இழுத்து மூட படுகிறதா பிக் பாஸ் நிகழ்ச்சி…என்னய்யா நடக்குது உள்ள..பாய்கிறது தகவல் அறியும் உரிமை சட்டம்…

0
Follow on Google News

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி மூலம் நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக அவதாரம் எடுத்தார். இந்த நிகழ்ச்சி மாபெரும் வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் என்றே சொல்லலாம். அவர் தொகுத்து வழங்கும் விதம் மற்றும் மக்களின் குரலாக போட்டியாளர்களிடம் பேசுவது, அவர்கள் தப்பு செய்தால் தட்டிக் கேட்பது என இவர் சிறந்த முறையில் தொகுத்து வழங்கியதால் அந்நிகழ்ச்சிக்கான மவுசும் நாளுக்கு நாள் அதிகரித்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனை எட்டி உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முந்தைய சீசன்களைப் போல் இல்லாமல் இந்த சீசனில் ஒரு தொகுப்பாளராக கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார் கமல்ஹாசன். பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது முதல் கடந்த வாரம் நிக்சன் – நிவிஷா விவகாரத்தை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றது வரை கமல்ஹாசன் சந்தித்த சர்ச்சைகள் ஏராளம் உள்ளன.

இதனால் கமல்ஹாசனின் பெயரும் டேமேஜ் ஆகி வருகிறது. குறிப்பாக சோசியல் மீடியாவில் கமலை ஏராளமானோர் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த ஷோவிலேயே தப்பை தட்டிக்கேட்காத நீங்கள் அரசியலுக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியால் கமல்ஹாசனின் அரசியல் வாழ்க்கையும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி வருகிறது.

இந்நிலையில் தென்னரசு என்பவர் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக மனு ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த மனுவில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பவர்கள் போட்டியாளர்களா? அல்லது நடிகர்களா? மேலும் இது போட்டி என்றால் அதற்கு அரசு அனுமதி இருக்கிறதா? மேலும், இந்த போட்டி மன உளைச்சலை தருகிறது. தனிநபரை இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு உட்படுத்த சட்டத்தில் அனுமதி இருக்கிறதா?

உளவியல் ரீதியான கோளாறுகள் வந்தால் என்ன செய்வது? நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் உடுத்தும் உடை அவர்களின் விருப்பமா? அல்லது நிகழ்ச்சி தரப்பிலிருந்து வடிவமைக்கப்பட்டதா? அதே போன்று போட்டியாளர்களுக்கு மனநிலை சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவ குழு இருக்கிறதா?
என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ள அவர், பொது மனித நலனை கருத்தில் கொண்டு இந்த கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளிக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் இல்லத்தரசிகள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், குறிப்பாக இளம் பெண்கள் இதை நிஜ வாழ்க்கையிலும் ஒப்பிட்டு கடைபிடிக்க வாய்ப்புண்டு. அப்படி என்றால் இது நிஜ வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனை மனதில் வைத்து பதில் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தென்னரசு என்பவர் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் பிக் பாஸ் குறித்து பல கேள்விகளை கேட்டுள்ள நிலையில், இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் வெளியானால், இதெல்லாம் செட்டிங் தான, என்கிற உண்மை தெரிந்து விடும் என்றும், மேலும் கமல்ஹாசன் மட்டுமில்லை பிக் பாஸ் நிகழ்ச்சியை இழுத்து மூடும் அளவுக்கு சென்று விடும் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்..