அஜித் நடித்து வரும் துணிவு படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது, இந்த படம் வெளியான பின்பு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்திற்கு கதாநாயகிகள் கிடைக்காமல் அல்லல்பட்டு வருகிறது இயக்குனர் விக்னேஷ் சிவன்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் காத்து வாக்கில் இரண்டு காதல், இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்திருந்தார்கள், சமந்தா நடிக்கும் கதாபாத்திரத்தில் முதலில் நடிகை திரிஷா நடிப்பதாக இருந்தது. ஆனால் நயன்தாரா நடிக்கும் படத்தில் தான் நடிப்பதாக இருந்தால் அதில் நயன்தாரா பெயரின் அடைமொழியில் லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் இருக்கக் கூடாது, பேர் மட்டும் தான் இருக்க வேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளார் த்ரிஷா.
நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயர் டைட்டில் போட்டுவிட்டு, என்னுடைய பெயரை வெறும் பெயராக போடுவதால் இது என்னுடைய இமேஜை பாதிக்கும். அதனால் லேடி சூப்பர் ஸ்டார் என்கின்ற பட்டம் டைட்டிலில் இடம் பெறாமல் இருந்தால். நான் நடிக்க சம்மதம் தெரிவிக்கிறேன் என திரிஷா கேட்டுக்கொண்டார்.
அதற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருமே ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் காத்து வாக்கில் இரண்டு காதல் படத்தில் திரிஷாவுக்கு பதில் சமந்தா நடித்தார். இந்த நிலையில் சில வருடம் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி இருந்த திரிஷா, தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.
பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின்பு திரிஷாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் விஜய் நடிக்கும் புதிய படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார். அதே போன்று விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித் நடிக்கும் படத்தில் த்ரிஷாவை அஜித்துக்கு ஜோடியாக நடித்க சிபாரிசு செய்துள்ளது லைக்கா நிறுவனம்.
ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏற்கனவே காத்து வாக்கில் இரண்டு காதல் படத்தின் போது எங்களுக்கும் திரிஷாவுக்கும் பிரச்சனை உள்ளது. அதனால் அவர் இந்த படத்தில் கமிட்டானால் சரியாக இருக்காது என்று தயாரிப்பு நிறுவனத்தின் விக்னேஷ் தெரிவித்துள்ளார். ஆனால் தற்பொழுது வரை அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு சரியான கதாநாயகி கிடைக்காமல் இயக்குனர் விக்னேஷ் சிவன் தவித்து வருகிறார். இந்நிலையில் சுத்தி சுத்தி என்னிடம் தான் வர வேண்டும் என்று திரிஷா தனக்கு நெருக்கமானவர்களிடம் கெத்தாக பேசி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.