ஆண்டு சந்தாவை 50 சதவீதம் உயர்த்திய அமேசான் ப்ரைம்!

0
Follow on Google News

அமேசான் ப்ரைம் ஓடிடி தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கான ஆண்டு சந்தாவை அதிகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் ஓடிடியாக அதிக வாடிக்கையாளர்களுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது அமேசான் ப்ரைம் வீடியோ. உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் நெட்பிளிக்ஸால் கூட இந்தியாவில் அமேசானை ஓரம் கட்ட முடியவில்லை.

அதற்குக் காரணம் நெட்பிளிக்ஸின் சந்தாவை விட அமேசானின் சந்தா மிகவும் குறைவு. ஆண்டுக்கு 999 ரூபாய் வசூலித்து வந்த அமேசான் இப்போது தங்களுடைய ஆண்டு சந்தாவை 50 சதவீதம் உயர்த்தி டிசம்பர் 13 ஆம் தேதிக்குப் பிறகு 1499 ரூபாயாக உயர்த்தியுள்ளது.