மானம், மரியாதை எல்லாம் போச்சு… பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் கமல்…

0
Follow on Google News

தொலைக்காட்சி ரசிகர்களுக்கு விருந்தாக கடந்த 2017ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமான முறையில் விஜய் டிவியில் துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்களாக வெற்றிகரமான முறையில் நடைபெற்று வருகிறது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு சீசன் 7 மூலம் கமல் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அவரின் கருத்துக்கு பல விமர்சனங்கள் இருந்தும் வருகின்றது…

குறிப்பாக பிரதீப் விஷயத்தில் கமல் செய்தது குறித்து ரசிகர்கள் பலரும் எதிர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…வாய்ப்பு கொடுக்கவில்லை என விமர்சனம் எழுந்து வந்தது. அதே போல் நெட்டிசன்கள் பலரும் கமலை கிண்டல் செய்து வரும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியினால் தன்னுடைய மானம் மரியாதை எல்லாம் போச்சே என வருத்தத்தில் இருக்கும் கமல்ஹாசன். கமல் ஒரு அதிரடி முடிவு செய்துள்ளாராம். அதாவது இனி வரும் அடுத்தடுத்த பிக் பாஸ் சீசன்களை கமல் தொகுத்து வழங்கப்போவதில்லையாம்.

பிக் பாஸ் 7 தான் கமல் ஹாசனின் கடைசி சீசன் என்று கூறப்படுகிறது. அடுத்த பிக் பாஸ் 8 சீசனை வேறொரு நட்சத்திரம் தான் தொகுத்து வழங்க போகிறார் என்கின்றனர். நிச்சயம் கமல் போல யார் வருவார் என அனைவரும் பேசி வருகின்றனர். மறுபக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரின் முகத்திரையும் கிழிக்கப்பட்டு வருகிறது. இதுவே நாளுக்கு நாள் நிகழ்ச்சியின் போக்கை சுவாரஸ்யப்படுத்தி கொண்டிருக்கிறது.

அதில் இந்த வாரம் பல ரணகள சம்பவங்கள் நடந்து வருகிறது. அதனாலேயே ஆண்டவரின் விசாரணையும் அர்ச்சனையும் பலமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க இந்த வாரம் வீட்டை விட்டு யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. அதில் தற்போதைய ஓட்டிங் நிலவரப்படி விசித்ரா தான் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறார்.

பிரதீப் வெளியேறிய பின்பு இவருக்கான ரசிகர்கள் வட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துள்ளது. அதனாலேயே இவர் வாரா வாரம் நாமினேட் ஆனாலும் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகிறார். அதுதான் இந்த வாரமும் நடந்துள்ளது. இவருக்கு அடுத்ததாக தினேஷ், அனன்யா, மணி, கூல் சுரேஷ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்து கடைசி மூன்று இடங்களை பூர்ணிமா, விக்ரம், ஜோவிகா ஆகியோர் பிடித்திருக்கின்றனர்.

அதில் வனிதாவின் மகள் தான் கடைசி இடத்தில் இருக்கிறார். அந்த வகையில் அவருக்கு மிகக் குறைவான ஓட்டுகள்தான் கிடைத்திருக்கிறது. இதிலிருந்து அவர் எந்த அளவு ரசிகர்களால் வெறுக்கப்படுகிறார் என்பதும் தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் அவருடைய நடவடிக்கை தான் . ஆரம்பத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு போக போக நான் ஒரு கொலு பொம்மை என்பதை அவர் நிரூபித்து வருகிறார். அதன்படி சதா நேரமும் இவர் தூங்கும் காட்சிகள் தான் ரசிகர்களின் பார்வைக்கு வருகிறது.

அதனாலேயே இந்த கொலு பொம்மை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட இருக்கிறார். மேலும் இந்த சீசனுடன் கமல்ஹாசனம் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார். ஆண்டவர் இப்போது பிக்பாஸில் பிஸியாக இருக்கிறார். அது இல்லாமல் தயாரிப்பு, நடிப்பு, அரசியல் என நிற்க கூட நேரமில்லாத அளவுக்கு சுழன்று கொண்டிருக்கிறார். ஆனாலும் இன்னும் சில படங்களை கமிட் செய்யவும் அவர் முயற்சித்து வருகிறார்.

அந்த வகையில் மணிரத்னம் படத்திற்கு முன்பே KH 233 ஆரம்பித்து விடும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் 234வது படமான தக் லைஃப் டைட்டில் வீடியோ வெளிவந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்து தெலுங்கில் கல்கி, தமிழில் இந்தியன் 2, தக் லைஃப் முடிந்த பிறகு வினோத்தின் படம் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தேர்தல் பணியிலும் கமல்ஹாசன் தீவிரம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.