பணத்தை ஆட்டைய போட அனுதாபம் தேடுகிறாரா ஏ.ஆர்.ரகுமான்.? அதற்க்கு ஒத்து ஊதுகிறாரா நடிகர் கார்த்திக்.?

0
Follow on Google News

சென்னையில் நடந்த AR ரகுமான் இசை நிகழ்ச்சியை பார்க்க சென்ற மக்கள் பெரும் துயரத்தை சந்தித்து தப்பித்து வந்த வீடியோக்கள் மிக பெரிய விவாத பொருளாக மாறியுள்ள நிலையில் சினிமா துறையை சேர்ந்த சிலர் இந்த விவகாரத்தில் AR ரகுமானுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதும் எதிர்ப்புக்கு உள்ளாகி வருகிறது,

இந்நிலையில் AR ரகுமான் பாதிக்கப்பட்டவர் போல அவருடன் நிற்கிறேன் உட்கார்ந்திருக்கிறேன் எனப் பதிவிடும் சினிமா துறையை சேர்ந்த நடிகர் பார்த்திபன் முதல் கார்த்திக் வரை செய்வது AR ரகுமான் மீது அனுதாபம் உருவாக்க முயற்சி என்றும், மேலும் நடந்த பெரிய மோசடியை மூடி மறைக்க முயற்சி என தெரிவித்துள்ள பிரபல எழுத்தாளர் மாரிதாஸ்.

மக்கள் கேள்வி இதோ இதற்கு பதில் கொடுத்துவிட்டு பின் எங்கே வேண்டுமானாலும் போய் நில்லுங்கள் என சில கேள்விகளை எழுப்பியுள்ளார் மாரிதாஸ், அதில், பெண்கள் , சிறுமிகள் மானபங்கம் செய்யப்பட்டுள்ளனர் நெரிசலில். குழந்தைகள் வைத்திருந்த பெற்றோர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து தப்பிக்கப் போராடியுள்ளனர். பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் பல சேதம் ஏற்பட்டுள்ளது. எதற்குப் பதில் கிடைத்ததா இல்லை? ஒரு விளக்கமில்லை..

இந்த நிகழ்ச்சி ஒரு மாதம் முன் நடப்பதாக இருந்து மழை என்று கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. அன்றே பெரிய டிராபிக் ஜாம் ஏற்பட்டு மக்கள் அவதியுற்றனர். மேலும் 25000 பேர் அனுமதி கொடுத்த இடத்திற்கு எப்படி 46,000 பேர் வந்தனர்? 36,000 பேருக்கு டிக்கெட் விற்கப்பட்டதாக அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள் அது எப்படிச் சரி? சுமார் 15,000 டிக்கெட் விற்றதே பெரிய முறைகேடு தானே என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ள எழுத்தாளர் மாரிதாஸ்.

இது முதல் முறை அல்ல முன்பு கோவையில் நடந்த நிகழ்ச்சியும் இதே லட்சணத்தில் தான் நடந்தது. ஆளும் கட்சி ஆதரவு இருப்பதால் அனைத்தையும் சமாளிக்கிறார்கள். AR ரகுமான் நானே பலிகடா ஆகிறேன் என்று அனுதாபம் தேட முயற்சிக்கிறார். மக்கள் இவ்வளவு பெரிய வேதனையை ஏற்படுத்தி அனுப்பியதை உணர்ந்தால் கட்டிய பணத்தைத் திருப்பு கொடுக்கவோ அல்லது இன்னொரு நிகழ்ச்சியில் அனுமதி பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கப்படும் என்று எவ்விதமான தீர்வும் அவர் தேடவில்லை.

மாறாக நிகழ்ச்சி கலந்து கொள்ளாத மக்கள் டிக்கெட் மற்றும் புகாரை Email செய்ய சொல்கிறார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று. இது ஸ்கேம் செய்வோர் அனைவரும் பயன்படுத்தும் யுக்தி. சட்டத்திலிருந்து தப்பிக்க நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரியத் தீர்வு கொடுக்க முயயற்சித்தோம் என்று சொல்வதற்கான ஏற்பாடு. ஏன் என்றால் – வந்து உள்ளே அமர்வதற்கும் நிற்பதற்கும் பார்ப்பதற்கும் வழி இல்லாமல் திரும்பிய மக்கள் தான் பாதி ,

அதில் உள்ளே வருவதற்கே போதிய வசதி இல்லாமல் 4 மணி நேரம் காத்திருந்து வந்து திரும்பியவர்கள் மீதி – இப்போது உள்ளே வந்தவர்கள் எல்லாம் கலந்து கொண்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டனர். அத்தோடு அவர்கள் அவதியுற்றது தான் மிச்சம்? என தெரிவித்துள்ள மாரிதாஸ், அன்பை நேசியுங்கள் வெறுப்பு வேண்டாம் என நடிகர் கார்த்திக் போதனை சொல்கிறார். இது உன் குழந்தைக்கும் உன் தந்தை தாயிக்கும் நடந்த சும்மா இருப்பயா மேன் என நடிகர் கார்த்திக்கை நோக்கி கேள்வி எழுப்பியுள்ள மாரிதாஸ்,

தன்னுடைய கடைசி கேள்வியாக, YMCA , தீவுத்திடல் , நேரு உள்விளையாட்டு அரங்கம் போன்றவை 40,000 மக்கள் கூடவும் முடியும். அங்கே போதிய வசதிகளும் உண்டு , மக்கள் வந்து போவதும் எளிது.. ஆனால் அந்த பகுதிகளைத் தேர்வு செய்யாது சென்னை வெளியே 20கிமீ தூரத்தில் பனையூரில் வாகனம் வந்து செல்ல முடியாத பகுதியில் போதிய மக்களை ஒன்றிணைக்க வசதியில்லாத பகுதியைத் தேர்வு செய்யக் காரணம் என்ன?

அதிக பேராசை பெரிய லாபம் வேண்டும் என்ற கணக்கு! அதே பேராசையோடு தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் பணத்தைத் திருப்பு கொடுக்காமல் ஏமாற்ற வழி தேடுகிறது இந்த கூட்டம் என்பது தான் அசைக்க முடியாத உண்மை. இது நிச்சயம் 2023 பெரிய மோசடி என மாரிதாஸ் பரபரப்பு குற்றசாட்டை ஏற்படுத்தியுளளார்.