சமூக வலைத்தளத்தில் நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்ட நடிகர் ராகவா லாரன்ஸ் குறித்து அந்தரங்க தகவல் ஓன்று பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது, அதில் ஸ்ரீ ரெட்டி தனது சமூக வலைதளத்தில், ஹைதராபாத்தில் உள்ள கோல்கோண்டோ ஹோட்டலில் ஒரு நண்பர் மூலம் ராகவா லாரன்ஸை சந்தித்தேன். என்னை அவரது அறைக்கு அழைத்து சென்றார். அறையில் ராகவேந்திரா சாமி படத்தையும், ருத்திராட்ச மாலைகளையும் வைத்திருந்தார். அதைப் பார்த்து நான் வியப்படைந்தேன்.
ஏழ்மை நிலையில் இருந்து சினிமாவிற்கு வந்ததால், புதிதாக வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும், ஏழைகளுக்கு தங்குமிடம் உட்பட பல உதவிகளை செய்து வருவதாகவும் கூறினார். அதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டேன்.ஆனால், போக போக அவரின் உண்மையான முகம் எனக்கு தெரிந்தது. என் உடலின் வயிற்றுப்பகுதி உட்பட சில பகுதிகளை காட்ட சொன்னார். கண்ணாடி முன் நின்று ரொமாண்டிக்காக சில அசைவுகளை செய்ய சொன்னார்.
அதன்பின் படுக்கையில் தள்ளி என்னிடம் உறவு கொண்டார். கண்டிப்பாக எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். அதை நம்பி சில நாட்கள் அவருடன் நட்புடன் பழகினேன். ஆனால், எதுவும் செய்யவில்லை” என ஸ்ரீரெட்டி 2018ஆம் ஆண்டு வெளியிட்ட பதிவு ஓன்று தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது, இது குறித்து அப்போதே நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம் கொடுத்திருந்தார், அதில் ஸ்ரீ ரெட்டி நீங்கள் என்னை ரெபெல் படத் தயாரிப்பின்போது சந்தித்ததாகக் கூறினீர்கள். ரெபெல் படம் வந்து 7 வருடங்கள் ஆயிற்று. அப்படி நான் உங்களிடம் தவறாக நடந்திருந்தால் அப்போதே கூறாமல் ஏன் இப்போது கூற வேண்டும்.
அதிலும் ஒரு ஓட்டலில் நீங்கள் கூறியது போல நான் ராகவேந்திரர் ஃபோட்டோவும் ருத்ராக்ஷ மாலை வைத்திருந்ததாகவும் கூறியுள்ளீர்கள். ஒரு ஓட்டல் அறையில் ருத்ராச்ஷ மாலையை வைத்து பூஜை செய்ய நான் ஒன்று முட்டாள் இல்லை. நான் தவறு எதுவும் செய்யவில்லை. என் மீது அபாண்டமாகக் குற்றம் சுமத்துவது சரியல்ல. நீங்கள் என் மீது சும்மத்தும் பழி என்ன? நான் சினிமா சான்ஸ் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டேன் என்பது தானே? சரி. அப்படியானால், நான் ஊடகங்கள் அனைத்தையும் அழைத்து செய்தியாளர்கள் சந்திப்பு வைக்கிறேன்.
அங்கு உங்களுக்கு நடிக்க ஒரு சீன் தருகிறேன், ஆடுவதற்கு எளிமையான ஸ்டெப்ஸ் தருகிறேன். நீங்கள் உண்மையில் திறமை வாய்ந்தவர்கள் என்றால் அப்போதே உங்களுக்கு அட்வான்ஸ் அளித்து நடிகையாகத் தேர்வு செய்கிறேன். இல்லை எல்லோர் முன்பும் நடிக்கத் தயக்கமாக உள்ளது என்றால், உங்கள் மேனேஜர், உங்கள் தரப்பு வக்கீல் ஒருவரை அழைத்து வாருங்கள். அப்போது நடித்துக் காட்டவும். உங்கள் நடிப்பு பிடித்திருந்தால் வாய்ப்பு கிடைக்கும். நான் யாருக்கும் பயப்படவில்லை. நான் தவறு செய்யவில்லை எனவே தைரியமாக பேசுகிறேன். என்றும் நல்லதையே நினைப்போம் நல்லதையே செய்வோம். உங்கள் வாழ்க்கை மேம்பட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்று லாரன்ஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.