சிறை செல்லும் பயில்வான்… சும்மா விடமாட்டேன்… அதிரடி காட்டும் ஏ ஆர் ரகுமான்..

0
Follow on Google News

பிரபல சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், சினிமா கிசு கிசுக்களை யூ டுயூப்பில் பேச தொடங்கிய பின்பு தான் பிரபலமானார். தொடர்ந்து சினிமா நடிகர் நடிகைகள் பற்றிய அந்தரங்க விசயங்களை வெளியில் பேசி பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றவர் பயில்வான் ரங்கநாதன், ஆனால் கடும் எதிர்ப்புகள் வந்தால் கூட அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவருடைய வேலையை செய்து வருகின்றவர்.

நடிகை கஸ்தூரி, மற்றும் நடிகை ராதிகா குறித்து பயில்வான் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது, தன்னை பற்றி பயில்வான் பேசியதற்கு பதிலடி தரும் விதத்தில் நடிகை கஸ்தூரி பதில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார், அதில் பயில்வானை பன்றி என்றும், நீ விளக்கு பிடித்தாயா என கடுமையாக பேசினால், ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தி கொள்ளாத பயில்வான் மீண்டும் கஸ்தூரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில தகவலை வெளியிட்டார்.

ஒருமுறை நடிகை ராதிகா தயார் பற்றி தவறாக பயில்வான் பேசிய அடுத்த சில நாட்களில் திருவான்மியூர் கடல்கரையில் பயில்வான் மற்றும் ராதிகா இருவருக்கும் உச்சகட்ட சண்டை ஏற்பட்டது. இப்படி யாருக்கும் கட்டுப்படாமல் சினிமாவில் நடக்கு பல ஆதாரமற்ற கிசு கிசு சம்பவங்களை வெளியில் பேசி வரும் பயில்வான், நடிகை மீனா கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக பேசினார், குறிப்பாக கணவர் விருப்பத்துக்கு எதிராக மீனா நடந்து கொண்டதாகவும், அதனால் அவருடைய கணவர் மன உளைச்சலில் இருந்தது போன்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் பயில்வான்.

இது சினிமா துறையினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இளம் வயதில் கணவனை இழந்து சோகத்தில் இருக்கும் மீனாவை மேலும் புண்படுத்தும் விதத்தில் பேசிய பயில்வான் மனிதன் தானா.? என்று சினிமா துறையினர் கடுமையாக பேசி இருந்தனர். இருந்தாலும் பயில்வான் திருந்துவதாக இல்லை. இந்நிலையில் தொடர்ந்து சினிமா துறையினர் மீது வாய்க்கு வந்ததை பேசி வந்த பயில்வான் இனி வாயே திறக்காதபடி ஏ ஆர் ரகுமான் ஆக்சனில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ஏ ஆர் ரகுமானை விட்டு அவரது மனைவி சாய்ரா பானு பிரிவதாக அறிவித்துதை தொடர்ந்து, அதற்கு அடுத்த நாள் ஏ ஆர் ரகுமான் இசை குழுவில் இருக்கும் கித்தார் கலைஞர் மோகினி டே, அவருடைய கணவரை விட்டு பிரிவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து பயில்வானை கையில் பிடிக்க முடியுமா.? வழக்கம் போல் மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போன்று வாய்க்கு வந்ததை பேச ஆரம்பித்தார் பயில்வான் ரங்கநாதன்.

ஏ ஆர் ரகுமான் உடன் மோகினி டேவை தொடர்பு படுத்தி கண்டபடி பேசி வந்த பயில்வான் ரங்கநாதன் பேச்சு கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி வந்த நிலையில், ஏ ஆர் ரகுமானிடம் இருந்து ஒரு அறிக்கை வெளியானது அதில், தன் மீது அவதூறு பரப்புவதாகவும் சில யூடியூப் சேனல்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாகவும், சிலர் கற்பனையில் பேட்டி அளித்துள்ளதாகவும் தெரிவித்த ஏ.ஆர். ரகுமான், அந்த வீடியோக்கள், கட்டுரைகளை 24 மணி நேரத்திற்குள் நீக்க வில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து இருந்தார் ஏ ஆர் ரகுமான்.

இதனை தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் வழங்கறிஞர் மும்பையில் இது குறித்து வழக்கு தொடர இருப்பதாக ஆலோசனை நடந்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஒரு வேலை மும்பையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டால், தமிழகம் வந்து ஏ ஆர் ரகுமான் குறித்து அவதூறு பரப்பிய பயில்வான் ரங்கநாதனை மும்பை போலீசார் கைது செய்து விசாரணைக்கு மும்பை அழைத்து செல்லாமல் என்று கூறப்படுவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here