பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இதுவரைக்கும் இல்லாத வகையில் பல மாற்றங்கள் கொண்டு வந்திருக்கிறது. ஏற்கனவே இந்த சீசனில் இரண்டு வீடு கான்செப்ட் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதுவரைக்கும் இந்த மாதிரி ஒரு ஏற்பாடு தமிழ் சீசனில் இல்லாத நிலையில் இது முதல்முறையாக இருக்கிறது. அதுபோல இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த முறை 5 போட்டியாளர்கள் அதிரடியாக வைல்ட் கார்டாக ஒரே நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதுவும் கிட்டத்தட்ட நான்கு வாரங்களை கடந்த நிலையில் ஐந்து போட்டியாளர்கள் உள்ளே நுழைந்ததால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த விளையாட்டு வேறு விதமாக மாறி இருந்தது. அதுவரைக்கும் ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் விறுவிறுப்பு ஏற்படாமல் இருந்தாலும் வைல்ட் கார்ட் என்ட்ரிக்குப் பிறகு இந்த நிகழ்ச்சி வேற லெவலில் சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ஏற்கனவே இந்த நிகழ்ச்சிகளில் இருந்து எலிமினேஷன் ஆகி வெளியே போன மூன்று போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வருவது குறித்து புது டாஸ்க் தொடங்கி இருக்கிறது இந்நிலையில் பிக் பாஸ் இல்லத்தில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையை புரட்டிப்போட்ட சம்பவம் குறித்துப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் பேசிய நடிகை விசித்ரா தெலுங்கில் முன்னணி ஹீரோ ஒருவரின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது அந்த ஹீரோ தன்னைப் பார்த்த உடனேயே பெயரை கூட கேட்காமல் ‘கம் டு மை ரூம்’ என அறைக்கு அழைத்ததாகவும், அடுத்த நாள் படப்பிடிப்பில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைப் பற்றி சொன்னபோது ஸ்டன்ட் மாஸ்டர் தன்னை கன்னத்தில் அறைந்தது பற்றியும் கண்ணீர் மல்க பேசினார்.
இதனால்தான், தான் சினிமாவில் நடிப்பதை விட்டு விலகியதாகவும் அவர் கூறினார். அவர் கூறியது பிக்பாஸ் இல்லத்தில் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் பேசு பொருளானது. விசித்ரா பேசுகையில் தன்னை அறைக்கு அழைத்த நடிகர் பெயரும், கன்னத்தில் அறைந்த ஸ்டன்ட் மாஸ்டரின் பெயரும் ம்யூட் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து விசித்ராவின் கணவர் கூறியிருப்பது, அந்த சம்பவம் உண்மை தான் என்றும் தனது ஹோட்டலில் தான் அப்படியொரு பிரச்சனையை விசித்ரா சந்தித்த போது ஒரு மனிதனாக அவருக்கு உதவினேன். அதற்காக என்னிடமே அந்த நடிகரின் ஆட்கள் பிரச்சனையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் திருமணத்தின் போதும் கூட அந்த நடிகர் எனக்கு நேரடியாகவே மிரட்டல் விடுத்தார் என பாலகிருஷ்ணாவின் பெயரை சொல்லாமலே ஷாஜியும் அந்த பேட்டியில் பிரபல தெலுங்கு நடிகர் என்பதை மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேசிய அவர், “விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அப்போது செயலாளர் ஒருவர் இதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம் என கூறியதால் தான் இதில் ஆக்ஷன் எடுக்கப்படவில்லை. நடிகர் சங்கத்தில் இருந்துகூட தனக்கு சப்போர்ட் கிடைக்கவில்லை என விசித்ரா மிகவும் வருத்தப்பட்டார். அவர் சினிமாவை விட்டு விலக அதுவும் ஒரு காரணம் தான். இந்த டாபிக் பற்றி பேசினாலே அவர் ரொம்ப லோ ஆகி விடுவார்.
திருமணத்திற்கு பிறகு இப்போது தான் இதைப் பற்றி பேசி இருக்கிறார். என் பெரிய மகன் வந்து இது போன்ற பிரச்சனை இருந்ததா? என்று கேட்கிறான். அவனுக்கு 21 வயதாகிறது. இப்போது வரை நாங்கள் இதை அவனிடம் சொன்னதே இல்லை. என் மகன்கள் யாருக்கும் இந்த விஷயம் தெரியாது. இந்த சம்பவம் ஒரு கசப்பான அனுபவம். அதை மறக்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம். அப்படி இருக்கும்போது ஏன் இதை விசித்தரா சொன்னார் என்று தெரியவில்லை. எனக்கே பார்க்கும்போது அதிர்ச்சியாக இருந்தது.
இதை பற்றி நாங்கள் இருவருமே பேசிக் கொண்டதில்லை. ஆனால், ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசினார் என்று தெரியவில்லை. என் பெரிய மகன் இதை பார்த்துவிட்டு கல்லூரிக்கு கூட போகவில்லை. மனமடைந்து விட்டான்.இனிமேல் தான் நான் அவரிடம் இதைப் பற்றி பேசி சமாதானம் செய்ய வேண்டும். போலீஸில் புகார் அளித்து பல வழக்குகளை சந்தித்தும் இந்த விவகாரத்தை விட்டு விடுங்க என்றே சமாதானம் செய்தனர். கமல்ஹாசன் நிச்சயமாக இந்த வாரம் அந்த டாப்பிக்கை அப்படியே கடந்து போய் விடுவார் என்றே ஷாஜி உறுதியாக கூறியுள்ளார்