அஜித் அடுத்தும் ஹெச் வினோத் இயக்கத்திலேயே ஒரு படத்தில் நடிக்க உள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக அஜித்- ஹெச் வினோத்- போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறது. இந்த படத்துக்கான திரைக்கதை வேலைகளை மேற்கொண்டு வருகிறார் ஹெச் வினோத். இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஜிப்ரான் பணியாற்ற உள்ளதாக சொல்லப்பட்டது.
இது சம்மந்தமாக ஜிப்ரான் அஜித்தை சந்தித்து பேசியதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது அந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த திடீர் மாற்றத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. அனிருத் அஜித்தின் முந்தைய வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.