பிக் பாஸ் எழாவது சீசனில் இந்த முறை கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவண விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிச்சந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, விஜய் வர்மா, ஐஷு ஆகியோர் போட்டியிட்டு இருக்கிறார்கள்.
சமீபத்தில் முடிவடைந்த கல்வி பிரச்னையில் ஜோவிகா மற்றும் விசித்ரா இருவருக்கும் கமல் தனது ஆதரவைத் தெரிவித்தார். ஆனால் கடந்த வார கேப்டன் விஜய் வர்மாவை மிரட்டும் தொனியில் பிரதீப்பிடம் பேசியதற்கு, ஸ்டிரைக் என மஞ்சள் அட்டை கொடுத்து கமல் வன்மையாக கண்டித்துள்ளார்.மேலும் இரண்டு மஞ்சள் அட்டை கொடுத்தால் விஜய் வர்மா வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என கமல் எச்சரித்துள்ளார். அவரை தொடர்ந்து முதல் நபராக பிக் பாஸ் வீட்டில் இருந்து அனன்யா வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பவாவும் வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கமலின் செல்ல பிள்ளையாக நுழைந்தவர் தான் எழுத்தாளரும் ஸ்டோரி டெல்லருமான பவா செல்லதுரை. இவரை தொடக்கத்தில் ஆஹா ஓஹோன்னு புகழ்ந்தார்கள். ஆனால் இவர் சொன்ன கதையை கேட்டதும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள், அது குறித்து பெரிதும் விமர்சித்தனர். அது மட்டுமல்ல பவா சொன்ன கதையும் ஸ்ட்ராங்காவே இல்லை. அவர் சொன்ன பிழை என்ற கதை கிளைமாக்ஸையே மாற்றி விட்டுட்டாரு. அந்த கதையில் என்ன சொல்ல வந்திருந்தார்கள் என்பதை சனிக்கிழமை நிகழ்ச்சியில் கமல் தெளிவுபடுத்தினார். உண்மையாகவே கமல் பவா செல்லத்துரையை பிக் பாஸ் வீட்டிற்குள் வர வைத்து வச்சு செஞ்சு விட்டுட்டாரு.
இந்த நிலையில் பவா செல்லத்துரை வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். பிக் பாஸ் சீசன்களில் ரசிகர்களால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் உள்ளனர். அதேபோல் சிலர் தங்களால் இந்த வீட்டுக்குள் இருக்க முடியவில்லை என தானாகவே முன்வந்தும் வெளியே உள்ளனர். அந்த வகையில் ஓவியா, பரணி ஆகியோர் தாமாக வெளியேறிய நிலையில் பவா செல்லதுரையும் இந்த சூழல் தனக்கு பிடிக்கவில்லை என்று வெளியேறிவிட்டார். ஒரு மிகச் சிறந்த கதை ஆசிரியராக பார்க்கப்பட்ட இவர் மிக குறுகிய காலத்திலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது மிகவும் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது.
அனிச்சை செயல்கள், வயது, டாஸ்க்கில் அதிகம் ஈடுபாட்டோடு இல்லாதது என்று பிக் பாஸ் போட்டியாளர்கள் விமர்சிக்கத் தொடங்கினர். மக்களிடையே நல்ல பெயரை வைத்துள்ள பவா, பிக்பாஸில் இருந்து வெளியேறினாலே மிச்சம் மரியாதையை காப்பாற்றிக்கொள்வார் என்று பேசப்பட்டது. இந்நிலையில், முதல் வாரம் முடிந்த கையோடு, உடல்நலத்தை காரணமாக வைத்து வெளியேறியுள்ளார் பவா. இவருக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டதாக தெரிகிறது.
பிக் பாஸ் ஒருவரை போட்டியாளராக தேர்வு செய்வதும், அவர் வந்த வேகத்தில் என்னால் இருக்க முடியாது என கிளம்புவதும் இது ஒன்றும் முதல் முறை அல்ல. கடந்த சீசனில் நிறைய என்டர்டெயின்மென்ட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜி.பி. முத்து இப்படித் தான் முடியாது, முடியாது என்னால இனியும் முடியாது என கிளம்பிச் சென்றார்.
பிரபல எழுத்தாளராக அறியப்படும் பவா செல்லதுரை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஒரு எழுத்தாளராகவும் பதிப்பாசிரியராகவும் இருந்து வருகிறார். மொழிபெயர்ப்புகளையும் செய்துவருவதோடு, வம்சி புக்ஸ் என்று புத்தக நிலையம் மற்றும் பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். கதை சொல்லும் நிகழ்ச்சிகளில் கேட்போரை கட்டிப்போடும் இவர், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
பவா கதை சொன்ன வீடியோக்கள் இன்றளவும் யூடியூப் தளத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கியப் பிரிவான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் பவா. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த சங்கத்தில் இருந்து விலகிவிட்டதாக தெரிகிறது