தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த தமன்னா, இன்று வரை தமிழ் ரசிகர்களின் Favourite Heroine ஆகவே வலம் வருகிறார். என்னதான் இவர் மும்பையில் பிறந்து வளர்ந்து இருந்தாலும், தரமான பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து தமிழ் சினிமா தான் இவரை மேலே தூக்கி விட்டது. இதனாலேயே என்னதான் ஹிந்தியில் தற்போது பிஸியாக நடித்து வந்தாலும், அவ்வப்போது தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக சில வெயிட்டான கதாபாத்திரத்தை தேர்வு செய்து தமன்னா தமிழிலும் நடித்து வருகிறார்.
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நடிகை தமன்னா தான், தென்னிந்தியாவின் இரண்டாவது பணக்கார நடிகையாக இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 120 கோடியாக இருக்கிறது. மேலும், முன்னர் 1 படத்திற்கு, 2 கோடிக்கும் கம்மியாக சம்பளம் வாங்கிய தமன்னா, தற்போது 5 கோடி வரை தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். இப்படி 120 கோடி ரூபாய் அதிபதியாக இருக்கும் தமன்னா, மும்பையில் 20 கோடி மதிப்புள்ள வீடு மற்றும், ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பல இடங்களில், பல கோடி மதிப்புள்ள பிளாட்டும் வாங்கி இருக்கிறார்.

இது மட்டுமின்றி, MW 320i, Mercedes – Benz GLE, Mitsubishi Pajero போன்ற பிரம்மாண்டமான சொகுசு கார்களையும் வாங்கி கோடியில் புரண்டு கொண்டிருக்கிறார் தமன்னா. இந்த நிலையில் தொடர்ந்து பல சினிமாக்களில் நடித்து வந்த தமன்னா தற்பொழுது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் மிக நெருக்கமாக பொது இடங்களில் சுற்றி வருகிறார்.
லாஸ்ட் ஸ்டோரி என்கின்ற வெப் சீரியஸில் விஜய் வர்மா உடன் நடிகை தமன்னா ஜோடி சேர்ந்து நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் வர்மா மற்றும் தமன்னா இருவரும் மிக நெருக்கமாக பழகி வந்தனர். இந்த நெருக்கம் இருவருக்கும் காதலா மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் கொண்டாடிய வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வந்தது.
அந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியை முத்தங்களால் இருவரும் பகிர்ந்து கொண்டனர். இவர்களின் நெருக்கம் குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், ஒன்றாக பல நேரங்களில் ஒரே வீட்டில் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை தமன்னா குளிக்கும் போது தினமும் தான் என்ன செய்வேன் என்பதை கூச்சமே இல்லாமல் ஓப்பனாக பேசியது, ஓப்பனாக பேசலாம் அதுக்காக இப்படி வெளிப்படையாக பேசக்கூடாது என்று சொல்லும் வகையில் அவருடைய பேச்சு அமைத்துள்ளது. பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சமந்தா, நான் என் உடலை நேசிக்கிறேன் ஒவ்வொரு நாள் முடியும் போதும், நான் ஷவரில் குறிப்பேன் என தெரிவித்த தமன்னா.
அப்படி நான் ஷவரில் குளிக்கும்போது உடலின் ஒவ்வொரு பாகங்களையும் தொட்டு அதற்கு நன்றி சொல்வேன். இது கேட்பதற்கு சிறுபிள்ளைத்தனமாக இருக்கலாம். ஆனால் நான் தினமும் உழைப்பதற்கு உதவும் இந்த உடலை ஆராதிக்க நான் இப்படிதான் செய்வேன் என குளிக்கும் போது தன்னுடைய உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் தொட்டு நன்றி சொல்லுவேன் என நடிகை தமன்னா கூச்சமே இல்லாமல் ஓப்பனாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.