சரண்டரான விஜய்…. ஐயா நீங்க தான் என்னை காப்பாத்தணும்..! எங்கே ..என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் தொடர்ந்து அரசியல் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றவர். நடிகர் அஜித் போன்று நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு, மற்ற அரசியல் சார்ந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருந்து வந்திருந்தால் அஜித் போன்று எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்காமல் இருந்திருக்கலாம் விஜய். ஆனால் அவர் குட்டி கதை சொல்வது, ஆடியோ லாஞ்சில் அரசியல் பேசுவது, சினிமாவில் அரசியல் பன்ச் கொடுப்பது இது தான் விஜய் நெருக்கடியில் சிக்க காரணம்.

திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளினால் கடும் நெருக்கடியை சந்தித்த நடிகர் விஜய், தலைவா பட பிரச்சனையின் போது கை கட்டி வீடியோ வெளியிட்டு பிரச்சனையை தீர்த்து கொண்ட பின்பு, இனிமேல் அரசியல் நமக்கு வேண்டாம் என ஒதுங்கி இருந்த விஜய், முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு தொடர்ந்து அரசியல் பேசி வந்தவர், தனது படங்களில் உண்மைக்கு புறம்பான வசனங்களை பேசி அரசியல் கட்சிகளை சீண்டி வந்தார் விஜய்.

இதில் மத்திய பாஜக அரசை அதிகம் சீண்டிய விஜய், மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த வருமான வரித்துறை சோதனைக்கு பின்பு கப் சிப் ஆனார் விஜய். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் விஜய் மக்கள் மன்றம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இது விஜய் அரசியல் வருகைக்கான முன்னோட்டமாக தான் பார்க்க படுகிறது. விஜய் அரசியல் வருகை என்பது திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என திமுக தரப்பில் உணர்வதாக கூறப்படுகிறது.

ரஜினி அரசியல் அறிவிப்புக்கு பின்பு திமுக தரப்பில் இருந்து ரஜினிக்கு எதிராக கடுமையாக எதிப்புகள் வந்ததை காண முடிந்தது. அதே போன்று தற்பொழுது விஜய் அரசியல் வருகைக்கு முன்பே திமுக தரப்பில் இருந்து கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன் வெளிப்பாடு தான் பீஸ்ட் படத்தின் ஆடியோ நிகழ்ச்சியை சன் பிக்சர் நடத்தவில்லை என்றும், மேலும் ஆடியோ நிகழ்ச்சியில் மாஸ் ஸ்பீச் கொடுத்த விஜய்யை அழைத்து சன் டிவியில் பேசவிட்டு பீஸ்ட் படத்தை ப்ரோமோஷன் செய்து கொண்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

இப்படி தயாரிப்பு நிறுவனம் என்ன செய்தாலும் தலையை ஆட்டும் நிலையில் தான் விஜய் உள்ளார். காரணம் இதன் பின்னனியில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே காவலன் படத்தின் போது திமுக தரப்பில் இருந்த நெருக்கடி வந்த போது ஜெயலலிதா உதவியை பெற்றார் விஜய். அதே சூழல் தற்பொழுது உருவாகி இருப்பதை உணர்ந்த நடிகர் விஜய், இனி தான் நடிக்கும் அடுத்தடுத்து படங்களிலும் தொடர்ந்து நெருக்கடியை சந்திக்க நேரிடும் , மேலும் இன்னும் நான்கு வருடங்கள் திமுக ஆட்சியில் இருக்க இருக்கிறது.

இந்த சூழலில் தன்னை காப்பாற்றி கொள்ள மத்தியில் ஆளும் பாஜக கதவை தட்ட தொடங்கியுள்ளார் விஜய் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதன் முன்னோட்டமாக தான் சமீபத்தில் பாஜக ஆதரவுடன் ஆட்சியில் இருக்கும் புதுவை முதல்வர் ரங்கசாமியை நடிகர் விஜய் சந்தித்து பேசியது என அரசியல் மற்றும் சினிமா வட்டாரதத்தில் கூறப்படுகிறது. ரங்கசாமி மூலம் பாஜக தரப்பில் இருந்து விஜய்க்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக பாஜக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நேரில் விஜய் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்பொழுது வெளியாக இருக்கும் பீஸ்ட் படம் திமுகவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் என்பதால் இந்த படம் திரைக்கு வந்த பின்பு அண்ணாமலையை நேரில் விஜய் சந்திக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான முன்னோட்டம் தான், தமிழக அரசியல் மற்றும் சினிமாவில் பாஜகவுக்கு எதிரானவர் விஜய் என்கிற பார்வை உண்டு.

அதை உடைத்து எரிந்து, இனி தனது ரசிகர்கள் குறிப்பாக பாஜக மற்றும் அதன் தலைவர்களை விமர்சனம் செய்ய கூடாது என்கிற நோக்கத்தில் விஜய் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், அரசு பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சி தலைவர்களை மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில்,பத்திரிகைகளில், இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ்  உள்ளிட்ட எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது.

இது நம் தளபதி விஜய் அவர்களின் கடுமையான உத்தரவின் பேரில் ஏற்கனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம். அதனை மீறுவோர் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டதோடு, இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம். இருப்பினும் நம் தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலை, மீண்டும் யாரேனும் மீறினால் இனி அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என நடிகர் விஜய் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை குறிப்பாக விஜய் ரசிகர்கள் இனி பாஜக மற்றும் அதன் தலைவர்களை விமர்சனம் செய்ய கூடாது என்பதற்காகவே வெளியிடப்பட்டது என்றும், மேலும் பாஜக தரப்பில் நீங்கள் பாஜக மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிரானவர் என்கிற ஓர் தோற்றம் உருவாக்கப்பட்டு, உங்கள் ரசிகர்களை பாஜகவுக்கு எதிராக செயல்பட வைக்கும் முயற்சி நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என பாஜக தரப்பில் இருந்து வந்த கோரிக்கையை தொடர்ந்து தான் விஜய் தரப்பில் இருந்து இந்த அறிக்கையை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

வீட்டு பக்கம் வரவே கூடாது.. அனிருத்தை விரட்டியடித்த ரஜினிகாந்த்…ஐஸ்வர்யா இப்படி செய்யலாமா.?