ஒரே ஒரு புகைப்படம்… லட்ச கணக்கில் சம்பாரிக்கும் திரிஷா…. அது என்ன புகைப்படம் தெரியுமா.?

0
Follow on Google News

பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் நடிகை சிம்ரனின் தோழியாக ஒரு சில காட்சிகளில்மட்டும் ஒரு ஓரமாக துணை நடிகையாக நடித்த திரிஷா, மௌனம் பேசியதே படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆரம்பத்தில் திரிஷா நடித்த படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை என்றாலும். அவர் நடிப்பில் வெளியான சாமி படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இந்த ஒரே படத்தில் உச்சத்திற்கு சென்றார் திரிஷா. தொடர்ந்து அடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த திரிஷா,தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் வலம் வந்தார். தமிழை விட தெலுங்கில் ரொம்ப பிசியாக இருந்த திரிஷா, ஒரு கட்டத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என அணைத்து மொழி சினிமாக்களிலும் தன்னுடைய மார்க்கெட்டை இழந்தார்.

நடிகை திரிஷாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குறைய தொடங்கி , தற்பொழுது தன் கைவசம் படம் இல்லாமல் தவித்து வருகிறார் திரிஷா. இதே போன்று நடிகை ஹன்சிகா, காஜல் அகர்வால் மற்றும் பல நடிகைகள் மார்க்கெட் இல்லாமல் இருந்து வருகின்றனர். ஆனால் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும் அவர்களுக்கான வருமானத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் த்ரிஷா, ஹன்சிகா, காஜல் அகர்வால் போன்ற மார்க்கெட் இழந்த நடிகைகள் இன்ஸ்டாகிராம் மூலம் வெளியிடப்படும் அவர்களின் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் 15 லட்சம் முதல் 25 லட்சம் வரை சம்பாதித்து வருவதாக தகவல் வெளியாகிறது. இதே போன்று முன்னனி நடிகைகள் இன்ஸ்டாகிராமில் அவர்கள் வெளியிடும் புகைப்படத்தின் மூலம் மாதம் 50 லட்சம் முதல் 1 கோடி வரை கூட சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் திரிஷா இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஒரு புகைப்படத்திற்கு மட்டும் அவருக்கு 15 லட்சம் இன்ஸ்டாகிராமில் இருந்து கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சினிமாவில் மார்க்கெட் இல்லையென்றாலும் வருமானத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பல நடிகைகள் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு சம்பாதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மானம், மரியாதை போச்சு… லெஜெண்ட் சரவணன் குடும்பத்தில் வெடித்த பிரச்சனை… என்ன பிரட்சனை தெரியுமா.?