டிமாண்டி காலணி வசூல் சாதனை…தங்கலானை பின்னுக்கு தள்ளிய பரிதாபம்..

0
Follow on Google News

டிமான்டி காலனி அருள்நிதி நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், 2015 ஆம் ஆண்டே வெளியானது. அப்போதே இந்த படம் ஒரு திகில் அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்ததால் மாபெரும் வெற்றியும் பெற்றது. இந்நிலையில்தான் இந்த படத்தின் இரண்டாம் பாகமானது ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. குறிப்பாக டிமாண்ட் காலனியின் முதல் பாகத்தை எந்த அளவு ரசிகர்கள் கொண்டாடினார்களோ, அதே போல் தான் இரண்டாம் பாகத்தையும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த படம் ரிலீஸ் ஆனா முதல் நாளிலிருந்தே எந்த ஒரு நெகட்டிவ் விமர்சனங்களையும் பெறாமல், வசூலிலும் சக்க போடு போட்டு வருகிறது. குறிப்பாக பிரம்மாண்டத்தின் உச்சத்தில், 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில், பா.ரஞ்சித் இயக்கத்தில் அதே நாளில் வெளியான தங்கலான் படத்தையே, டிமான்டி காலனி 2, தூக்கி சாப்பிட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும், Highest-ல் இருப்பது டிமான்டி காலனி 2 தான்.

இந்நிலையில்தான் டிமான்டி காலனி2 மற்றும் தங்கலான் படங்கள் நேருக்கு நேர் மோதியதில் எந்த படம் அதிக வசூல் சாதனை பெற்றுள்ளது என்ற தகவல்கள் வெளியாகி, ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெரிய நடிகர், பெரிய பட்ஜெட் படம் என்றும் பாராமல், தங்கலான் படத்துடன், டிமான்டி காலனி 2 படம் வெளியாகியிருந்தது.

அதேபோல் இந்த போட்டியில், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி பெற்றது டிமான்டி காலனி 2 படம் தான். குறிப்பாக விக்ரம் நடித்து, தோல்வி படமான கோப்ரா படத்தை இயக்கிய, அஜய் ஞானமுத்து தான் டிமான்டி காலனி 2 படத்தை இயக்கி, விக்ரமின் தங்கலான் படத்திற்கு எதிராகவே வெளியிட்டு, இப்படத்தை வெற்றி படமாக்கியுள்ளார் என்பது பெரும் பேசிப் பொருள் ஆகியுள்ளது.

விக்ரம் மற்றும் பா.ரஞ்சித் கூட்டணியில், பிரம்மாண்டமான விளம்பரங்கள், அதிகப்படியான திரையரங்குகள் என, தங்கலான் திரைப்படம் மொத்த திரையையும் ஆதிக்கம் செலுத்திய சூழலில், டிமான்டி காலனி2 தாக்குபிடிக்குமா என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது. மேலும் பிரியா பவானி சங்கர் நடித்தால் படம் ஓடாது, இந்தியன் 2 படமோ அவரால் தான் பிளாப்பானது என்றெல்லாம் ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.

ஆனால் அந்த விமர்சனங்களுக்கெல்லாம், இப்படத்தின் வெற்றி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது என்றும் சொல்லலாம். அதாவது, தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான தங்கலான் படத்தின் முதல் நாள் மொத்த வசூல் 11 கோடி ரூபாய் தான். ஆனால் 290 திரையரங்குகளில் மட்டுமே வெளியான டிமான்டி காலனி 2 படத்தின் முதல் நாள் வசூல் 3.70 கோடி ரூபாய்.

அதாவது அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் விக்ரம் நடித்த தங்கலான் படம் 11 கோடி தான் வாங்கி இருக்கும் சூழலில், மிகக் குறைந்த பட்ஜெட்டிலேயே ரிலீஸ் ஆன டிமான்டி காலனி 2 கிட்டத்தட்ட நான்கு கோடி அளவில் வசூல் படைத்துள்ளது பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது. அதோடு முதல் நாளிலேயே தங்கலானுக்கு அதிக அளவு நெகட்டிவ் விமர்சனங்கள் வர ஆரம்பித்ததால், மக்கள் அப்படியே டிமான்டி காலனி 2 பக்கம் சரிய ஆரம்பித்து விட்டனர்.

இதையடுத்து வார விடுமுறை நாட்களில் டிமாண்டி காலணிக்கு ஷோக்கள் அதிகரிக்கப்பட்டன. இரண்டாவது வாரத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் டிமாண்டி காலணிக்கு தங்கலானை விட அதிக ஷோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் இந்த படம் முதல் வார இறுதியில் 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் டிமான்டி காலனி 2 படத்தின் படக்குழுவினரும் அப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். ஆனால் தங்கலான் படத்தின் கதையை சொதப்பி வைத்த பா.ரஞ்சித் படம் தோல்வி அடைந்ததால், தற்போது ஆல் அட்ரஸ் இல்லாமல் மறைந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.