மாயா கேங்க்கு ஒரு நியாயம் விசித்திராவுக்கு ஒரு நியாயமா.? வெட்ட வெளிச்சமானது கமல்ஹாசனின் இரட்டை வேடம்…

0
Follow on Google News

பிக் பாஸ் வீட்டில் வாரம்தோறும் போட்டியாளர்களுக்கு நடுவில் இருக்கும் பிரச்சனைகள் மாறிக்கொண்டே இருக்கிறது…நிறைய பிரச்சனைகள் இருந்து வருகின்றது, Bully கேங் என ட்ரோல் செய்யப்படும் மாயா கேங் மற்றும் விசித்ரா கேங் இடையே தான் தொடர்ந்து சலசலப்பு இருந்து கொண்டே இருக்கிறது. இந்த வாரம் கூட அப்படி தான் போனது.கமலும் மாயா குழுவை அதிகம் விமர்சித்ததில்லை.திட்டுவது போல அவர்களை பாராட்டுவதை செய்கிறார் கமல்.‌

மாயாவுக்கு ஆதரவாக பேசுகிறார் என கடந்த சில வாரங்களாக நெட்டிசன்கள் கமலையும் மோசமாக வறுத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் டாஸ்கில் தினேஷ் வெற்றிபெற்றார். தினேஷ் வெற்றி பெற்ற இந்த வாரம் பிக் பாஸ் வீடு, பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் என்று வேற்றுமை இல்லாமல் ஒரே வீடாக இருக்கும் என்று அறிவித்தார் பிக் பாஸ்.

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களைப் போலவே நடந்து கொள்ள வேண்டும். இதே டாஸ்க் ஒரு இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியே சுவாரசியம் இல்லாமல் சென்றது என்று தான் கூற வேண்டும்

இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் முழுதும் நடைபெற்ற டாஸ்கில் சுவாரசியம் குறைவாக இருந்த போட்டியாளர்கள் இருவரை பிக் பாஸ் தேர்ந்தெடுக்க சொன்னார். இதில் பெரும்பாலானோர் அர்ச்சனா மற்றும் விசித்ராவை தேர்ந்தெடுத்தனர். இதனால், கோவம் அடைந்த விசித்ரா, என்னடா எல்லாரும் இப்படி முதுகுல குத்திட்டீங்க என்று கேட்கிறார். மேலும், நாங்க டாஸ்கை சரியாகத்தான் செய்தோம். இதனால்,நாங்க ஜெயிலுக்கு போகமாட்டடோம் என்று கூறி விடிய விடிய பனியிலேயே படுத்து இருந்தார்கள்.

ஆனால், எங்களை விட பிராவோ, அக்ஷயா, விக்ரம் எல்லாம் நன்றாக செய்துவிட்டார்களா என்று வாக்குவாதம் செய்த விசித்ரா, தன்னால் சிறைக்கு செல்ல முடியாது என்று தர்னா செய்தார். இந்த பிரச்சனை ஒரு பாதி நாள் ஓடிக்கொண்டு இருக்க நேற்று நடைபெற்ற இந்த வார தலைவருக்கான போட்டியில் நிக்சன் , தினேஷ் கூல் சுரேஷ் ஆகிய மூவர் பங்கு பெற்றார்கள்.

இந்த முறை எப்படியாவது ஜெயித்துவிடு என்று பூர்ணிமா நிக்சனுக்கு பூஸ்ட் எல்லாம் கொடுத்து அனுப்பி வைத்தார் இந்நிலையில் சிறை மீறல் பற்றி இன்றைய எபிசோடில் கமல் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு விசித்ரா எங்களை போரிங் போட்டியாளர் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என சொன்னார். உடனே கமல் அப்படின்னா இந்த வீட்ல இருக்கிறவங்கல்ல யாரு அதுக்கு தகுதியானவர்கள் என நினைக்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு விசித்ரா, அர்ச்சனா இருவரும் சொல்லி வைத்தார் போல் கானா பாலா, பிராவோ என கூறினார்கள். உடனே அவர்களை மடக்கும் விதமாக ஆண்டவர் நீங்கள் திட்டம் போட்டு ஒரே மாதிரி சொல்றீங்களா என கேட்டார். அதைத் தொடர்ந்து வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இருப்பினும் விசித்ரா விளக்கம் கொடுக்க முன்வந்த போது கமல் நீங்கள் செய்த மாதிரி தான் அவங்களுக்கும் ஒரே மாதிரி ஒப்பீனியன் இருக்கலாம் என அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதற்கு சக போட்டியாளர்கள் சிரிப்பை அடக்கமுடியாமல் கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதை பார்த்த நெட்டிசன்கள் ‘பூர்ணிமா, மாயா இதை செய்திருந்தால் கமல் இப்படியா பேசி இருப்பார்’ என ட்ரோல் செய்து வருகின்றனர். மாயா என்ன தவறு செய்தாலும் அவரை கமல் பெரிதாக கண்டிப்பது போல இல்லை. மாயா ஏற்கனவே விக்ரம் படத்தில் கமலுடன் நடித்து இருக்கிறார் அதனால் தான் அவரை ஏதும் கமல் கேட்பதில்லை என்கிற குற்றசாட்டு எழுந்துள்ளது.