பெட்டில் நடக்கும் கசமுசா… நிக்சன் – ஐசு அட்டூழியம்… தடை செய்யப்படுமா பிக் பாஸ் நிகழ்ச்சி..

0
Follow on Google News

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை போட்டியாளர்கள் புதுப்புது பிரச்சினைகளை டிசைன் டிசைன்களாக உருவாக்கிக் கொண்டுதான் இருக்கின்றனர். இதனாலேயே விறுவிறுப்புக்கும் பஞ்சாயத்துக்கும் பஞ்சமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒரு போக்கில் இருந்தால், நிக்சன் மட்டும் எப்போதுமே ஐசுவின் பின்னாடியே சுற்றுவதை வேலையாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டில் செய்யும் அட்டூழியங்களைப் பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை வறுத்தெடுத்து வருகின்றனர். இருப்பினும், நாளுக்கு நாள் நிக்சன் செய்யும் சேட்டைகள் அதிகமாகவே தான் இருக்கிறது.

தற்போது, பெட்டில் படுத்திருந்த ஐசுவை தூங்கவிடாமல் நிக்சன் செய்த காட்சிகள் வைரலாகி வருகிறது. நிக்சனின் இந்த தரங்கெட்ட செயலுக்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வீடியோவில், பிக்பாஸ் வீட்டில் ஒரு பெட்டில் மாயா, பூர்ணிமா, ஐசு ஆகியோர் படுத்து இருக்கின்றனர். அப்போது அங்கு வந்த நிக்சன் ஐசுவின் காலை பிடித்து தரத்தரவென்று இழுக்கிறார்.

உடனே ஆத்திரம் அடைந்த ஐஷு, நைட்லயும் தூங்க விட மாட்ட பகல்லையும் தூங்க விடமாட்டேன்கிற என்று பலத்த குரலில் கத்துகிறார். இந்த வீடியோ காட்சிகள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. அந்த அளவிற்கு நிக்சன் அபாயகரமாக ஐசுவை இழுத்திருக்கிறார். ஏற்கனவே பெண்களின் பாதுகாப்பை கருதி போட்டியாளர் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய கமலஹாசன் கண்ணுக்கு நிக்சன் செய்யும் அட்ரா சிட்டிகள் தெரியவில்லையா என்று இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருவதால், இது போன்ற காட்சிகளை ஒளிபரப்பும் விஜய் தொலைக்காட்சிக்கும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நிக்சனுக்கு வெகு விரைவில் கமலஹாசன் முடிவு கட்ட வேண்டும் என்று மக்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த முறை கமலஹாசன் முடிவு கட்டுகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் பிக்பாஸ் வீட்டில் நிக்சன் இரவும் பகலும் ஐசுவை தூங்கவிடாமல் சில்மிஷம் செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன. இதைப் பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் நிக்சன் செய்யும் லீலைகளை எடிட் செய்யாமல் ஒளிபரப்பும் விஜய் தொலைக்காட்சிக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்பு கூட, நிக்சன் – ஐஷு இருவரும் மைக்கை கழட்டி விட்டு ரொமான்டிக்காக பேசி முத்தம் கொடுத்த வீடியோக்கள் வெளியாகி வைரலானது. இரண்டாக பிரிக்கப்பட்டுள்ள பிக் பாஸ் வீட்டில் ஒரு பக்கம் ஐஷு இருக்க, மறுப்பக்கம் கண்ணாடிக்குள் இருக்கும் நிக்சனைப் ஐஷு கிஸ் அடிக்க முயற்சிக்கிறார் ஆனால் கண்ணாடி தடுக்கிறது. அதே போன்று நிக்சன் – ஐஷு இருவரும் ஸ்மோக்கிங் ஏரியாவிற்குள் சென்று விட்டு அங்கே பேசுகின்றனர்.

அங்கு கேமரா மைக் கிடையாது. எனவே நமக்கு சில சத்தம் மட்டுமே கேட்க்கும். அதன் படி அவர்கள் ஏதோ முத்தம் கொடுப்பது போன்ற சத்தம் வருவதாக ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது போன்று நாளுக்கு நாள் நிக்சன் – ஐஷு இருவரின் அட்டூழியம் பிக் பாஸ் வீட்டில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.