இந்தியா : பாரத பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய டிஜிட்டல் பொருளாதாரம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதாக கூறிய நடிகர் மாதவன் பொருளாதாரம் மற்றும் சமூகபேரழிவை ஏற்புடத்தப்போகிறது என தான் நினைத்ததாக கூறியுள்ளார். மேலும் விவசாயிகள் அலைபேசியை பயன்படுத்த கல்வியறிவு தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வியாழனன்று நடந்த கேன்ஸ் திரைப்படவிழாவில் கலந்து கொண்ட நடிகர் மாதவன் தனது திரைப்படமான ராகெட்டரி பற்றி பேசுகையில் பாரத பிரதமர் மோடி குறித்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இந்த 2022க்கான கேன்ஸ் விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூரும் கலந்துகொண்டார். இந்த விழாவில் பேசிய நடிகர் மாதவன்,
“பாரத பிரதமர் மோடி பதவியேற்றதும் மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் கரன்சிகளை அறிமுகப்படுத்தினார். உலகப்பொருளாதார நிபுணர்கள் இது வேலைசெய்யாது. இது பெரும் பேரழிவு என கொந்தளித்தனர். விவசாயிகள் மற்றும்கல்வியறிவில்லாத மக்களை ஒரு ஸ்மார்ட் போனை எப்படி பயன்படுத்த வைப்பது. அவர்கள் வாங்கிக்கணக்கை எப்படி கையாளவைப்பது என விமர்சித்தனர்.
ஆனால் இரண்டே ஆண்டுகளில் அந்த முழுக்கதையும் மாறிப்போனது. இந்தியா உலகின் நுண்ணறிவு பொருளாதாரத்தில் முதல் பயனராக மாறியுள்ளது. மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது. இங்கே ஆரியபட்டர் முதல் சுந்தர்பிச்சை வரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் அசாதாரண கதைகள் நம்மிடம் உள்ளன.
அவற்றைப்பற்றிய திரைப்படங்களை நாங்கள் உருவாக்கவில்லை. உலகம் முழுதும் உள்ள இளைஞர்களுக்கு அவை எடுத்துச்செல்லப்பட வேண்டும்” என கேன்ஸ் விழாவில் நடிகர் மாதவன் பேசியுள்ளார். மேலும் ஆச்சரியத்திலும் ஆச்சர்யமாக நடிகை தீபிகா படுகோனே “இந்தியாவின் மகத்துவம் அனைவருக்கும் புரியவந்துள்ளது. இந்தியாவில் கேன்ஸ் இருக்கும் ஒரு நாள் வரும்” என தேசத்தை புகழ்ந்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.