கூட்டோடு சிக்கிய திரிஷா – விஜய்… புட்டு புட்டு வைத்த பாடகி சுசித்ரா… விஜய் – திரிஷா இருவருக்கு உடல் பரிசோதனை…

0
Follow on Google News

பின்னணி பாடகி சுசித்ரா ட்விட்டர் பக்கத்தில் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபல நடிகர் மற்றும் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை கடந்த காலங்களில் வெளியிட்டு கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இதில் தனுஷ், திரிஷா, சிம்பு, ஆண்ட்ரியா என பல முக்கிய பிரமுகர்கள் இருந்ததனர். இந்நிலையில் சுசித்ரா, யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். சுசித்ரா கொடுத்த முதல் பேட்டியே மிகப்பெரிய அளவில் புயலை கிளப்பிய நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு இரண்டாவதாக ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.

அதில், கோலிவுட் சினிமாவில், வெள்ளித்தட்டில் கொக்கைன் போன்ற போதை மருந்து பார்ட்டி நடைபெறும். இந்த பார்ட்டியில் சிம்பு, வெங்கட் பிரபு மற்றும் யுவன் ஷங்கர் ராஜா போன்ற பல பணக்கார வீட்டு பிள்ளைகள் கலந்து கொள்வார்கள். அவர்களுக்கு முழுநேர வேலையே இதுதான். வெளியில் தன்னை நல்லவரை போல காட்டிக் கொள்ளும் விஜய்யின் வீட்டில் இதுபோல பல பார்ட்டிகளில் நடந்திருக்கிறது.

திரிஷாவும் இந்த கேங்கில் ஒருவர்தான், தனது பணக்கார நண்பர்களுடன் பெட் கட்டி, விஜய் வீட்டின் முன் குடித்துவிட்டு அவர் நடனமாடினார் என்று பல நடிகர்கள் குறித்து அடுக்கடுக்காக புகார் கூறினார். அத்துடன் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா மீது குற்றச்சாட்டை வைத்த அவர், நடிகர் கமல்ஹாசன் கொடுத்த சினிமா பார்ட்டிகளில் போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

அத்துடன் நடிகர் விஜய் நடத்திய கேளிக்கை நிகழ்ச்சியில் போதைப் பொருளான ‘கோக்கைன் ‘ பரிமாறப்பட்டு அவற்றை தனுஷ், த்ரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் அருந்தியதாகவும் பின்னணிப் பாடகி சுசித்ரா குற்றம்சாட்டியிருக்கிறார். அவரின் இந்த குற்றச்சாட்டுகள் திரைவட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் தான் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அவர் சமர்பித்துள்ள கோரிக்கை மனுவில் “பிரபல நடிகர்களான நடிகர் விஜய், தனுஷ் , ஆண்டிரியா , விஜய் யேசுதாஸ் மற்றும் சுசித்ராவின் முன்னாள் கணவரான் கார்த்திக் ஆகியோர் நடிகர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடிகை நடிகைகளுக்கு கொடிய போதைப் பொருளான கொக்கைன் பயன்படுத்தியதாக சுசித்ரா கூறியுள்ளார்.

ஆதாரம் இருப்பதால் தான் சுசித்ரா இந்த நடிகர் நடிகைகள் போதைப் பொருள் பயன்படுத்துவதாக வெளிப்படையாக பேசியிருக்கிறார். இளைஞர்கள் கஞ்சா அடித்தால் புகார் கொடுத்த உடனே காவல்துறையினர் வந்து அவர்களை பிடித்து சிறையில் அடைக்கிறார்கள். ஆனால் போதைப் பொருட்களைப் பற்றிய விளிப்புணர்வை ஏற்படுத்தும் இடத்தில் இருக்கும் சினிமா பிரபலங்கள் இப்படி செய்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

இதனால் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் பாடகி சுசித்ராவை விசாரணை மேற்கொள்ள வேண்டும். இன்று பல்வேறு போதைப் பொருட்களால் இளைஞர்களின் படிப்பும் வாழ்க்கையும் சீரழிந்து வருகிறது. சினிமா பிரபலங்கள் இப்படி போதைப் பொருட்களை பயன்படுத்தி அவர்களை காவல் துறை தண்டிக்காமல் விட்டால் இதனால் இளைஞர்கள் தாங்களும் போதைப் பொருட்களை பயன்படுத்த ஊக்குவிக்கப் படுவார்கள்.

இதனால் சுசித்ராவை விசாரணை செய்து எந்த நடிகைகள் , எந்த நடிகர் இந்த போதைப் பொருட்களை எந்த நிகழ்வுகளில் பயன்படுத்தினார்கள். பாடகி சுசித்ரா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நடிகர் நடிகைகளையும் கொக்கேன் பயன்படுத்தினரா என்று உடல் பரிசோதனை செய்து இவர்களுக்கு இந்தப் போதைப் பொருட்களை சப்ளை செய்த போதைப் பொருள் மாஃபியா கும்பல் யார் என்பதை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்” என்று வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.