தோழியை 2-வது திருமணம் செய்த அஜித், ரஜினி பட நாயகன்…

0
Follow on Google News

அஜித்தின் தம்பிக்கு 2-வது திருமணம்: தோழியை மணந்தார். தோழியை 2-வது திருமணம் செய்தார் நடிகர் பாலா டாக்டர் தோழியை மணந்தார் நடிகர் பாலா அஜித் பட நாயகனுக்கு 2-வது திருமணம்: தோழியை மணந்தார் தமிழில் ‘அன்பு’, ‘காதல் கிசுகிசு’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. அஜித்துடன் இவர் இணைந்து நடித்த ‘வீரம்’ படம் இவருக்கு தமிழில் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும் கூட. தற்போது சிறுத்தை சிவா ரஜினியை வைத்து இயக்கும் ‘அண்ணாத்த’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் பாலா நடித்து வருகிறார்.

கடந்த 2010-ம் ஆண்டு மலையாள பின்னணி பாடகி அம்ருதாவை காதல் திருமணம் செய்துகொண்ட பாலாவுக்கு, அவந்திகா என்ற மகள் உள்ளார். இதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு பாலாவுக்கும், அம்ருதாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில், தனது தோழியும், டாக்டருமான எலிசபெத் என்பவரை பாலா 2-வது திருமணம் செய்துள்ளார். இவர்களுடைய திருமண வரவேற்பு நேற்று திருச்சூரில் கோலாகலமாக நடந்தது. இதில் மலையாள திரையுலகை சேர்ந்த பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தனது 2-வது திருமணம் குறித்து பாலா கூறும்போது, எனது தோழியான டாக்டர் எலிசபெத்தை திருமணம் செய்துள்ளேன். அழகு என்பது மனதில் உள்ளது. எலிசபெத் என்னுடைய மனதை மாற்றிவிட்டார். நாங்கள் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எங்களுக்கு இடையே மதம் இல்லை. நான் தனிமையில் இருந்தபோது எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். பாலா தமிழில் மட்டுமில்லாது மலையாளத்தில், ‘லூசிபர்’ ‘புலிமுருகன்’ ‘புதிய முகம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.