வீட்டில் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான பவதாரணி… மரணத்திற்கு முன்பு அவரே சொன்ன தகவல்…

0
Follow on Google News

இளையராஜா மகள் பவதாரிணி கேன்சர் பாதிப்பால் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி கடந்த 6 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.பல ஹிட் பாடல்களை பாடிய பவதாரணி பிரபுதேவா நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான ராசய்யா படத்தில் வரும் மஸ்தானா மஸ்தானா பாடல் மூலம் அவர் பாடகியாக அறிமுகமானார்.

எம்.குமரன் படத்தில் வரும் அய்யோ அய்யோ பாடல், தாமிரபரணி படத்தின் தாளியே தேவையில்ல பாடல் போன்ற ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார் பவதாரிணி.‌ அதேபோல், காதலுக்கு மரியாதை படத்தில் வரும் என்னைத் தாலாட்ட வருவாளா, ஆயுத எழுத்து படத்தின் யாக்கைத் திரி, காக்க காக்க படத்தின் என்னைக் கொஞ்சம் மாற்றி போன்ற தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க பாடல்களை பவதாரணி பாடியுள்ளார்.

இளையராஜா மட்டுமின்றி கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரது இசையிலும் பல பாடல்களைப் பாடியுள்ள பவதாரணி, கடந்த 2002ஆம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான ‘மித்ர் மை பிரெண்ட்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இந்தியில் ரேவதி இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஷில்பா ஷெட்டி, சல்மான் கான் ஆகியோர் நடிப்பில் வெளியான ஃபிர் மிலெங்கே என்ற படத்திலும் இசையமைத்தார்.

தமிழில் அமிர்தம், இலக்கணம், மாயநதி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். பவதாரிணி, தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது கிடைத்தது.

இந்நிலையில் பவதாரிணி முன்னர் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது‌. அதில், “சின்ன வயதில் இருந்து அப்பா கம்போசிங் போவார். விடுமுறையில் நான், யுவன், அண்ணா எல்லாரும் அங்கே போவோம். ஒரு அறையில் அண்ணன், இன்னொரு ரூமில் யுவன் கம்போசிங் பண்ணுவார். நான், எல்லா அறைகளிலும் மாறி மாறி போய் பார்ப்பேன். அவர்களுக்கு முதலில் நான் தான் ட்ராக் சிங்கரா இருந்தேன்.

அதிகமாக அண்ணனுக்கு ட்ராக் பாடுவேன். வீட்டிலேயே இது நடைமுறையாகிவிட்டது. காலையில் எழுந்ததும், அம்மா சிடி போடுவார். அது பெரும்பாலும் மேற்கத்திய இசையாக இருக்கும். அப்படி தான் எங்களுக்கு விடியும். இசைக்கு மத்தியில் தான், நாங்கள் எங்கள் வேலைகளை செய்து கொண்டிருப்போம் என் தெரிவித்த பவதாரிணி, மேலும் வீட்டில் ஒரே மிருதங்கம் சத்தம், இன்னொரு பக்கம் யுவன் பாடிட்டு இருப்பான்.

எல்லா சத்தமும் சேர்ந்து ஒரே மனஉளைச்சலா இருக்கும். ஒரு கட்டத்தில் அழும் நிலைக்கு வந்துவிடுவேன். அம்மா தான் என்னை தாங்கிக் கொள்வார் என பேசிய பவதாரிணி , மேலும், “அப்பாவுக்கு நிறை பாடல் பாடியிருக்கேன். அப்போ எனக்கு எதுவும் பெருசா தெரியாது. அப்போ சொல்வதை பாடுவேன். பின்னால் தான், நான் என் குரலை புரிந்து கொண்டேன். ‘இப்படி பாடலாம், இதை மாற்றி பாடலாம்’ என்று தெரிந்து கொண்டேன். அப்பாவிடம் பாடும் போது, அவர் சொல்வதை செய்ய வேண்டுமே என்கிற பதட்டம் தான் இருக்கும்.

அப்பா எல்லா இடங்களைப் போலவே, வீட்டிலும் கறாரா தான் இருப்பார். எங்க வீட்டில் டைனிங் டேபிள் கொஞ்சம் வித்தியாசமானது. அண்ணன், தம்பி எல்லாரும் அவர்கள் கம்போஸ் செய்ததை அங்கு வந்து தான் போடுவார்கள். அப்பாவும் கேட்பார். சில பாடல் வரிகளை அப்பா மாற்ற கூறுவார். அது நெகட்டிவ்வா இருக்கு, அது நல்லதல்ல என்பார். நிறைய இன்புட் அப்பா தருவார். எங்கள் டைனிங் டேபிள், பெரும்பாலும் இசையாக தான் நிரம்பி இருக்கும். பெரும்பாலும் எங்க அப்பா, கார்த்திக் உடன் தான் இசை பற்றி ஆலோசிப்பார். என்னிடமோ, யுவனிடமோ இசை பற்றி பேசமாட்டார் என பவதாரணி கொடுத்த பேட்டி ஓன்று தற்பொழுது வைரலாகி வருகிறது.