நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார், அண்ணாத்தே ஆகிய இரண்டு படங்களும் சரிவர போகவில்லை குறிப்பாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான அண்ணாத்தே திரைப்படம் எதிர்பார்த்த வசூலை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பெற்றுத் பெற்று தரவில்லை, இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அண்ணாத்தே படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்யும் வகையில் தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்ட ரஜினிகாந்த்.
மீண்டும் ஒரு படத்திற்கு கால் சீட் கொடுக்க முன்வந்தார். இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் ரஜினிகாந்த், மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.ஆனால் ஜெயில் படத்தின் அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியான பின்பு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து நெல்சன் ரஜினியை வைத்து இயக்கும் படமும் மிகப்பெரிய தோல்வியைத் தான் அடையும் என்கின்ற ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் குறைய தொடங்கியது. தொடர்ந்து ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பெரிதாக இல்லாமல் இருந்த நிலையில் ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடிய காவலா பாடல் வெளியான பின்பே இந்த படத்திற்கான ப்ரோமோஷன் மிகப்பெரிய அளவில் புரமோஷன் ஆக அமைந்தது.
தமன்னா ஆட்டம் போட்டு ரிலீஸ் ஆன காவலா ஒரு பாடல், ஜெயிலர் படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்று மிகப்பெரிய எதிரிபார்ப்பை மக்கள் மத்தியில் உருவாக்கியது. அந்த வகையில் காவலா பாடல் திரையரங்குகளுக்கு மக்களை வரவழைத்து கொண்டாட வைத்தது. இந்த நிலையில் நெல்சன் இயக்கிய கடைசி படம் தோல்வி அதன் பின்பு ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்தே தோல்வி, அதனால் ஜெயிலர் படம் நெல்சன்னுக்கு மட்டுமில்லை ரஜினிகாந்துக்கு முக்கிய படமாக பார்க்க பட்டது,
இந்த நிலையில் ஜெயிலர் படம் ரிலீஸாகி எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வசூலை வாரி குவித்ததை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அந்த படத்தில் நடித்த ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு விலை உயர்ந்த சொகுசு காரை நேரில் சென்று பரிசளித்தார்.
இந்த நிலையில் ஜெயிலர் படம் வெற்றி அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது தமன்னா ஆடிய அந்த ஒரு பாடல் தான், அந்த வகையில் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய தமன்னாவுக்கு தான் தயாரிப்பாளர் முதலில் கார் பரிசளித்திருக்க வேண்டும் என்கின்ற ஒரு விமர்சனம் எழுந்து வரும் நிலையில். இதுகுறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் தோல்வ, இதனால் ஜெயிலர் படத்தில் கமிட்டான தமன்னாவுக்கு பெரிதாக இந்த படம் வெற்றி அடையும் என்கின்ற நம்பிக்கை இல்லாமல் இருந்து வந்துள்ளார்.
தொடர்ந்து வெப் சீரியஸ் மற்றும் பிற மொழி படங்களில் நடித்து வந்த தமன்னா ஜெயிலர் படத்திற்கு ஒழுங்காக கால் சீட் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார், குறிப்பாக ரஜினி தமன்னா நடிக்கும் காட்சிகளில் ரஜினிகாந்த் படப்பிடிக்கு வந்து காத்திருந்தாலும், தமன்னா ஒழுங்காக வருவதில்லையாம், இப்படி ரஜினியவே உதாசீன படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளார் தமன்னா.
இதனால் ஒரு கட்டத்தில் தமன்னாவின் நடவடிக்கையால் கடும் அப்செட் ஆனா ரஜினிகாந்த் டென்ஷனும் ஆனதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமன்னா சொன்னது போன்று கால்ஷீட் கொடுக்காமல் மிக குறைந்த தேதியில் கால்சீட் கொடுத்ததால் தமன்னா நடிக்க வேண்டிய காட்சிகளை பெருமலவே சுருக்கி அந்த படத்தை நெல்சன் எடுத்துள்ளார்.
இந்நிலையில் எதிர்பார்க்காத அளவுக்கு ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்து வசூலை வாரி குவித்துள்ள நிலையில் தமன்னா ஒழுங்காக கால்சீட் கொடுக்காததால் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமல்ல தயாரிப்பாளரும் கடும் அப்சட்டில் இருந்து வந்ததாகவும் அதனால் தான் ஜெயிலர் படம் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது தமன்னா நடிப்பில் வெளியான காவால பாடல் என்றாலும் தமன்னாவுக்கு கார் பரிசு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.