பூர்ணிமா – நிக்சன் செய்யும் ஓவர் ரொமான்ஸ் அட்டூழியங்கள்… அக்கா – தம்பின்னு சொல்லிட்டு செய்யுற வேலையா இது…

0
Follow on Google News

பிக்பாஸ் நிகழ்ச்சி 86வது நாளை கடந்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய உள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டில் மாயா, பூர்ணிமா, மணி, ரவீனா, விசித்ரா, விஷ்ணு, அர்ச்சனா, விஜய், தினேஷ் மற்றும் நிக்‌சன் என 10 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்களும் இறுதிப்போட்டிக்கான பந்தயத்தில் குதித்துவிட்டனர்.

இதில் விஜய் வர்மாவும் அர்ச்சனாவும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் விளையாடக்கூடாது என போட்டியாளர்கள் வாக்கு செலுத்தி தேர்வு செய்ததால் இவர்கள் இருவரும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் கலந்துகொள்ள முடியாது. இந்நிலையில், இந்த வாரத்தின் தொடக்கம் முதல் அதாவது நேற்று முதல் டிக்கெட் டூ ஃபினாலே போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நிக்சன் பூர்ணிமா பற்றிய ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பிக் பாஸில் சென்ற நாள் முதலே பூர்ணிமாக்கு ஹேட்டர்ஸ் உருவானது. அதிலும் இவர் மாயாவுடன் சேர்ந்து செய்த பல செயல்கள் இவர் மீது ரசிகர்களுக்கு மேலும் செயல்கள் கூடியது. அதை இன்னமும் தொடர்ந்து கொண்டே வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களாக இவர் நிக்சனுடன் சேர்ந்து செய்யும் செயல்கள் பலரை முகம் சுளிக்க வைத்து வருகிறது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி வருகிறது. ஒரு காதல் கதை நிச்சயம் இடம்பெற்றுவிடும்.

அந்த வகையில் இந்த சீசனில் நிக்சன், ஐசு இருவரின் விஷயம் தான் காதல் கண்டன்ட்டாக இருந்து வந்தது. ஆனால், இவர்களின் கதை காதலை போல இல்லாமல் Cringe தனமாக தான் இருந்தது. இவர்கள் இருவரும் செய்த பல செயல்கள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. சொல்லப்போனால் ஐசுவின்செயல்களால் தங்கள் மானம் போகிறது என்று அவரை வெளியில் அனுப்புமாறு சேனல் என்று அழுத்தம் கொடுத்தாகவும் அதனால் தான் அவரை வெளியில் அனுப்பியதாகவும் கூறப்பட்டது.

ஐசு வெளியேறியதில் இருந்து நிக்சன் மீது தான் பல போட்டியாளர்கள் குறை சொன்னார்கள். ஆனால், மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் நிக்சனுக்கு ஆதரவாக பேசி வந்தனர். அதிலும் நிக்சன் தன்னுடைய தம்பி மாதிரி என்றும் இருவரும் அக்கா, தம்பி என்றும் பொலிந்து வருகின்றனர். ஆனால், இவர்கள் இருவரும் நடந்துகொள்ளும் விதத்தை பார்க்கும் போது அக்கா, தம்பி போல தெரியவில்லை என்பதே பிக் பாஸ் பார்க்கும் ரசிகர்களின் கருத்து.

அதற்கு காரணம் இவர்கள் இருவரும் எல்லை மீறி நடந்துகொண்டு வருகின்றனர். அடிக்கடி பூர்ணிமாவை வர்ணிப்பது, அவரை கட்டிபிடிப்பித்து, மடியில் அமர்ந்து படுத்துக்கொள்வது, உங்களை யாரும் லவ் பண்ணவில்லையா நீங்கள் ஆடும் போது அழகாக இருக்கிறீர்கள் என்று வர்ணிப்பது போது நிக்சன் மீண்டும் தனது காஜி தனத்தை காட்டி வருகிறார். பூர்ணிமா, விஷ்ணுவை வெறுப்பேற்ற நிக்சனுடன் வெண்ணிலவே பாடலுக்கு ஒட்டி உரசி டான்ஸ் ஆடியது பலரை முகம் சுழிக்க வைத்தது.

இப்படி ஒரு நிலையில் பூர்ணிமா, நிக்சனிடம் ‘வாயா என் வீர ‘ பாடலுக்கு டான்ஸ் ஆட வேண்டும் பேசி இருக்கிறார். மேலும் பூர்ணிமாவும், நிக்சனும் பண்ண ரிகர்சலை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர். என்னடா கெமிஸ்ட்ரி இப்படி பக்காவா வொர்க்கவுட் ஆகுதே என்றும் அக்கா அக்கா என மீண்டும் பேசியே நிக்சன் ஐசுவை கவிழ்த்தது போல பூர்ணிமாவையும் கரெக்ட் செய்து விட்டாரே என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

பூர்ணிமா படுத்துக் கொண்டிருக்கும் படுக்கையில் அவர் அருகே ஒட்டி உரசி உட்கார்ந்துக் கொண்டு பெண்கள், இன்னொரு பெண்களுக்கு தலை கோதி விடுவது போல தலையை கோதிக் கொண்டே விஷ்ணு பற்றி காசிப் பேசி வரும் நிக்சன் காட்சியை ஷேர் செய்த நெட்டிசன்கள் இதெல்லாம் எவ்வளவு கேவலமானது தெரியுமா? என திட்டி வருகின்றனர். அதில், ஒரு கட்டத்துக்கு மேல் தலையில் முடியை பிடித்து இழுத்து நிக்சன் விளையாட, அப்படியெல்லாம் பண்ணாத, நான் உனக்கு பண்ணவான்னு பூர்ணிமா நிக்சன் முடியை பிடித்து இழுக்கும் காட்சிகள் தீயாக பரவி வருகின்றன.