சுனிதாவை இறுக்கி பிடுச்சு புரட்டி எடுத்த முத்துக்குமரன்… அட கருமம் பிடுச்ச பிக் பாஸ் … முத்துகுமாரனுக்கு ரெட் கார்டு ரெடி..

0
Follow on Google News

பிக் பாஸ் வீட்டில் கில்லர் காயின் டாஸ்க் என்று ஒன்று அரங்கேறியது. இதில் ஆண்கள் ஒரு பக்கம், பெண்கள் ஒரு பக்கமாக இருக்கிறார்கள். நடுவில் கில்லர் பாயிண்ட் இருக்கும். அந்த கில்லர் காயினை ஆண்கள் எடுத்து பெண்கள் மீதும் பெண்கள் எடுத்த ஆண்கள் மீதும் ஒட்ட வேண்டும். அப்போது ஒரு பல்சர் அடிக்கும் பொழுது யார் மேலே கில்லர் காயின் ஒட்டி இருக்கோ அவர்கள் அவுட் ஆகி வெளியே செல்ல வேண்டும்.

இது மாதிரி ஐந்து ரவுண்ட் நடக்கும், அந்த ஐந்து ரவுண்டு முடிவில் யார் பக்கம் அதிக நபர் இருக்கிறார்களோ அவர்கள் வெற்றி, இதுதான் இந்த டாஸ்க். இந்த கில்லர் பாயிண்ட் டாஸ்கில் ஆண்கள் ரொம்ப மோசமாக விளையாடி விட்டார்கள், ஆண்களின் பலத்தை பயன்படுத்தி தவறாக நடந்து கொண்டார்கள், இது மாதிரி ஒரு கேவலமான ஒரு முறையை பயன்படுத்தி தான் ஆண்கள் அணியினர் விளையாட வேண்டுமா என்றும்.

அதே நேரத்தில் இதில் கேவலமான விளையாண்ட முத்துவிற்கு கண்டிப்பாக ரெட் கார்டு கொடுத்து ஆக வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் முத்து குமரனுக்கு ரெட் கார்ட் கொடுத்து ஆக வேண்டுமா.? உள்ளே நடந்தது என்ன என்பதை விரிவாக பார்க்கலாம். இந்த டாஸ்க் தொடங்குவதற்கு முன்பு ஆண்கள் பெண்கள் அணி இருவருமே ஒவ்வொரு எப்படி விளையாட வேண்டும் என பிளான் செய்கிறார்கள்.

ஆண்கள் அணியினர் ஒருவரை லாக் செய்து அவர்கள் மீது காயினை ஒட்டி பிடித்துக் கொள்கிறார்கள். பெண்கள் எவ்வளவோ இழுத்தாலும் அவர்களை ஆண்கள் அமுக்கி பிடித்து வ விடுகிறார்கள். இதைத்தான் ஆண்கள் அணியினர் எல்லாவருக்கும் செய்து வருகிறார்கள். இப்படி அனைவரும் சேர்ந்து பெண்களை அமுக்கி பிடித்துக் கொண்டால் அவர்களால் எப்படி வெளியே வருவார்கள்.

இதில் இந்த டாஸ்கே ஒரு தவறான டாஸ்க் அப்படி இருக்கும் பொழுது விளையாடுகின்றவர்கள் தவறாக விளையாடுகிறார்கள் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில் கேள்வி பிக் பாஸ் ஐ நோக்கி தான் எழுப்ப வேண்டும். இது மாதிரி அவர் கேவலமான டாஸ்குக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றால் முதலில் பிக் பாஸ்க்கு தான் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும்.

அந்த வகையில் முத்துக்குமாரன் பெண்களை முரட்டு பிடி பிடித்து, புரட்டி எடுத்தது அதாவது சுனிதாவை உயிர் போகும் அளவிற்கு முரட்டு பிடி பிடித்து புரட்டி எடுத்திருப்பார் முத்துக்குமரன். இதை பார்க்கின்றவர்களுக்கு அய்யோ அந்த பெண்ணுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயமே, இருந்தாலும் முத்து ஏன் இந்த அளவு ஏன் இவ்வளவு கொடூரமா சுனிதாவிடம் நடந்து கொண்டார் என்பதற்கு,

இந்த போட்டி முடிந்ததும் சுனிதாவே முத்து நல்லாதான் விளையாடினார் என்று சர்டிபிகேட்டை கொடுக்கும் பொழுது பாதிக்கப்பட்ட பெண்ணே அவருக்கு ஆதரவாக பேசும் போது முத்துகுமரனுக்கு ரெட் கார்டு கொடுக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நிச்சயமாக பிக் பாஸ் குழுவினரை கடுமையாக கண்டிக்க வேண்டும் இதுபோன்ற டாஸ்க்களை கொடுத்தால் நான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என்று மேடையிலே எச்சரிக்க வேண்டும்.

இல்லையென்றால் விஜய் சேதுபதி இது போன்ற கேவலமான போட்டியை அனுமதிக்கிறாரா என்கின்ற ஒரு கேள்வி எழுந்து வருகிறது, அந்த வகையில் போட்டியாளர்களை விஜய் சேதுபதி இந்த வாரம் கண்டிப்பதற்கு முன்பு பிக் பாஸ் குழுவினரை கடுமையான கண்டிக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் விஜய் சேதுபதி துணிந்து பிக் பாஸ் குழுவினரை கண்டிப்பாரா என்று உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here