தொகுப்பாராக பிரபலமான ஜாக்குலின், விஜய் டிவியில் பெரிதாக வாய்ப்பு இல்லை, அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக கடந்த மூன்று சீசனாக வாய்ப்புக்காக போராடியும் கிடைக்கவில்லை. இப்படி ஒரு காலகட்டத்தில் இந்த மீடியாவை விட்டு சென்றுவிடலாம், வேற ஒரு தொழிலை செய்யலாம் என்று ஜாக்லின் முடிவு செய்த ஒரு நேரத்தில், பிக் பாஸ் சீசன் 8ல் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு ஜாக்குலினுக்கு கிடைத்திருக்கிறது.
இந்த போட்டியில் நிச்சயம் நான் 100 நாட்கள் இருந்து வெற்றி பெறுவேன் என்று தன்னுடைய தாயாரிடம் உறுதி கொடுத்து வந்த ஜாக்குலினை எத்தனை முறை நாமினேட் செய்தாலும் அவரை மக்கள் தொடர்ந்து வாக்களித்து ஆதரவை தெரிவித்து பிக் பாஸ் வீட்டில் தங்க வைத்து வந்தனர்.
அந்தவகையில் மக்களின் ஆதரவு பெற்ற ஒரு போட்டியாளரை விஜய் தொலைக்காட்சி டாஸ்க் என்ற சூழ்ச்சியின் மூலம் வெளியேற்றி விட்டது என்று மக்களின் ஆதங்கமும் வெளிப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜாக்குலின் பேட்டி ஒன்றில் அவரை பற்றிய பல விஷயங்களை ஓப்பனாக பேசியுள்ளார், அதில் இயக்குனர் விஜய் டிவியில் ஒர்க் பண்ணும் போதிலிருந்து இயக்குநர் நெல்சனுடன் ஜாக்குலின் நன்கு அறிமுமாகி இருக்கிறார்.
ஒருநாள் இயக்குனர் நெல்சனிடம் படம் பண்ணுறீங்களா என்று ஜாக்குலின் கேட்டுள்ளார், அதற்கு அவர் இல்லை, படம் பண்ணினால் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார் நெல்சன். சில நாள் கழித்து இயக்குனர் நெல்சன் டீமிலிருந்து ஜாக்குலினுக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அப்போது தான் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு தங்கை ரோல் இருப்பதாக ஜாக்குலினுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.
அதற்கு ஜாக்குலின் ஒரு முடிவில் இருந்துள்ளார், அதாவது எந்த ரோல் கொடுத்தாலும் பரவாயில்லை. வந்த வாய்ப்பை தவற விட கூடாது ஏன் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்துள்ளார் ஜாக்குலின். இதனை தொடர்ந்து பிட்டு படம் குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட ஜாக்குலின், பொதுவாக ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு சென்சார் கிடையாது. அதனால் ஆபாச காட்சிகளும் வரும்.
அப்படி ஜாக்குலின் ஓடிடியில் படம் பார்க்கும் போது 18+ காட்சிகள் வந்துள்ளது, அதை ஜாக்குலின் பார்த்து கொண்டிருப்பதை அவருடைய அம்மா பார்த்துள்ளார். பொதுவாகவே ஜாக்குலினுக்கு பிட்டு படம் பார்க்கும் பழக்கம் இல்லை என்றாலும் ஓடிடியில் வரும் படங்கள், வெப் சீரிஸ்கள் பார்க்கும் போது அதில் 18+ காட்சிகளை ஆரம்பத்தில் தயங்கி தயங்கி பார்த்த ஜாக்குலின், அடுத்து தொடர்ந்து பார்க்க ஆரம்பித்து விட்டதாக தெரிவித்த ஜாக்குலின்.
மேலும் காலேஜ் படிக்கும் போது ஆங்கில படங்கள் பார்த்து அனுபவத்தை பகிர்ந்தவர், ஒரு நாள் வெப் சீரியஸ் பார்த்து கொண்டிருக்கும் பொழுது, அந்த மாதிரி சீன் வந்துள்ளது, அந்த நேரம் பார்த்து ஜாக்குலின் அம்மா வந்துள்ளார், உடனே என்ன படம் பாக்குற என அவருடைய அம்மா கேட்க, அந்த நேரம் பார்த்து வேறு சேனலை மற்ற ஜாக்குலின் முயற்சித்த போது ரிமோட் வேலை செய்யவில்லை.
பின்பு ஒரு வழியாக ஜாக்குலின் அவருடைய அம்மாவை சமாளித்துள்ளார், இப்படி தான் பிட்டு படம் பார்த்த அனுபவத்தை ஓப்பனாக பேசியுள்ள ஜாக்குலின்கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது பார்க்க அழகா இல்லாததால் அவருக்கு யாரும் புரபோஸ் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.