தனுஷ் கொடுத்த தரமான பதிலடி… திருந்துவரா ஜோவிகா.?

0
Follow on Google News

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களில் ஒருவரான ஜோவிகா விஜயகுமார் தொடர்ந்து, நடிகை விசித்ரா மற்றும் பவா செல்லத்துரை போன்ற வயதில் பெரியவர்களிடம் வம்பிழுத்து வருகிறார். மேலும், அவரது வயசு மற்றும் அனுபவத்திற்கு மீறிய கருத்துக்களை முன்வைத்து அதுதான் சரி என்றெல்லாம் பேசி வருகிறார். குறிப்பாக, அண்மையில் பிக்பாஸ் வீட்டில் நடிகை விசித்ராவிடம், ‘நான் சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறேன்! எனக்கு படிப்பு தேவையில்லை..

எல்லோரும் ஸ்கூலுக்கு போய் டாக்டர் ஆனா, அப்போ யாருதான் கம்பவுண்டர் ஆகுறது’ என்றெல்லாம் அறியாமையில் பேசியிருக்கிறார். இதைத் தொடர்ந்து கல்வியின் முக்கியத்துவம் பற்றி தெரியாமல் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிய ஜோவிகாவை இணையத்தில் பலரும் கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், ஜோவிகா படிக்காததால்தான் பிக்பாஸ் வீட்டில் தன்னை விட வயதில் மூத்தவர்களை ஒருமையில் பேசி அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், விஜய் டிவி தொகுப்பாளர் கோபிநாத் அவர்கள், மேடையில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேசிய வீடியோவையும் ஜோவிகாவின் பேச்சோடு ஒப்பிட்டு ரோஸ்ட் செய்து வருகின்றனர். இவ்வாறு தொடர்ந்து ஜோவிகாவின் பேச்சுக்கு நெகட்டிவ் கமெண்டுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இப்போது நடிகர் தனுஷையும் இணையவாசிகள் இந்த பிரச்சினைக்குள் இழுத்து விட்டிருக்கின்றனர்.

ஆம், நடிகர் தனுஷ் கல்வியின் முக்கியத்துவம் குறித்து வாத்தி ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், அடுத்தடுத்து நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

இவர் சமீபத்தில் வாத்தி படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் பேசும்போது, கல்வி குறித்து பேசிய காட்சி தற்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. நடிகர் தனுஷ் சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவில் இருந்ததால், அவரது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.

ஒரு வழியாக சினிமாவில் போராடி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நடிகர் தனுஷ், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆங்கிலம் பேசத் தெரியாததால் தலைகுனிந்து நின்றிருக்கிறார். இது குறித்து நடிகர் தனுஷ் விவரிக்கையில், நடிக்க வந்த புதிதில் அவருக்கு ஆங்கிலம் பேசத் தெரியாததால், பல நாட்கள் அவமானப் பட்டதாகவும், நட்சத்திர ஹொட்டல் நிகழ்ச்சிக்கு சென்றால் ஆங்கிலம் தெரியாத ஒரே காரணத்தினால், மற்றவர்களிடம் உரையாட முடியாமல் வாயைத் திறக்காமல் நின்றுவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு, நடிகர் தனுஷ் என்னதான் மிகப்பெரிய சாதனையைப் படைத்தாலும் கல்வி என்ற அடிப்படை உரிமையை இறுகப் பற்றிக் கொள்ளவில்லை என்றால் சில சமயங்களில் சறுக்கி விடும் என்பதை புரியுமாறு எடுத்துரைத்துள்ளார். இப்படி, தொகுப்பாளர் கோபிநாத், நடிகர் தனுஷ் என அனுபவம் மிக்க பலரும் கல்வியின் அவசியம் பற்றி வலியுறுத்தும் வீடியோவை ரசிகர்கள் பலரும் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும், பல பிக்பாஸ் ரசிகர்கள், தனக்கு படிப்பு வரவில்லை என்பதால், கல்வி அவசியாமானது கிடையாது என்று சொல்வது எப்படி சரியான கருத்தாகும் என்று ஜோவிகாவை தொடர்ந்து வறுத்தெடுத்து வருகின்றனர். ஜோவிகா போன்ற ஆட்களுக்கு எல்லாம் ‘அசுரன்’ போன்ற படங்களைப் பலமுறை போட்டுக் காட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.