சமூக வலைதளத்தின் மூலம் பலரும் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்மாஸ் போன்ற ஆப்கள் பெரும் மோகத்தை ஏற்படுத்தி இருந்தது, அதில் பெண்கள் சிலர் ஆபாசமாகவும் ஆண்கள் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த விடீயோக்கள் எந்த அளவுக்கு வரவேற்பு இருந்து வருகிறதோ அதே அளவுக்கு எதிப்பு உள்ளது.
அற்ப லைக்குக்கு ஆசைப்பட்டு இக்கால இளைஞர்கள் டிக் டாக் போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வந்தனர். அப்படி கவர்ச்சியான வீடியோகள் மூலம் டிக் டாக்கில் பிரபலமடைந்தவர் தான் இலக்கியா. சமீபத்தில் கூட தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஆசைக்கு இணைய வைத்து பின்னர் ஏமாற்றி விட்டதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் இலக்கியா.
இப்படி ஒரு நிலையில் டிக் டாக் இலக்கியா கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். அலெக்சாண்டர் ஆறுமுகம் என்ற அறிமுக இயக்குனர் எடுக்க உள்ள ‘நீ போடத்தான் வந்தியா’ என்ற படத்தில் இலக்கிய கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தில் கலக்கப்போவது யாரு புகழ் தீனா, ரஞ்சினி, அர்ச்சனா பிரியா என்று பலர் நடிக்கிறார்கள். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை போல ஒரு முரட்டு அடல்ட் காமெடி படமாக இந்த படம் உருவாக இருக்கிறதாம்.
இந்நிலையில் இலக்கியா தான் ஆரம்ப காலங்களில் செய்த வேலைகள் இவை தான் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “துபாயில் இரவு நேர விருந்துகளில் நடனம் ஆடுவதற்கு அழைத்துச் செல்வார்கள். அதற்கு முன்பு இரண்டு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுப்பார்கள். அதனை வாங்கிக் கொண்டுதான் துபாய்க்கு நாம் செல்வோம். அங்கு சென்று நமக்கு பிடிக்கவில்லை என்றால் உடனே வந்து விடலாம். ஆனால் இரண்டு லட்சத்தை திருப்பி கொடுத்து விட வேண்டும்.
இல்லையென்றால் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை நாம் சம்பாதிக்கும் வரை அங்கே இருந்து பணத்தை செட்டில் செய்து விட்டு திரும்பி வரலாம். பலர் துபாய் நைட் பார்ட்டிகளில் தவறு நடக்கும் என்று நினைக்கிறார்கள். அப்படிலாம் இல்லை. நாம் பாட்டுக்கு நடனம் ஆடினால் போதும். யாரும் எதும் செய்ய மாட்டார்கள். நாம் அனுமதித்தோம் என்றால் தான் எல்லாமே நடக்கும்.
நம்மை வற்புறுத்தையோ கட்டாயப் படுத்தியோ நம்மை எதும் செய்ய மாட்டார்கள். நாம் பயப்பட தேவையில்லை. ஆனால் நாம் முழு உடல் நலத்துடன் இருக்கிறோமா, நமக்கு ஏதேனும் நோய் இருக்கிறதா, என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்து அறிக்கை கொடுத்த பிறகு தான் நம்மால் இந்த வேலையில் சேரவே முடியும். இது எதற்காக என்றால் அவர்களுக்கு பாலியல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதேனும் இருந்தால் அது மற்றவர்களுக்கும் பரவி விடக்கூடாது என்று தான். என்று கூறியுள்ளார்.
மேலும், பேசிய அவர், நிறைய முறை நான் துபாய் சென்று இரவு நேர பார்ட்டுகளில் ஆடி இருக்கிறேன். இரண்டு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் வாங்குவேன். அங்கு சென்று ஒரு 5 லட்சம் 10 லட்சம் சம்பாதித்த பிறகு மீண்டும் இங்கே வந்து விடுவேன். மேலும் ஆடும் போது நம் மேல் பணம் போடுவார்கள். அதுவும் நம் சம்பளத்தில் தான் வரும். ஒரு நாளைக்கு ஐந்து முதல் பத்து பேர் போடுவார்கள்.
அந்த பணத்தை எல்லாம் எடுத்து நடனமாடுபவர்களுக்கு மற்றும் அந்த நிறுவனத்திற்கு என பங்கு செல்லும். அந்த வகையிலும் நம்மால் அந்த இரண்டு லட்சம் ரூபாய் டார்கெட்டை விரைவாக எட்ட முடியும். ஒரு வேலை 2 லட்சம் ரூபாய் டார்கெட் எட்டிய பிறகு போதும் விரும்பினால் திரும்பி வந்துவிடலாம் அல்லது நாம் ஆடலாம் என பேசியிருக்கிறார் டிக் டாக் இலக்கியா.