பொறுக்கி சமுதாயம்…எங்க கற்பு போச்சுன்னு பொறுக்கித்தனம்! ஒட்டு மொத்த சமுதாயத்தையும் சின்மயி இப்படி பேசலாமா.?

0
Follow on Google News

பாலியல் தொந்தரவுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றவர் சினிமா பின்னணி பாடகி சின்மயி. அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்து குறித்து சினிமா துறையை சேர்ந்த மற்றொரு பெண் ஒருவர் தெரிவித்த பாலியல் குற்றசாட்டு குறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்து கவிஞரை சப்போர்ட் செய்யும் ரேப் அப்பாலஜிஸ்ட் எல்லோருக்கும் சமர்ப்பணம் என பதிவு செய்திருந்தார். இதற்கு சிலர் சின்மயிக்கு எதிராக இந்தம்மா போஸ்ட் மட்டும் தான் போடுவாங்க, புகார் கொடுக்க மாட்டாங்க, விளம்பரம் மட்டும் தான் என ஒருவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு சின்மயி கட்டமாக பதிலளித்துள்ளார். அதில், பாலியல் தொந்தரவு பத்தி பேசுன எந்த நபருக்கும் (எல்லா பாலினத்தையும் சேத்து தான் சொல்றேன்) publicity, காசு, வேலை வாய்ப்பு, ஆடம்பரமான வாழ்க்கைன்னு எந்த advantage உம் கிடைக்கல. அவமானம், பண விரயம், வேலை வாய்ப்பு பரிபோனது… போரவன் வற்றவனெல்லாம் பெரிய பருப்பு ஒழுங்கு மாதிரி கருத்த தெரிக்க விடுவான். ஒய்யார கோண்டையாம் தாழம்பூவாம் உள்ள இருக்குமாம் ஈரும் பேனும்னு இவன் வீட்டுக்குள்ள எட்டிப்பாத்தாத்தான் தெரியும் இவய்ங்க வீட்டு நிர்கதி.

எங்க எல்லாருக்கும், அப்பாடா… உண்மைய சொல்லிட்டோம்ன்ற மன நிம்மதி மட்டும்தான். ஆனாலும் இந்த பொறுக்கி சமுதாயம் எங்களத்தான் குத்தம் சொல்லும். இதுக்கெல்லாம் மனச திடபடுத்திட்டு தான் என்னைப்போன்ற பெண்கள் ஆண்கள், மாற்றுப்பாலின மக்கள் அத்தனை பேரும் இந்த society supported sexual abuse அ பத்தி பேச முன்வந்தோம். Why society supported sexual abuse – தெரியுமா? வழி வழியா – பாலியல் குற்றவாளிய விட்டுட்டு பாலியல் குற்றம் யாருக்கு நடந்துதோ – அது எங்களுக்கு அவமானம்னு சொல்லி வள்த்த கேவலமான சமுதாயம்.

நீங்க இவ்வளவு அழுகிப்போனவர்களா இருந்துர்க்கலைன்னா பாலியல் பிரச்சனைகள் என்னிக்கோ நின்னு போயிருக்குமே? நீங்க எங்கள வாய மூடச்சொல்லி பாலியல் குற்றவாளிக்குத்தானே தீவிட்டி பிடிச்சுட்டு இருதீங்க? எவ்வளவு கேவலமான பிறவிங்களா இருந்தா – எங்க மேல ஒரு குற்றம் நடந்தா எதுக்கு காரனம் நாங்க தான் எங்க தப்பு தான் எங்களுக்கு தான் அவமானம், எங்க கற்ப்பு போச்சுன்னு பொறுக்கித்தனம் பண்ணிட்டு இருப்பீங்க?

அதெல்லம் உண்மையில்லன்னு இப்ப நாங்க தைரியமா சொல்றோம். சொல்லிட்டே தான் இருப்போம். வயிறு ஏரியுதா? பொயீ ஜெலுசில் குடிங்க. உங்க வீட்ல ஒருத்தன் மாட்டிருவான்னு அவன காப்பாத்த try பண்றீங்களா? அதத்தானே வழிவழியா பண்ணிட்டு திரிஞ்சுட்டு இருக்கீங்க? உங்க கலாசாரமும் குடும்ப கட்டுப்பாடும் எந்த அளவுக்கு நாருதுன்னா, இந்த 3 ஆண்டுகள்ள உங்க வீட்டு பெண்கள் / ஆண்கள் பெத்தவங்கள நம்பாம எங்கிட்ட வந்து உங்க குடும்ப பாலியல் குற்றங்கள பத்தி சொல்றாங்க. அந்த அழகுல நீங்க இருக்கீங்க (டு ஹூம்சொ எவர் இட் மே கன்சர்ன்)

என்னவா இருந்தாலும் தொடர்ந்து இதப்பத்தி பேசிட்டு இருக்கேன். எவன் என்ன சொன்னாலும், பொறுக்கித்தனம் பண்ணாலும், அவங்க குடும்பம் அவங்க வளர்ப்பு அப்படின்னு என்னால கடந்து போக முடியும். இந்த சமுதாயம் முற்ப்போக்கு மண்ணாங்கட்டியெல்லாம் ஒண்ணுமில்ல. கேவலமான rape apologists சமுதாயம் தான். இது மாறுமோ அழிஞ்சு நாசமாபோகுமோ யாருக்கு தெரியும்?

முக்கியமா இங்க இருக்க எந்த மொகறை கிட்டருந்தும் எனக்கு இந்த பிரச்சனைனால publicity வேண்டாம். அதனால எனக்கு எந்த gain உம் இல்லன்னு வழி வழியா பாலியல் குற்றவாளி நலச்சங்கம் நடத்தும் நபர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன், வணக்கம் என சின்மயி தெரிவித்துள்ளார்.

அறிவாலயம் பக்கமே வர கூடாது.. சுந்தரவல்லி விரட்டியடிப்பா. கதறும் பிரசன்னா கண்டுகொள்ளாத திமுக ..