நிக்சனின் அந்த மாதிரி வீடியோ… அட கடவுளே… இதையுமா குறும்படமாக வெளியிடுவது…

0
Follow on Google News

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே காதல் கிசு கிசுக்களுக்கு பஞ்சம் இருந்தது இல்லை. அந்த வகையில் நிகழ்ச்சி ஆரம்பத்தில் மணி – ரவீனா தான் காதல் மணி கிசு கிசுக்கப்பட்டு இருந்தனர். இவர்களை தொடர்ந்து தற்போது காதல் கிசு கிசுவில் சிக்கி இருப்பது நிக்சன் – ஐசு தான். ஆரம்பத்தில் இருவரும் நன்றாக தான் பழகி வந்தார்கள். முதலில் ஐஷு மணி இடம் நெருக்கமாக பழக முயற்சித்தார்.

ஆனால், ரவீனா எப்போதும் மணியுடன் சுற்றி கொண்டு இருந்ததால் நிக்சனிடம் பழக ஆரம்பித்தார். பின் இருவரும் அதிக நேரம் பேசி பழக ஆரம்பித்தார்கள். எங்கு பார்த்தாலும் நிக்சன் ஐசு உட்கார்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஐசு தன்னுடைய கையில் என் எக்ஸ் என் என்று நிக்சன் பெயரை பதிவிட்டு இருக்கிறார். நெக்சன் ஐசு வரும்போது ஹார்ட் சிம்ப்ளை வரைந்து காண்பித்திருக்கிறார்.

இதெல்லாம் தாண்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிக்சன் மற்றும் ஐசு ஆகிய இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது நிக்ஸன் தனது மைக்கை கழட்டி ஐசுவிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது இருவரும் பேசிக்கொள்வது போல கண்ணாடியில் முத்தம் குடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் இவர்கள் இருவரின் செயலை கழுவி ஊற்றி வருகின்றனர் மக்கள்.

இப்படி இருக்கும் நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் செம சண்டை நடந்து வருகிறது. விசித்ரா, அர்ச்சனாவை, மாயா டீம் டார்கெட் செய்கிறார்கள். இதை கமல் ஹாசன் தட்டிக் கேட்க வேண்டும் என மக்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில், “இந்த வீட்டில் உள்ள நபர்கள் சொன்ன கமெண்டுகள் காட்டப்படும். அதை சொன்ன நபர்கள் ஏன் அதை சொன்னீர்கள் என விளக்க வேண்டும்’ என டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதன்படி நிக்சன் பற்றி, ‘வினுஷா வேலைக்காரி. ஒரு ஒருத்தங்களுக்கு ஏதாவது ஒன்னு அட்ராக்ட் ஆக வேண்டும். எனக்கு வந்து உடலழகு சரியாக இருக்க வேண்டும். வினுஷா தேவிக்கு மண்ட மட்டும் குட்டியா இருக்கு. அவங்க கண்ணு அழகா இருக்கு. ட்ரெஸ் போட்டா பெர்ஃபெக்டா இருக்கு. அது ஓகே. பூர்ணிமா அக்கா அழகா இருக்காங்க. அந்த மாதிர் பெர்ஃபெக்டா இருக்கணும்’ என ஐஷூவிடம் பேசி இருந்தார்.

நிக்சன் வினுஷாவை பற்றி உருவ கேலி செய்திருப்பதும் அனைவருக்கும் தெரிய வருகிறது. அதற்கு நிக்சன் நான் தப்பான அர்த்தத்தில் எதுவும் சொல்லல, நான் இந்த வீட்டில் இதை சொல்லல என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அர்ச்சனா நிக்சனை நக்கலாக பார்க்கிறார். அதனால் கடுப்பான நிக்சன் உன் மூஞ்செல்லாம் அப்படி வச்சுக்கிட்டு இருக்காத, பார்த்தாலே செம கடுப்பாகுது என்று எச்சரிக்கிறார்.

கடந்த வாரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பிரதிப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினார்கள். அதோடு வழக்கம் போல இப்போது மாயா பேச்சை கேட்டு பூர்ணிமா ஆடிக்கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு துணையாக ஜோவிகா, ஐசு, நிக்சன் போன்றோரும் உடன் இருக்கின்றனர். இவர்கள் எல்லாரும் சேர்ந்து போன வாரத்தில் பிரதீப்பை தூக்கியது போல இந்த வாரம் விசித்திரா, அர்ச்சனா, தினேஷ் மூன்று பேரையும் தூக்கி விட வேண்டும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அதில் மாயா விசித்ரா, அர்ச்சனா, தினேஷுக்கு எதிராக இதற்கு நானே இந்த முறை உரிமை குரல் தூக்கப் போகிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படியாக இருக்கும் நிலையில் இவர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையாக பிக் பாஸ் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதனால் நிக்சன்க்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர் ப்ரதீப்க்கு பதில் இந்த காஜி நிக்சன்க்கு ரெட் கார்ட் கொடுத்து இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.