திரிஷாவுக்கு தமன்னா வெச்ச ஆப்பு… போச்சா சோனமுத்தா.. கொஞ்ச நஞ்ச அட்டமா ஆடுன..

0
Follow on Google News

கடந்த சில வருடங்களாக படவாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கி இருந்த நடிகை திரிஷா, பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார், முன்னணி நடிகர்களான அஜித், விஜய் இருவருடன் ஜோடி சேர்ந்து அடுத்தடுத்து வெற்றி பெறுவதன் மூலம் நயன்தாரா விட்டு சென்ற அந்த நம்பர் ஒன் இடத்தை பிடித்து விடலாம் என்கின்ற முயற்சியில் தற்பொழுது விஜய்யுடன் லியோ படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்.

இதில், லியோ படத்தில் நடிகர் விஜய்யின் சிபாரிசின் பேரிலேயே, திரிஷா கமிட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் விஜய்யின் 68வது படத்தில் மீண்டும் விஜய்யின் சிபாரிசில் திரிஷா இந்த படத்தில் இடம் பெறுவதற்கான முயற்சியில் திரிஷா ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதேபோன்று துணிவு படத்தை முடித்துவிட்டு விக்னேஷ் சிவன் இயக்க இருந்த அஜித் படத்தில் திரிஷாவை நடிக்க வைக்க அஜித் சிபாரிசு செய்துள்ளார், ஆனால் நயன்தாராவுக்கு – திரிஷாவுக்கு இருக்கும் சினிமா போட்டியில், திரிஷா சினிமா வளர்ச்சிக்கு நாமே இடம் கொடுத்து விட கூடாது என்பதால், திரிஷா வேண்டாம் என விக்னேஷ் சிவன் மறுத்து விட்டார், ஆனால் கடைசியில் விக்னேஷ் சிவனே அஜித் படத்தில் இருந்து வெளியேற்ற பட்டார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவனுக்கு பதில் அஜித் நடிக்க இருக்கும் படத்தில் மகிழ் திருமேனி கமிட்டாகி, விரைவில் தொடங்க இருக்கும் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிசா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியானது, அந்த வகையில் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் வீட்டிலே சில காலம் முடங்கி இருந்தாலும், மீண்டும் தற்பொழுது ரீ- என்ட்ரி கொடுத்துள்ள திரிஷாவுக்கான பட வாய்ப்புகள் பெரிதளவு குவிந்து வருவதால் நயன்தாரா விட்டு சென்ற இடத்தை பிடித்துவிடுவார் என்கிற நிலை உருவானது.

ஆனால், ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள காவலா பாடல் மூலம் உலக பேமஸ் ஆகியுள்ளார் தமன்னாவுக்கான சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது, இந்நிலையில் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடமாக அட்ரெஸ் இல்லாமல் இருந்து வந்த நடிகை தமன்னா, காவால பாடல் மூலம் ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் ரீ – என்ட்ரி கொடுக்கும் வகையில் ஓவர் நைட்டில் ஒபாமா ஆன கதையாக, தமன்னாவை உச்சத்திற்கு கொண்டு சென்று விட்டது காவலா பாடல்.

இந்நிலையில் இதற்கு முன்பு நயன்தாரா இடத்திற்கு போட்டி போட்டு கொண்டிருந்த திரிஷா, லியோ மற்றும் அஜித்துடன் விடாமுயற்சி ஆகிய படங்கள் வெளியான பின்பு கிட்ட தட்ட திரிஷா தான் இனி தமிழ் சினிமாவில் டாப் ஒன் நடிகையாக வலம் வருவார், அதற்கு அவரிடம் கால் சீட் வாங்கிவிட வேண்டும் என இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் திரிஷா உடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.

ஆனால் லியோ படம் வெளியான பின்பு புதிய படங்களில் கமிட்டானால் சம்பளத்தை அதிகரிக்கலாம், என கால் சீட் கேட்டு வந்த இயக்குனர் , தயாரிப்பாளர்களிடம் இழுத்தடித்து வந்துள்ளார் திரிஷா, இந்நிலையில் தற்பொழுது காவலா பாடல் வெளியான பின்பு, தமிழ் சினிமா ரசிகர்கள் தமன்னாவை தலையில் தூக்கி வைத்து கொண்டுவருவதை பார்த்து, இதற்கு முன்பு திர்ஷாவிடம் கால் சீட் கேட்டு சென்ற இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தமன்னாவை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளார்கள்.

குறிப்பாக அஜித் நடிக்க இருக்கும் விடா முயற்சி படத்திலும் தமன்னா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நயன்தாரா விட்டு சென்ற நம்பர் ஒன இடத்தை பிடிக்கும் கனவில் இருந்து வந்த திரிஷாவுக்கு மிக பெரிய சவாலாக வந்து அவருடைய கனவில் மண்ணை அள்ளிப்போடும் விதமாக அமைத்துள்ளது தமன்னா ஆட்டம் போட்டுள்ளா காவலா பாடல். மேலும் ஏற்கனவே தன்னை தேடி வந்து கால் சீட் கேட்டவர்களிடம், லியோ படம் வெளியான பின்பு கால் சீட் கொடுத்தால் சம்பளத்தை அதிகரிக்கலாம் என கால் சீட் கொடுக்காமல் திரிஷா இழுத்தடித்து வந்த நிலையில், தற்பொழுது அவர்கள் தமன்னாவை நோக்கி படையெடுத்துள்ளது, ஆய்யோ கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்கிற பரிதாபத்தில் உள்ளார் திரிஷா என்கிறது சினிமா வட்டாரங்கள்.