இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்த ஜாக்பாட் போலவே பார்க்கிறார். அதை தவிர சிம்ரன், ஜோதிகா சொன்னது போல் அம்மா கேரக்டரில் நடித்தால் தப்பாகிவிடும் என்ற கண்ணோட்டத்தில் சினேகா இதை துளி கூட யோசிக்கவில்லை. நிச்சயம் சினேகாவிற்கு இந்த படத்தின் மூலம் நல்ல ஒரு கம்பக் கொடுக்கப் போகிறார்.
மேலும் இந்த செப்டம்பர் முதல் வாரத்தில் தளபதி 68க்கான படப்பிடிப்பைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், அமெரிக்காவின் நவீனத் தொழில்நுட்பம் பற்றியும், நினைத்த தோற்றத்தை அதில் கொண்டு வர முடியும் என்ற தகவல் அறிந்ததும் விஜய்யும், வெங்கட்பிரபுவும் அமெரிக்கா பறந்தனர். இந்நிலையில் லியோ இசை வெளியீட்டுக்குப்பின் படப்பிடிப்பைத் தொடங்கும் திட்டத்தில் உள்ளனர்.