விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன்களை விட தற்பொழுது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சில் கமலஹாசன் முகத்தில் புத்துணர்ச்சியை பார்க்க முடிகிறது.பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு காரணமாக பாதியிலேயே வெளியேறினார் கமல்ஹாசன்.
பின்பு அந்த நிகழ்ச்சியை நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கினார், இருந்தும் கமல்ஹாசனுக்கு இருந்த வரவேற்பு நடிகர் சிலம்பரசனுக்கு இல்லை. இந்நிலையில் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பில் அவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய ஹிட் அடித்து ஹிமாலய வசூல் சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த படத்தின் மூலம் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளத்தை விட அதிக சம்பளம் கமல்ஹாசன் அடுத்தடுத்த படங்களுக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த உற்சாகத்தை கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்க்க முடிகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொதுவாக சமூக அக்கறை கொண்ட பல விஷயங்களை பேசி வருகின்றவர் கமல்ஹாசன். அந்த வகையில் தற்பொழுது ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசனில் 21 போட்டியாளர்களில் ஜிபி முத்துக்கு மட்டும் அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் ஜீவி முத்துவுக்காக, பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கான பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர்.
இதனால் விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டிங்கும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மனிதாபிமானம் என்றால் என்ன என்று ஜிபி முத்துவிடம் கமல்ஹாசன் கேட்க, அதற்கு அவர் சம்பந்தமே இல்லாமல் வழக்கம்போல் அவருடைய பாணியில் பேசினார். ஒரு வழியாக கமல்ஹாசன் மனிதாபிமானம் என்று மட்டும் நீங்கள் சொன்னால் போதும் என்று தெரிவிக்க, அதற்கு அவர்மே ஜிபி முத்து மனிதாபிமானம் என்று சொல்லி முடித்துள்ளார்.
இதைக் கேட்ட கமல்ஹாசன் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர் பேசுவது அவர்களுக்கு மட்டும் புரியும் பார்ப்பவர்களுக்கு புரியாது. அது போல தான் இதுவும் பேச்சு என முடித்திருப்பார் கமல்ஹாசன். பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி, ஆனால் விவாத நிகழ்ச்சி என்பது அன்றாட நடக்கும் நிகழ்வுகளை மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டு காண்பிக்க கூடிய ஒரு நிகழ்ச்சி என கமல்ஹாசனுக்கு எதிராக விமர்சனம் எழுந்துள்ளது.
மேலும் கமல்ஹாசன் சொல்வது போன்று மக்களுக்கு புரியாத ஒரு விவாத நிகழ்ச்சியில் அவர் கட்சி சார்ந்தவர்கள் எதற்காக பங்கேற்க வேண்டும் என்றும் பலர் கமல்ஹாசனை ரவுண்டு கட்டி வெளுத்து வருகிறார்கல். எதோ பேச வேண்டுமென்பதற்காக எதையும் பேசிவிட்டு கடைசியில் பெரும் சர்ச்சையில் கமல்ஹாசன் சிக்கியது குறிப்பிடத்தக்கது.