இது கூடவா கமல்ஹாசனுக்கு தெரியல…இதெல்லாம் ஒரு பொழப்பா? நடிகை ரேகா நாயர் ஆவேசம்..

0
Follow on Google News

கோலாகல கொண்டாட்டத்துடன் இரண்டு கமல்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 7ஐ தொடங்கி வைத்தனர். பிக்பாஸ் சீசன் 7 அனைவரும் எதிர்பார்த்த ஒன்றாகும். பிக் பாஸ் சீச்ன் 7, 106 நாள் பயணம் ஆகும். பிரபலங்களுக்கு இடையேயான போட்டியாகக் கருதப்படுகின்றது. இது மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கினை வழங்கி வருகின்றது. அந்த வகையில் விஜய் டிவியில் ஆறு முறை வெற்றிகரமாகப் பயணித்த பிக்பாஸ் ஏழாவது சீசனில் 18 போட்டியாளர்களுடன் அமர்க்களமாகத் தொடங்கியுள்ளது.

வீட்டிற்குள் நுழைந்த அடுத்த கணமே கேப்டனுக்கான டாஸ்க், ஆறு பேர் வெளியேற்றம், அதிரடி நாமினேஷன் என்று இந்த சீசன் ஆரம்பத்திலேயே எக்ஸ்பிரஸ் வேகத்தில் டேக் ஆஃப் ஆகிவிட்டது. சின்ன வீட்டில், அதாவது சின்ன பிக் பாஸ் வீட்டில் ஒரு வாரத் தண்டனைக் காலத்திற்குச் செல்ல ஆறு பேர் தேர்வானார்கள். அங்கு வசதிகள் குறைவு. ஆறுதலாகச் சின்ன வீட்டில் ஒரு ஜாலியான தம்பி பிக் பாஸ் உண்டு.

சின்ன வீட்டில் இருப்பவர்கள், பெரிய வீட்டில் இருப்பவர்களுக்குப் பல பணிகளைச் செய்து தர வேண்டும் என்பது தொடங்கிப் பல விதிமுறைகள் வெளியாகின. மேலும் இந்த சீசனில் புதிய மாற்றங்களும் இருந்தன.
மேலும் இந்த பிக் பாஸில் ரேகா நாயர் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் செல்லவில்லை. தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமான ரேகாநாயர் வம்சம், பகல்நிலவு, ஆண்டாள் அழகர், நாம் இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.

பின்னர் பார்த்திபன் இயக்கி நடித்திருந்த இரவின் நிழல் படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் ரேகா நாயர், பயில்வான் ரங்கநாதனுடன் நடு ரோட்டில் சண்டை போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து வரும் பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மேலும் பயில்வான் ரங்கநாதன் இறந்துவிட்டால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் என்று கூறியிருந்தார்.

இந்த சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து ரேகா நாயர் பேசி இருக்கிறார். அவர் பேசியதாவது, “முதலில் நான் ஏன் நூறு நாட்கள் அங்கு சென்று இருக்க வேண்டும். எனக்கு பிடித்த இடத்தில் என்னால் நூறு என்ன, ஆயிரம் நாட்கள் கூட இருக்க முடியும். எனக்கு பிடித்த உணவு இருக்கிறது. அதை 100 நாட்கள் சாப்பிட வேண்டும் என்றால் நான் சாப்பிடுவேன். ஆனால் பணத்திற்காக, பிரபலத்திற்காக அங்கு செல்வது சரி என்று எனக்கு பட வில்லை.

அதற்கு 100 செடி வைத்தால், என்னுடைய வாரிசுகளாவது நன்றாக இருக்கும். முதல் சீசனில் எனக்குத் தெரிந்தவர்கள் சென்றாகள். அவர்களிடமே இதெல்லாம் ஒரு பொழப்பா என்று கேட்டேன். இந்த மாதிரியான விஷயங்களில் எனக்கு ஈடுபாடு இல்லை. முதல் சீசனில் அவர்கள் என்னை,என்னையாக காண்பித்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் முழுக்க முழுக்க அந்த நிகழ்ச்சியை ஸ்கிரிப்ட்டாக மாற்றி விட்டார்கள்.

அவர்கள் சொன்ன படி நான் நடிப்பதற்கு பதிலாக சீரியலில் நடித்துவிட்டு சென்று விடுவேன். சரி, நான் கேட்கிறேன். பிக் பாஸூக்குள் சென்றால் என்னை என்ன ரஜினி சாரின் ஹீரோயினாக கூப்பிட்டு விடுவார்களா?” என்று பேசியுள்ளார். மேலும், “ஒருவருக்கு அறிவில்லை என்றால்தான், பள்ளியில் சென்று விட வேண்டும். நடிக்கவே தெரியவில்லை என்றால்தான், உங்களை ஆக்டிங் ஸ்கூலில் சென்று விட வேண்டும். இல்லை, ஒரே நாளில் பிரபலமாக வேண்டும் என்றால் அங்கு செல்லலாம்.

அதற்கு பதிலாக, இங்கு இருந்து 100 நாட்கள் 100 விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள். வித்தியாசமான மனிதர்களை சந்தியுங்கள். ஜெயிலில் இருப்பதும், அங்கு இருப்பதும் என்னைப் பொருத்த வரை ஒன்றுதான். எனக்கு இங்கு ஓரளவிற்கு பிரபலம் இருக்கிறது. அங்கு குறைந்த ஊதியம் கொடுத்து, அதிக வேலை வாங்குகிறார்கள். பிக்பாஸ், கமல்ஹாசன் என்ற மிகப்பெரிய பிரபலத்தை வியாபாரத்தின் உச்சியாக வைத்து, அவரையும் வியாபாரம் பேசுகிறது. அவருக்கும் அது தெரியவில்லையா என்பது தெரியவில்லை. அவர் இதை செய்ய மாட்டேன் என்று சொல்லி இருக்க வேண்டும்.” என்று பேசினார்.