1990 களில் தமிழ்- மலையாளம் திரையுரங்கில் கிட்டதட்ட 100 படங்களுக்கு மேல் நடித்தவர்தான் விசித்ரா. இவர் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியின் வலிமையான போட்டியாளர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கையில் நடந்த துயரமான அல்லது மோசமான சம்பவத்தை சக போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.
அந்த வகையில் இந்த சீசன் போட்டியாளர்களும் வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவத்தை பகிர்ந்துகொண்டனர். இதில் நடிகை விசித்ரா கூறிய விஷயங்கள் பூதாகரமாகியுள்ளது. இந்த டாஸ்கில் பேசிய விசித்ரா, 2001 ஆம் ஆண்டு ஒரு தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது பாலியல் தொந்தரவு ஏற்பட்டது. சென்னை திரும்பிய பிறகு இந்த சம்பவம் குறித்து நடிகர்கள் சங்கத்தில் புகார் செய்திருந்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அந்த படத்தின் ஷூட்டிங் கேரளாவில் மலப்புழாவில் நடந்தது. அதனால் அங்குள்ள ஒரு ஹோட்டலில் நான் தங்கி இருந்தேன். அந்த ஹோட்டலில் தான் என்னுடைய வருங்கால கணவரை நான் சந்தித்தேன். அவர் ஜெனரல் மேனேஜராக அந்த ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த படத்தில் ஹீரோவிடம் நான் இந்த படத்தில் தான் நடிக்கிறேன் என்பதை அறிமுகம் செய்வதற்காக போனேன்.
ஆனால் அவர் என்னுடைய பெயரைக் கூட கேட்கவில்லை. நீ இந்த படத்தில் நடிக்கிறாயா? அப்போ நைட்டு ரூமுக்கு வந்துடு என்று சொல்லிவிட்டு சென்றார். அவர் அப்படி சொன்னதுமே எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. பிறகு நான் என்னுடைய ரூமுக்கு சென்று தூங்கிவிட்டேன். அதனால் ஒரு சிலர் இரவில் என்னுடைய அறையை வந்து தட்டி ரகளை செய்திருந்தனர். இதனால் நான் மிகவும் பயந்தேன். எப்படியாவது சூட்டிங் முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். சில நாட்கள் கழித்து காட்டுக்குள் படப்பிடிப்பு நடைபெற்றது. கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்.
கூட்டத்தில் கலவரம் நடப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் அங்கேயும் இங்கேயும் ஓட வேண்டும். அச்சமயத்தில் யாரோ ஒருவன் என்னை தவறான எண்ணத்தில் தொடுவதை உணர்ந்தேன். முதலில் தெரியாமல் நடந்திருக்க கூடும் என நினைத்தேன். ஆனால் அடுத்த டேக் செல்லும் போதும் தகாத தொடுதலை உணர்ந்தேன்.
மூன்றாவது டேக்கில் அந்த நபரின் கையை பிடித்துவிட்டேன். அவனை வெளியே இழுத்து ஸ்டண்ட் மாஸ்டரிடம் அழைத்து சென்று தவறான எண்ணத்தில் தொடுகிறான் என்று கூறினேன். ஹீரோ, ஹீரோயின், ஜூனியர் ஆர்டிஸ்ட் என பலரும் அங்கிருந்தனர். அடுத்த நிமிடம் எனது கண்ணத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் பளார் என அறைந்தார். படப்பிடிப்பு தளத்தை விட்டு அழுதுகொண்டே வெளியேறினேன். விசித்ராவின் மோசமான கதையை கேட்டு சகபோட்டியாளர்கள் மனம் உடைந்தனர்.
விசித்ரா அளித்த புகார் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தியையும் சிலர் பதிவிட்டுள்ளனர். அப்படம் தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பலேவடிவி வாசு எனத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பிரபல திரை விமர்சகரும் அரசியல் விமர்சகருமான டாக்டர் காந்தராஜ் ஒரு விஷயத்தை பகிர்ந்தார். அதாவது சினிமாவில் முத்தக்காட்சி, ரேப் காட்சி என அனைத்தும் வெளிப்படையாகவே அரங்கேறி வருகிறது. இன்னும் அதில் மீதம் என்ன இருக்கிறது. இதில் எல்லாம் நடித்து அவர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று சொல்வதெல்லாம் அபத்தம் என்று காந்தராஜ் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் ஹோட்டலில் ஒரு டேபிளில் உட்கார்ந்திருந்தாராம். அவருக்கு அடுத்து இரண்டு டேபிள் தள்ளி ஒரு பெண் உட்கார்ந்திருந்தாராம். திடீரென அந்த பெண் ஹோட்டல் மேனேஜரிடம் ‘அந்த நடிகர் என்னை தொந்தரவு செய்கிறார்’ என கூறினாராம். உடனே அந்த மேனேஜர் அந்த நடிகரிடம் போய் கேட்க நான் எதுவுமே செய்யவில்லையே. அந்த பெண்ணையும் பார்க்கவில்லையே என்று கூறியிருக்கிறார். இதை அந்த பெண்ணிடம் கேட்க ‘ஆமாம் அவர் எதுவும் செய்யாததுதான் எனக்கு தொந்தரவாக இருக்கிறது’ என கூறினாராம்.
இது போன்று தான் விசித்திரா கூறுவது உள்ளது. ஒரு வேளை பாலகிருஷ்ணாவை அடைய விசித்ரா முயற்சி செய்து முடியாமல் போயிருக்கலாம். அதனால் கூட அவர் மீது வீண் பழி போட்டிருக்கலாம். அந்த காலத்தில் பாலகிருஷ்ணாவுக்கு எத்தனை பெண் ரசிகைகள் இருந்தார்கள். அந்தளவுக்கு ஆணழகனாக இருந்தார் பாலகிருஷ்ணன். அதனால்தான் விசித்ரா இப்படி சொல்லியிருப்பார் என காந்தராஜ் கூறியுள்ளார்.