திரிஷா குளியல் அறையில் கேமரா வைத்தது யார்.? மீண்டும் குட்டையை கிளப்பிய பிரபலம்…

0
Follow on Google News

தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருப்பவர் திரிஷா. அவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் 2, லியோ ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இதையடுத்து நடிகை திரிஷாவுக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது நடிகை திரிஷா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் தயாராகி வருகிறது. இதில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார் திரிஷா.

அதுமட்டுமின்றி நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார் திரிஷா. இப்படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இப்படத்தில் திரிஷா உடன் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்திற்காக நடிகை திரிஷா ரூ.12 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படி டாப் பார்மில் இருக்கும் திரிஷாவுக்கு மேலும் ஒரு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன்படி தெலுங்கில் புஷ்பா என்கிற மாஸ் ஹிட் படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்துள்ள நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தான் திரிஷா நடிக்க உள்ளாராம். நடிகை திரிஷாவுக்கு இதுதவிர பாலிவுட்டில் இருந்தும் பட வாய்ப்பு வருகிறதாம். அவர் சல்மான் கானுக்கு ஜோடியாக ஒரு இந்தி படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழ், தெலுங்கி, இந்தி என பான் இந்தியா நடிகையாக பிசியாக நடித்து வருகிறார் திரிஷா.

இந்நிலையில் வில்லன் நடிகர் மன்சூர் அலி கான் சமீபத்தில் த்ரிஷா பற்றி பேசி இருந்தது பெரிய சர்ச்சை ஆனது. “த்ரிஷா உடன் நடிக்கிறேன் என்றதும், நிச்சயமாக ஒரு பெட்ரூம் சீன் இருக்கும், குஷ்புவை மாதிரி கட்டிலில் தூக்கி போடலாம் என நினைத்தேன். 150 படத்தில் நான் பண்ணாத அட்டூழியமா. ஆனா காஷ்மீர்ல த்ரிஷாவை கண்ணுலயே காட்ட மாட்டேங்குறாங்க” என மன்சூர் பேசி இருந்தார். மன்சூர் அலி கானின் பேச்சுக்கு இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ், நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

மன்சூர் பேச்சை கேட்டு த்ரிஷாவும் கடும் கோபத்துடன் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். “மன்சூர் அலி கான் பேசிய ஒரு வீடியோ என் கவனத்திற்கு வந்தது. அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அது மிகவும் sexist, அவமரியாதையான, பெண்களுக்கு எதிரான, அருவருப்பான, மோசமான ஒரு பேச்சு. இவரை போன்ற மோசமான ஒருவருடன் நான் இதுவரை நடித்ததில்லை. இனிமேலும் அது என் கேரியரில் நடக்காமல் பார்த்துக்கொள்வேன். இவரை போன்றவர்கள் மனித குலத்திற்கே அவமானம் என த்ரிஷா பதிவிட்டு இருந்தார்.

இந்த விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், இதுகுறித்து வலைப்பேச்சு அந்தணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் பேசியதாவது “த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசியதற்கு விளக்கமளித்த மன்சூர் அலிகான் போய் பொழப்ப பாருங்க என்று சொல்லியிருக்கிறார். ஆனால் மன்சூர் அலிகான் அவரது பொழப்பை பார்த்திருந்தால் இந்தப் பிரச்னையே வந்திருக்காது. அவர் பேசியதை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது.